Published:Updated:

`இதைச் செய்பவர்கள் வெட்கப்பட வேண்டும்!' - பாலிவுட் பிரபலங்களைச் சாடிய நவாஸுதீன்

Nawazuddin
News
Nawazuddin ( Twitter Image )

உலகமே கோவிட் பாதிப்பால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போது, தங்கள் விடுமுறை புகைப்படங்களை வெளியிடும் பிரபலங்களைச் சாடியுள்ளனர் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக்கும் பிரபல எழுத்தாளர் ஷோபா டேவும்.

``இப்படிச் செய்பவர்கள் வெட்கப்பட வேண்டும்" என்று சொல்லியிருக்கும் நவாஸுதீன், இன்னும் ஓரடி முன் சென்று, ``சாப்பாட்டுக்கே அல்லல்படும் மனிதர்களுக்கு நடுவே எங்களால் இப்படித் தண்ணீர்போல் பணத்தைச் செலவழிக்க இயலும் என்று காட்டுவது எவ்வளவு வெட்கக்கேடான செயல்?" என்றும் விளாசியுள்ளார்.

Disha Patani
Disha Patani

திஷா படானி, மாதுரி தீக்ஷித் போன்ற பல பிரபலங்கள் மாலத்தீவுக்கு தாங்கள் விடுமுறைக்குச் சென்று வந்ததைப் புகைப்படங்களுடன் வலைதளங்களில் பரவ விட்டிருக்கிறார்கள். இதுகுறித்து,``கொரோனாவால் தவிக்கும் பலருக்கு இவர்களின் பிகினி போட்டு மூடிய உடல்கள் நல்ல விருந்து'' என்று கேலி செய்திருக்கிறார் எழுத்தாளர் ஷோபா டே. மேலும், ``பெருந்தொற்றால் நாடே தத்தளித்துக்கொண்டிருக்கும்போது, இதைப்போன்ற அபத்தமான படங்களை வெளியிட்டு மகிழ்ச்சிகொள்வது மிகவும் அசிங்கமான சிந்தனை. அவர்கள் பணம்... அவர்களுடைய விடுமுறை... ஆனால், தயவுசெய்து இவற்றை அவர்கள் தனிப்பட்ட பார்வைக்கு, அந்தரங்கமாக வைத்துக்கொள்ளட்டும்" என்றும் கூறியுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொடர்ந்து, ``கொரோனா நோய்க்கு எதிராகப் பல உதவிகள் செய்துகொண்டிருக்கும் சோனு சூட் போல் அனைவரும் இருக்க முடியாது. விடுமுறை தளங்களைப் பிரபலப்படுத்தும் நோக்கத்தில், கோவிட் பாதிப்பில் அவதியுறும் மக்களைப்பற்றி எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் தங்கள் புகைப்படங்களை வெளியிடும் இவ்வாறான செயல்கள் சரியல்ல" என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்

ஆலியா பட், ரன்பீர் கபூர், மாதுரி தீக்ஷித் ஆகியோரின் மாலத் தீவு விடுமுறை பற்றியும், தியா மிர்சாவின் தேன்நிலவு பற்றியும் இதில் குறிப்பிட்டு, ``இவர்கள் தங்கள் விடுமுறைக்கான காரணங்களைச் சொல்லிச் சமாளிப்பது தேவையில்லாதது" என்றும் சொல்லியிருக்கிறார்.

ஆலியா பட்  Alia Bhatt
ஆலியா பட் Alia Bhatt

கொரோனாவின் இரண்டாவது அலை பாதிப்பில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கிறது இந்தியா. இதிலிருந்து மீள நமக்கு நாமே பாதுகாப்பு. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும். நாம் காரணம் இல்லாமல் வெளியில் நடமாடுவதைத் தவிர்ப்போம்.

- லதா ரகுநாதன்