Published:Updated:

“இது அஜித் ரசிகனின் ‘ஆசை’!”

ஆசை படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
ஆசை படத்தில்...

ஷைன் டாம் சாக்கோ ஒவ்வொரு படத்துலயும் வெரைட்டி காட்டி மிரட்டுவார். ‘இஷ்க்' படத்திலேயே அவருடைய கேரக்டர் பயங்கரமா இருக்கும்

“இது அஜித் ரசிகனின் ‘ஆசை’!”

ஷைன் டாம் சாக்கோ ஒவ்வொரு படத்துலயும் வெரைட்டி காட்டி மிரட்டுவார். ‘இஷ்க்' படத்திலேயே அவருடைய கேரக்டர் பயங்கரமா இருக்கும்

Published:Updated:
ஆசை படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
ஆசை படத்தில்...

மலையாளத்திலிருந்து ஏராளமான திரைப்படங்கள் தமிழில் ரீமேக்காகியிருக்கின்றன. இந்த வருடம் மட்டும் ‘அடி கப்யாரே கூட்டாமணி', ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்', ‘விக்ருதி', ‘ஜோசப்' என்று இதுவரை நான்கு படங்கள். இவற்றைத் தொடர்ந்து, ‘இஷ்க்' திரைப்படமும் தமிழில் ‘ஆசை' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

‘‘நான் ‘குளிர் 100' படத்துல அனிதா மேடம்கிட்டயும் ‘மரியான்' படத்துல பரத் பாலா சார்கிட்டயும் அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை செஞ்சேன். அதுக்குப் பிறகு, ஃபேன்டஸி ஹாரர் ஜானர்ல ‘ஜீரோ'ன்னு ஒரு படம் இயக்கினேன். அது 2016-ல வெளியாச்சு. அப்பவே ரெண்டாவது படத்துக்கு வேலையை ஆரம்பிச்சிட்டேன். அதற்கிடையிலதான், பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சார் என்னைக் கூப்பிட்டு ‘இஷ்க்' படத்தைப் பார்க்கச் சொன்னார். ரொம்பப் பிடிச்சிருந்தது. ‘இதை நீங்க தமிழ்ல பண்ணினா நல்லாருக்கும்'னு சொன்னார். நான் சம்மதிக்க முக்கிய காரணம், படத்தின் க்ளைமாக்ஸ். தமிழ்ல சூப்பரா வந்திருக்கு...’’ மகிழ்ச்சியாகப் பேசுகிறார் ஷிவ் மோஹா.

“இது அஜித் ரசிகனின் ‘ஆசை’!”
“இது அஜித் ரசிகனின் ‘ஆசை’!”

``கதிர், திவ்யபாரதி எப்படி இந்தப் படத்துக்குள்ள வந்தாங்க? இவங்கதான் முதல் சாய்ஸா?’’

‘‘ஹீரோ கேரக்டருக்குக் கதிர்தான் உடனே ஞாபகத்துக்கு வந்தார். ரொம்ப பிரமாதமா பண்ணியிருக்கார். முதல் பாதி பயந்த மாதிரி இருக்கணும். ரெண்டாம் பாதி நேரெதிரா இருக்கணும். ‘பேச்சுலர்' பார்த்தவுடனே, திவ்யபாரதிதான் சரியான சாய்ஸா இருப்பார்னு முடிவு பண்ணியாச்சு. சின்ன ஆடிஷன் பண்ணினோம். எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. அவங்களைப் பார்க்க அவ்ளோ ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தினமும் வந்திடுவாங்க. காத்திருந்து அவங்ககூட போட்டோ எடுத்துட்டுப் போவாங்க.’’

``மலையாளத்துல ஷைன் டாம் சாக்கோ, ஜாஃபர் இடுக்கி ரெண்டு பேருடைய கேரக்டரும் மிரட்டலா இருக்கும். அந்தக் கேரக்டர்கள்ல யார் நடிச்சிருக்காங்க?’’

‘‘ஷைன் டாம் சாக்கோ ஒவ்வொரு படத்துலயும் வெரைட்டி காட்டி மிரட்டுவார். ‘இஷ்க்' படத்திலேயே அவருடைய கேரக்டர் பயங்கரமா இருக்கும். அந்தக் கேரக்டருக்கு யாரை நடிக்க வைக்கலாம்னு பெரிய டிஸ்கஷன் நடந்தது. அது ரொம்ப சவாலான கேரக்டர். ‘சேதுபதி', ‘சிந்துபாத்' படங்கள்ல நடிச்ச லிங்காவை எடிட்டர் சுதர்சன் சொன்னார். ஆடிஷன்லயே மனுஷன் கலக்கிட்டார். ரொம்ப அண்டர் ரேட்டடான நடிகர். இதற்குப்பிறகு நிறைய வாய்ப்புகள் அவரைத் தேடி வரும். ஜாஃபர் இடுக்கி நடிச்ச கேரக்டருக்கு நிறைய பேரை ஆடிஷன் பண்ணினோம். என் அசோஸியேட் டைரக்டர் அலெக்ஸாண்டர் ஆடிஷன் வர்றவங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறதை ஒரு நாள் பார்த்தேன். சூப்பரா பண்ணினார். அவரையே நடிக்க வெச்சிட்டேன். பூர்ணா முக்கியமான ஒரு கேரக்டர் பண்ணியிருக்காங்க.’’

“இது அஜித் ரசிகனின் ‘ஆசை’!”
“இது அஜித் ரசிகனின் ‘ஆசை’!”

``நாம பார்த்து வியந்த ஒரு படத்தை ரீமேக் பண்றது எவ்வளவு சவாலா இருந்தது?’’

‘‘மிகப்பெரிய சவால். எல்லோருக்கும் பிடிச்ச சூப்பரான படம். முதல் பாதி முடியும்போது படம் பார்க்கிறவங்களுக்கே பயமா, பதற்றமா இருக்கும். ஒரு பேய்ப் படத்துல சவுண்டெல்லாம் போட்டு பயம் காட்டிடலாம். திரைக்கதையிலயும் நடிப்புலயும் பயம் கொடுக்கிறது கஷ்டம். அது சூப்பராவே வொர்க் ஆகியிருக்கு. அதுக்கு முக்கிய காரணம், நடிகர்கள். எல்லோருக்கும் நடிக்கிறதுக்கு முக்கியத்துவம் இருக்கிற படம். எல்லோருமே ஒரிஜினல் வெர்ஷன் பார்த்திருந்தாங்க. ஆனா, அதெல்லாம் மறக்கிற அளவிற்கு ரிகர்சல் பண்ணி, ஒரிஜினல் படத்துல இருந்து விலகியாச்சு. இப்போ இந்தப் படத்துக்கு வேறொரு முகம் கிடைச்சிருக்கு. ஒளிப்பதிவாளர் பாபு, எடிட்டர் சுதர்சன், கலை இயக்குநர் ராஜா மோகன்னு என் கூட ‘ஜீரோ'ல வொர்க் பண்ண அதே டெக்னீஷியன்கள்தான் இந்தப் படத்துக்கும். ஒரே மாற்றம் இசையமைப்பாளர். ரேவான்னு ஒரு பெண் இசையமைப்பாளர் இணைஞ்சிருக்காங்க. படத்துல ரெண்டு பாடல்கள் இருக்கு. பேக் கிரவுண்ட் ஸ்கோர்ல மிரட்டியிருக்காங்க.’’

ஷிவ் மோஹா
ஷிவ் மோஹா

`` ‘ஆசை'ங்கிற தலைப்புதான் உங்க முதல் சாய்ஸா?’

‘‘ஆரம்பத்தில் இருந்தே ‘ஆசை'ன்னு தலைப்பு இருக்கணும்னுதான் ஆசை. ஒரு சின்ன ஆசை எங்கே கொண்டுபோய் விடுது, எப்படியெல்லாம் படுத்தியெடுக்குதுங்கிறதுதான் கதை. அதனால, ‘ஆசை' சரியா இருக்கும்னு தோணுச்சு. தவிர, நான் அஜித் சாருடைய பெரிய ரசிகன். ‘ஆசை' படத் தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீராம் சார்கிட்ட டைட்டில் கேட்டவுடனே கொடுத்திட்டார். அவருக்கு இந்த நேரத்துல நன்றி சொல்லிக்கிறேன்.’’