Published:Updated:

வலிமை வைரல் போஸ்டர்: "மனசு ரொம்ப வலிக்குது IT's Ok" - பின்னணி சொல்லும் கோவை ரசிகர்கள்!

வலிமை போஸ்டர்
News
வலிமை போஸ்டர்

போனி கபூரிடம் ட்விட்டரில் கேட்டு பார்த்து பதில் வராத நிலையில் அஜித் ரசிகர்கள் செய்த அட்டகாசங்கள் நாம் அறிந்ததே.

ஓமைக்ரான், டெல்டா கிரான் என அனுதினமும் வைரஸ் பற்றிய கவலையோடு மக்கள் இருக்கின்றனர். இந்தச் சூழலில் கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் அஜித் குமார் நடித்திருக்கும் வலிமை ரிலீஸ் படம் தள்ளிப்போயிருக்கிறது. அதற்காக அஜித் ரசிகர்கள் கோவையில் அடித்துள்ள போஸ்டர்தான் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. படம் தொடங்கியதிலிருந்தே #valimaiupdate என சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர் அஜித் ரசிகர்கள். போனி கபூரிடம் ட்விட்டரில் கேட்டு பார்த்து பதில் வராத நிலையில் அஜித் ரசிகர்கள் செய்த அட்டகாசங்கள் நாம் அறிந்ததே.

'வலிமை' அஜித்
'வலிமை' அஜித்

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நடந்தபோது தான் உண்டு தன் வேலை உண்டு என பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த மொயின் அலியிடம் வலிமை அப்டேட் கேட்டனர் சில குறும்புக்கார ரசிகர்கள். என்னவென புரியாமல் அலி கை அசைக்க அந்த வீடியோ வைரலானது. போதாததற்கு ரவிச்சந்திரன் அஸ்வினிடமும் இதே கேள்வியை முன்வைத்தனர். டெஸ்ட் மேட்சில் இப்படி என்றால் தேர்தல் களத்தையும் விட்டு வைக்கவில்லை. வாக்கு சேகரிக்க சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடியிடம் அப்டேட் கேட்டு அதிர வைத்தனர்.

சமீபத்தில் வலிமை டிரைலர் வெளிவந்தது. அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர் . படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி வைரலானது. இது எல்லாம் முடிந்து படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்றிருந்த நிலையில் பட ரிலீஸ் தேதி தள்ளி போனதாக அறிவிப்பு வெளியானது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரசிகர்களின் ரியாக்ஷன்:

கிட்டத்தட்ட 15 வருடமாக தீவிர அஜித் ரசிகராக இருக்கும் பிரீத்தன் சவுதி அரேபியாவில் வேலை பார்க்கிறார். இவரது சொந்த ஊரான கோவையில் இவர் ஐடியா கொடுத்து அடித்த போஸ்டர் தான் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அவரிடம் பேசினோம். "என்னை மாதிரி லட்சம் பேர் வலிமைக்காக காத்திருக்கோம். கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் வெயிட் பண்றோம். படம் தள்ளிப்போனது நெனச்சா ரொம்ப சங்கடமாகவும் வேதனையாகவும் இருக்கு" என்றார்.

வலிமை போஸ்டர்
வலிமை போஸ்டர்

"அஜித்தை திரையில் பார்ப்பது தான் எங்களுக்கு செலிப்ரேஷன். அது பொங்கலுக்கு நடக்காம போயிருச்சு" என சோகத்தை நம்மிடம் ஷேர் செய்தார். அஜித் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் எனக் கூறி உள்ளது பற்றி ப்ரீதனிடம் கேட்டோம். அதற்கு அவர், "அம்மாவ அம்மானு தான கூப்பிட முடியும் ? அப்பாவை அப்பான்னு தான கூப்பிட முடியம் ? அதுபோல அஜித் எங்களுக்கு எப்போமே தல தான். அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து வாயால் வேணா தலன்னு சொல்லாம இருப்போம். எங்க மனசுல அவரு என்னிக்கும் தல தான்" என்றார்!