Published:Updated:

`மீண்டும் சிவில் நீதிமன்றம் செல்லக் கூடாது!' - `பிகில்’ திரைப்படம் மீதான வழக்கு தள்ளுபடி!

பிரேம் குமார் எஸ்.கே.

`மீண்டும் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரக் கூடாது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்’ - உதவி இயக்குநர் செல்வா

Bigil
Bigil

`தெறி’, `மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் - இயக்குநர் அட்லீ கூட்டணி மீண்டும் `பிகில்' படத்தில் இணைந்துள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். நயன்தாரா இப்படத்தில் பிஸியோதெரப்பிஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்னும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigil First Look
Bigil First Look

பிகில், தீபாவளி பண்டிகையை டார்கெட் செய்துள்ள நிலையில், இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குநர் கே.பி.செல்வா என்பவர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கும் திரையிடலுக்கும் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை திரும்பப் பெறுவதாகவும், பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். வழக்கை திரும்பப் பெறுவதற்கு அனுமதி அளித்த நீதிமன்றம் மீண்டும் சிவில் கோர்ட்டில் இதே காரணத்துக்காக வழக்கு பதிய தடை விதித்தது. வழக்கை வாபஸ் பெற அனுமதி கிடைத்ததால், கதை திருட்டு வழக்கானது தள்ளுபடி ஆனது.

`மீண்டும் சிவில் நீதிமன்றம் செல்லக் கூடாது!' - `பிகில்’ திரைப்படம் மீதான வழக்கு தள்ளுபடி!

`பெரிய படங்கள் அனைத்துமே கதை திருட்டு என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகும் இக்காலத்தில், பெரிய படங்கள் மற்றும் பெரிய திரை நட்சத்திரங்களின் புகழ் வெளிச்சத்தில், கொஞ்ச நேரம் உலா வரத்துடிக்கும் அனைத்து விளம்பர பிரியர்களுக்கும் ஓர் எச்சரிக்கை மணியாக இந்த வழக்கின் முடிவு இருக்கிறது’ என மகிழ்ச்சி தெரிவித்துள்ளது பிகில் படத்தில் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம்.

`` ‘பிகில்’ல 100 நாள் விஜய் சார்க்கூட நடிச்சேன்; அடுத்து ‘பொன்னியின் செல்வன்'..!’’ - நடிகர் ஆத்மா

இந்த வழக்கு தள்ளுபடி தொடர்பாக செல்வாவிடம் பேசினோம். அவர், ``கதை திருட்டு வழக்கை உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருக்க வேண்டும். ஆனால், மாறாக சிவில் கோர்ட்டில் தொடுத்துவிட்டோம். மீண்டும் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரக் கூடாது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் உயர் நீதிமன்றம் செல்வேன். வழக்கு தொடர்வது தொடர்பாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நிச்சயம் தெரிவிப்பேன்” என்றார். இதன் மூலம் தற்காலிகமாக பிகில் படத்துக்கு எந்தச் சிக்கலும் இல்லை.