நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரவிருக்கும் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டது முதல் டீஸர், டிரைலர், ஆடியோ லாஞ்ச் வரை ஒவ்வொரு நிகழ்வையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதிலும் குறிப்பாக மதுரை நகரில் மட்டும் 22 திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் பல்வேறு கட்சிகளில் உள்ள கமல் ஹாசன் ரசிகர்கள் ஒருபக்கமும், மக்கள் நீதி மய்யத்தினர் மறுபக்கமும் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

"சகலகலா வல்லவன், காக்கிச்சட்டை, விக்ரம், புன்னகை மன்னன், அபூர்வ சகோதரர்கள், நாயகன் படம் வெளியானபோது எந்தளவு உற்சாகத்தில் இருந்தோமா அதே அளவு உற்சாகமாக இப்போது இருக்கிறோம்" என்று பூரித்தார் அமிர்தம் தியேட்டரில் பிளக்ஸ் கட்டிக்கொண்டிருந்த 60 வயதைக் கடந்தவர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பழங்காநத்தம் ஏபிஆர் ஜெயம் சினிமாஸில் கடந்த 29-ம் தேதியிருந்து விக்ரம் கொண்டாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். டீஸர், டிரைலர் நிகழ்ச்சிகளை திரையிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நம்மவர் தொழிற்சங்க நிர்வாகி சொக்கர், கமல் படத்தைக் காண விரும்பும் மூத்த ரசிகர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள், தொழிலாளர்களைத் தேர்வு செய்து நாளைய தினம் அவர்களுக்காக ஜெயம் சினிமாஸில் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சொக்கர், " நம்மவர் பட ரீலீஸின்போது எவ்வளவு பணம் செலவழித்தும் பார்க்கின்ற ரசிகர்கள் அதிகம் இருந்தாலும் டிக்கெட் எடுக்கும் சூழ்நிலையில் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டுமென்று முடிவெடுத்து ஒரு காட்சியை நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதற்காக மூத்த ரசிகர்கள், எளிய தொழிலாளர்களுக்கு விலையில்லா டிக்கெட்டுகளை வழங்குகிறோம்" என்றார்.