Published:Updated:

Vikram: படக்குழுவுக்கு ரங்கோலியில் வாழ்த்து!-அருப்புக்கோட்டை ஓவியக் கலைஞரின் முயற்சி!

ரங்கோலி ஆர்டிஸ்ட்

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியிருக்கிற விக்ரம் திரைப்படம் வெற்றிபெறவும், படக்குழுவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தும் ஆஸ்கர் காளிமுத்து, விக்ரம் பட போஸ்டரை தத்ரூபமாக கோலப்பொடியில் ரங்கோலியாக வரைந்து தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

Vikram: படக்குழுவுக்கு ரங்கோலியில் வாழ்த்து!-அருப்புக்கோட்டை ஓவியக் கலைஞரின் முயற்சி!

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியிருக்கிற விக்ரம் திரைப்படம் வெற்றிபெறவும், படக்குழுவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தும் ஆஸ்கர் காளிமுத்து, விக்ரம் பட போஸ்டரை தத்ரூபமாக கோலப்பொடியில் ரங்கோலியாக வரைந்து தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

Published:Updated:
ரங்கோலி ஆர்டிஸ்ட்

அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் காளிமுத்து. ஸ்டுடியோ நடத்தி வருகிறார். திருமணமாகி மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள்‌ உள்ளனர். இவரை ஸ்டூடியோ காளிமுத்தாக பலருக்கும் தெரிந்திருப்பதை விட ரங்கோலி ஆர்டிஸ்ட் ஆஸ்கார் காளிமுத்தாகத் தான் பலருக்கும் தெரியும். இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியிருக்கிற விக்ரம் திரைப்படம் வெற்றிபெறவும், படக்குழுவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தும் ஆஸ்கர் காளிமுத்து, விக்ரம் பட போஸ்டரை தத்ரூபமாக கோலப்பொடியில் ரங்கோலியாக வரைந்து தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

ரங்கோலி கோலம்
ரங்கோலி கோலம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுதொடர்பாக காளிமுத்துவிடம் பேசினோம், "மனசுக்குப் பிடிச்ச விஷயங்களை ரங்கோலியா பண்றது எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதுக்கு முன்னாடி காமராஜர் பிறந்த நாளைக்கு அவர் உருவத்தை ரங்கோலி வரைஞ்சேன். இதுபோல இளையராஜா, பாலு மகேந்திராவையும் ரங்கோலி வரைந்து நேரடியாவே அவங்ககிட்ட வாழ்த்து பெற்றிருக்கிறேன். சிவாஜி கணேசன் சார் இறந்ததற்குப் பிறகான நாட்களில் அவருடைய உருவத்தை ரங்கோலி வரைந்து சிவாஜி கணேசன் குடும்பத்தார்கிட்ட பாராட்டு வாங்கிருக்கேன்.கடந்த சில வருடங்களாக எந்த விதமான ரங்கோலி பண்ணாம ஒதுங்கியிருந்தேன்.

ரங்கோலி ஆர்டிஸ்ட்
ரங்கோலி ஆர்டிஸ்ட்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில வருஷத்துக்கு பிறகு விக்ரம் படத்துக்குத்தான் ரங்கோலி போடணும்னு எனக்கு தோணுச்சு. எனக்கு பிடித்த மாதிரியான போஸ்டரைத் தேர்வு செஞ்சு கமல்ஹாசன் உருவத்த ரங்கோலி பண்ணிருக்கேன். காலையில 9.30 மணிக்கு ரங்கோலி பண்ண ஆரம்பிச்சேன். முடிக்கிறதுக்கு மாலை 5.30 ஆயிடுச்சு. இதுக்காக சுமார் 8 மணி நேரம் செலவு செஞ்சிருக்கேன். சாதாரணமா 12 மணி நேரம் கூட ஆகும். ரங்கோலயை காத்து இருக்கிற இடத்துல வரையமுடியாது.

கோலப்பொடி ரொம்ப மெல்லிசானது. வெள்ளைக் கோலப்பொடியை எடுத்து அதோடு 'ஸ்கின்' கலர் மிக்ஸ் பண்ணி ரங்கோலி வரைவேன். வியர்வை சிந்துனா கூட ரங்கோலி அழகு போய்டும். எனவே ரொம்ப உன்னிப்பா செய்ய வேண்டிய வேலை இது. ரொம்ப நாளைக்கு பிறகு விக்ரம் படத்துக்குதான் ரங்கோலி போடணும்னு தோணுச்சு. படமும் ரொம்ப அருமையா வந்திருக்கிறதா சொல்றாங்க. அதனால தனிப்பட்ட முறையில என்னோட வாழ்த்துக்களை தெரிவிக்க இத செஞ்சிருக்கேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism