Published:Updated:

"அவங்க புள்ளைக்கு அப்பான்னு என்னைக் கை காட்டுறாங்க‌!" துணை நடிகையை கோர்ட்டுக்கு இழுத்த தயாரிப்பாளர்

கோர்ட் ( சித்தரிப்புப் படம் )

"நிலைமை மோசமாப் போகுதேன்னு நான் போலீஸுக்குப் போனேன். புதுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன்ல அந்தப் பெண்ணின் குடும்பத்தைக் கூப்பிட்டு விசாரிச்சப்ப, 'இனிமே இந்த மாதிரி நடந்துக்க மாட்டேன்'னு எழுதிக் கொடுத்துட்டுப் போனாங்க. ஆனா..."

"அவங்க புள்ளைக்கு அப்பான்னு என்னைக் கை காட்டுறாங்க‌!" துணை நடிகையை கோர்ட்டுக்கு இழுத்த தயாரிப்பாளர்

"நிலைமை மோசமாப் போகுதேன்னு நான் போலீஸுக்குப் போனேன். புதுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன்ல அந்தப் பெண்ணின் குடும்பத்தைக் கூப்பிட்டு விசாரிச்சப்ப, 'இனிமே இந்த மாதிரி நடந்துக்க மாட்டேன்'னு எழுதிக் கொடுத்துட்டுப் போனாங்க. ஆனா..."

Published:Updated:
கோர்ட் ( சித்தரிப்புப் படம் )
துணை நடிகை ஒருவர் தன்னை அவரது கணவர் எனக் கூறி டார்ச்சர் செய்வதாக நீதிமன்றப் படி ஏறி இருக்கிறார் நடிகரும் சினிமாவுக்கு ஃபைனான்ஸ் செய்து வருபவருமான தாஜுதீன். என்ன விவகாரம்? அவரையே கேட்டோம்.

"எனக்குச் சொந்த ஊர் புதுக்கோட்டை. பிசினஸ் விஷயமா சென்னை, துபாய்னு போய் வந்திட்டிருக்கிறவன் நான். சினிமா தயாரிப்பாளர் சங்கத்துல உறுப்பினராகவும் இருக்கேன். சில படங்களுக்கு ஃபைனான்ஸ் பண்ணியிருக்கேன். சில படங்கள்ல நானே நடிக்கவும் செய்திருக்கேன்.

'திருப்பதி சாமி குடும்பம்'ம்கிற படம் என் நண்பர் தயாரிச்ச படம். அந்தப் படத்தின் ஷூட்டிங்கின் பொழுது, படத்துல நடிச்சிருக்கிற‌ ப்ரீத்தாங்கிறவங்க என்னைச் சந்திச்சாங்க.

சினிமா துணை நடிகைனு தன்னை அறிமுகப்படுத்திட்டு, 'நீங்க படம் எடுக்கறப்ப எனக்கு வாய்ப்புத் தாங்க'னு கேட்டாங்க. 'சரி'ன்னு சொல்லி வச்சேன். அப்ப என்னுடைய மொபைல் நம்பரையும் வாங்கிக்கிட்டாங்க. அப்பவே கணவர் மற்றும் குழந்தைகளுடன்தான் இருந்தாங்க அவங்க.

அப்பு கண்ணன்
துணை நடிகை யின் கணவர்
அப்பு கண்ணன் துணை நடிகை யின் கணவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சில மாசம் கழிச்சு எனக்கு அந்த பெண்ணுடைய கணவரிடமிருந்து போன் வந்தது. தங்களுடைய குழந்தைக்கு ஏதோ ஆபரேஷன்னு சினிமா ஆட்கள்கிட்ட இருந்து பண உதவி வாங்கித் தர முடியுமான்னு கேட்டாங்க 'என்னால முடியாது'னு சொல்லியும் விடாம போன் பண்ணிட்டிருந்தாங்க. அந்த நேரத்துல நான் துபாய்ல இருந்தேன்.

அப்பறம் 'மருத்துவச் செலவுக்குன்னு கேக்காங்களே'னு என் பணம் பதினைஞ்சாயிரம் அனுப்பி விட்டேன்.

சில மாசங்கள் கழிச்சு திரும்பவும் அந்தப் பெண்ணின் கணவரிடமிருந்து போன். எடுத்தா, 'என் மனைவி உங்களுடன் பேச விரும்பறாங்க'னு சொல்றார். 'எதுக்கு'ன்னு கேட்டதுக்கு,
அவங்களுக்கு ஒரு அத்தை பையன் இருந்ததாகவும் அவரையே கல்யாணம் செய்துக்க இருந்ததாகவும் ஆனா திடீர்னு அந்த அத்தை மகன் இறந்துட்டதால கடைசி நேரத்துலதான் தானே அவங்களைக் கட்டிக்கிட்டதாகவும் சொன்ன அந்தக் கணவர் அதுக்கு மேல சொன்னதெல்லாம் உண்மையா, இல்லை கதையாங்கிறது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதாவது, செத்துப் போன அவர் வீட்டம்மாவுடைய அத்தை பையன் சாயல்லயே நான் இருப்பதாகவும், அதனால என்னைப் பார்த்ததுல இருந்தே அந்தப் பெண் மன அழுத்தத்துக்கு ஆளான‌தாகவும் சொன்னார். ஒரு கட்டத்துல, 'எந்நேரமும் உங்க நினைப்பாகவே இருக்கா என் மனைவி. நீங்க அப்பப்ப பேசுங்க, இல்லாட்டி முழுப் பைத்தியம் ஆகிடுவா'ங்கிற ரேஞ்சுக்குப் பேசினார்.

'இதென்ன கதையா இருக்கே'னு 'இனிமேல் என்னைக் கூப்பிடாதீங்க'னு சொல்லி அவங்க நம்பரை பிளாக் செய்தேன். ஆனா வேற வேற நம்பர்ல இருந்து வரத் தொடங்கினாங்க.
தவிர, ஃபேஸ்புக்ல என் போட்டோவை எடுத்து 'இவர் என்னைக் கல்யாணம் செய்துக்கறேனு சொல்லி ஏமாத்திட்டார்'னு சோஷியல் மீடியாவுல போட ஆரம்பிச்சாங்க.

ப்ரீத்தா
ப்ரீத்தா

அதன் பிறகுதான் நிலைமை மோசமாப் போகுதேன்னு நான் போலீஸ்க்குப் போனேன். புதுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன்ல அந்தப் பெண்ணின் குடும்பத்தைக் கூப்பிட்டு விசாரிச்சப்ப, 'இனிமே இந்த மாதிரி நடந்துக்க மாட்டேன்'னு எழுதிக் கொடுத்துட்டுப் போனாங்க.

'தொல்லை விட்டுச்சு'னு நிம்மதியா இருந்தேன். ஒரு வருசம் பேசாம இருந்த அந்தக் குடும்பம் இப்ப மறுபடியும அதே வேலையைத் தொடங்கி இருக்குது. இப்ப என்ன காரணமோ தெரியலை, போலீஸுமே இந்த விவகாரத்துல மெத்தனமாகவே நடந்திக்கிடுறாங்க.

தயாரிப்பாளர் தாஜுதீன்
தயாரிப்பாளர் தாஜுதீன்

அதனால வேற வழி இல்லாமத்தான் நீதிமன்றத்துக்குப் போய் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவு வாங்கினேன்" என்கிறார் தாஜுதீன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism