Published:Updated:

`விஜய் லைவ்வில் பாடுகிறார்!' - `பிகில்' விழாவுக்கு மாஸ்டர் ப்ளான்

'காப்பான்' ஆடியோ ஃபார்முலாவைத் தற்போது 'பிகில்' பட ஆடியோ விழாவிலும் அரங்கேற்றத் திட்டமிட்டுள்ளனர்.

விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான்

லைக்கா தயாரித்துள்ள 'காப்பான்', 'தர்பார்' படங்களின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி ஒன்று விலைக்கு வாங்கியிருக்கிறது. `` நடிகர் ரஜினியை `காப்பான்' ஆடியோ விழாவுக்கு வரவழையுங்கள்" என லைக்காவுக்கு ஆலோசனை கூறியதே பிரபல தனியார் தொலைக்காட்சிதான் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.

ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான்

நடிகர் விஜய் நடித்த 'பிகில்' படத்தின் சாட்டிலைட் உரிமையையும் பிரபல தொலைக்காட்சியே வாங்கியிருக்கிறது. 'காப்பான்' ஆடியோ ஃபார்முலாவைத் தற்போது 'பிகில்' பட ஆடியோ விழாவிலும் அரங்கேற்றத் திட்டமிட்டுள்ளனர். கடந்தமுறை ரஜினியைத் தேர்வு செய்ததைப் போல இம்முறை ஏ.ஆர்.ரஹ்மானை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடக்கும் 'பிகில்' ஆடியோ விழா மேடையில் ஏ. ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரி நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், 'பிகில்' படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களையும் பாட இருக்கின்றனர். அதில் ஒரு பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார். ஆடியோ ரிலீஸ் மேடையில், ரசிகர்கள் கரகோஷத்தின் மத்தியில் விஜய்யை மேடைக்கு அழைத்து அவர் பாடிய பாடலை பாடவைக்கவும் விழா குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.