Published:Updated:

Avatar : `நமஸ்தே இந்தியா....!' - ரசிகர்களுக்கு தகவல் சொன்ன அவதார் படத் தயாரிப்பாளரின் ட்வீட்!

'அவதார்- தி வே அஃப் வாட்டர்'

அவதார் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜான் லாண்டாவ், இந்திய ரசிகர்களுக்காகப் பதிவிட்ட ஸ்பெஷல் ட்வீட்.

Avatar : `நமஸ்தே இந்தியா....!' - ரசிகர்களுக்கு தகவல் சொன்ன அவதார் படத் தயாரிப்பாளரின் ட்வீட்!

அவதார் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜான் லாண்டாவ், இந்திய ரசிகர்களுக்காகப் பதிவிட்ட ஸ்பெஷல் ட்வீட்.

Published:Updated:
'அவதார்- தி வே அஃப் வாட்டர்'
2009-ஆம் ஆண்டு 1000 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட 'Sci-Fiction' திரைப்படம் 'அவதார்'. பிரபல ஹாலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதையடுத்து, இத்திரைப்படத்தை நான்கு பாகங்களாக வெளியிட்டத் திட்டமிட்டருந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் 'அவதார் - தி வே ஆஃப் வாட்டர்' 3டி தொழில்நுட்பத்துடன் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வரும் டிசம்பர் மாதம் 16-ம் தேதி வெளியாகவிருக்கிறது. மேலும், அவதாரின் அடுத்தடுத்த பாகங்கள் 2 ஆண்டுகள் இடைவெளியில் 2028 வரையில் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்திருந்தது.

ஜேம்ஸ் கேமரூன்
ஜேம்ஸ் கேமரூன்

இந்நிலையில், இதன் வெளியீட்டையொட்டி நேர்காணலில் கலந்து கொண்டு பேசிவரும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், "அவதார் இரண்டாம் பாகத்தின் 'பாக்ஸ் ஆபீஸ் (வசூல்) நிலைமையைப் வைத்துதான் அதன் மூன்றாம் மற்றும் நான்காம் பாகத்தை எடுப்பதா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க முடியும்" என்று கூறியிருந்தார். இது அவதார் பட ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியிருந்தது.

இதையடுத்து இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜான் லாண்டாவ், "நமஸ்தே இந்தியா! உங்கள் நாட்டின் பன்முகத் தன்மை என்னை வியக்க வைக்கிறது. 'அவதார்- தி வே அஃப் வாட்டர்' ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் வரும் டிசம்பர் 16ம் தேதி வெளியாகவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் பண்டோராவிற்குத் (Pandora) திரும்புதைக் கொண்டாடுவோம்" என்று பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.