Published:Updated:

`உலகின் அழகிய பெண்ணான ஐஸ்வர்யா ராயை இப்படியா ஸ்டைலிங் செய்வீங்க!'- உருகும் ஆடை வடிவமைப்பாளர்

ஐஸ்வர்யா ராயின் உடைக்கு டிசைனர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தாலும், 'எப்பவுமே எங்க ஐஸ் பியூட்டிதான்' என நெட்டிசன்கள் ட்விட்டரில் டிரெண்டு அடித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய்

வரலாற்றுச் சிறப்புமிக்க 'பொன்னியின் செல்வன்' நாவலைத் தழுவி திரைப்படம் எடுக்கிறார், இயக்குநர் மணிரத்னம். அவரது இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் உலக அழகி ஐஸ்வர்யா ராய். இப்படத்திற்காகத் தயாராகி வரும் அவர், சமீபத்தில் 'பாரிஸ் ஃபேஷன் வீக்' நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

Aishwarya Rai
Aishwarya Rai

1994-ம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்று, இந்தியர்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்த ஐஸ்வர்யா ராய், 45 வயதானபோதும் தனது அசத்தல் ஃபேஷன் லுக்கைத் தொடர்ந்து வருகிறார். இப்போதும் உலகின் முன்னணி ஃபேஷன் டிசைனர்கள் தேர்ந்தெடுக்கும் 'டாப் மாடலாக' உள்ள ஐஸ்வர்யா ராயின் ஃபேஷன் ஸ்டைலை விமர்சித்துள்ளார், பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளரான வெண்டல் ராட்ரிக்ஸ்.

ஐஸ்வர்யா ராய் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..!

சர்வதேச ஃபேஷன் நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்கும் ஒவ்வொரு முறையும், ட்விட்டரில் டிரெண்டு ஆவது வழக்கம். கற்பனை செய்ய முடியாத ஸ்டைலிஷ் ஃபேஷன் லுக்கில் கலக்கும் ஐஸ்வர்யா ராய், இம்முறை 'பாரிஸ் ஃபேஷன் வீக்'கில் லோரியலுக்காக ரேம்ப் செய்தார். ஹை நெக் கவுன், பஃப், லாங் ஸ்லீவ்ஸ், ஃப்ளோரல் டிசைன் என ஓர் அசிமிட்ரிகள் உடை அணிந்திருந்தார்.

Aishwarya Rai
Aishwarya Rai

"உலகின் மிக அழகிய பெண்களில் ஒருவரான ஐஸ்வர்யாவை இப்படித்தான் ஸ்டைலிங் செய்வீர்களா L'Oreal?'' என்று கேட்ட வெண்டல், மேலும் ஒரு படி சென்று, ''ஹாலோவின் விழா அடுத்த மாதம்தான் வருகிறது" என்று தொளதொள டைப்பில் இருந்த அந்த ஆடையைக் கிண்டல்செய்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Vikatan

ஸ்டைலிஸ்ட் கியாம்பட்டிஸ்டா டிசைன் செய்திருந்த ஐஸ்வர்யாவின் உடைக்கு, டிசைனர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தாலும் 'எப்பவுமே எங்க ஐஸ் பியூட்டிதான்' என நெட்டிசன்கள் ட்விட்டரில் டிரெண்டு அடித்துக் கொண்டிருக்கின்றனர்.