Published:Updated:

லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி: சர்ச்சையான ஷாருக் கானின் இறுதி மரியாதை... என்ன நடந்தது?

ஷாருக் கான்

நடிகர் ஷாருக்கான் மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய போது சிதை அருகில் துப்பியதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி: சர்ச்சையான ஷாருக் கானின் இறுதி மரியாதை... என்ன நடந்தது?

நடிகர் ஷாருக்கான் மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய போது சிதை அருகில் துப்பியதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

Published:Updated:
ஷாருக் கான்

பாலிவுட் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று காலை மறைந்தார். அவரது உடல் தாதர் சிவாஜி பார்க்கிற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. தாதரில் நடந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மனைவி ரேஷ்மி தாக்கரே, மகன் ஆதித்ய தாக்கரே, ஆளுநர் பகத்சிங் கொஷாரியா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராஜ்தாக்கரே, மும்பை மேயர் கிஷோரி, முன்னாள் முதல்வர் தேவேந்திரபட்நவிஸ், துணை முதல்வர் அஜித்பவார், அமைச்சர் சகன் புஜ்பால், எம்.பி.சுப்ரியா சுலே, சச்சின் தெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, நடிகர் ஷாருக்கான், அமீர் கான், ரன்பீர் கபூர், ஜாவேத் அக்தர், நடிகை ஸ்ரத்தா கபூர் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மறைந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சிதைக்கு தீ மூட்டப்பட்டது.
சிதைக்கு தீ மூட்டப்பட்டது.

முன்னதாக லதா மங்கேஷ்கர் உடல் அவரது இல்லத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. சாலை முழுவதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நின்று அஞ்சலி செலுத்தினர். லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் அஞ்சலி செலுத்திவிட்டு லதா மங்கேஷ்கர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அதோடு சமீபத்தில் ஆபரேஷன் செய்து கொண்ட மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயையும் சந்தித்து உடல்நலம் விசாரித்துவிட்டு விரைவில் குணமடைய வேண்டுவதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். தாதர் சிவாஜி பார்க்கிற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மும்பை மட்டுல்லாது பக்கத்து நகரத்திலிருந்தும் வந்திருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுமக்கள் தாதர் சிவாஜி பார்க்கில் நீண்ட வரிசையில் நின்று லதா மங்கேஷ்கருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பாதுகாப்புக்கு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர். லதா மங்கேஷ்கர் சிதைக்கு அவரது சகோதரன் ஹரிதயனாத் மங்கேஷ்கர் தீ மூட்டினார். லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தனது 80 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் பல்லாயிரம் பாடல்கள் வரை பாடியிருக்கும் லதா மங்கேஷ்கர் ஒரு முறை தனது பாடலால் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை கண் கலங்க வைத்தார். இந்தியா மற்றும் சீனா இடையே 1963ம் ஆண்டு போர் நடந்து கொண்டிருந்த போது லதா மங்கேஷ்கர் பிரதமர் ஜவஹர்லால் நேரு முன்னிலையில் ஏய் மேரே வதன் கே லோகன் என்ற பாடலை பாடினார். அப்பாடலை கேட்டு நேரு கண் கலங்கினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சர்ச்சை

நடிகர் ஷாருக்கான் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனது செயலாளர் பூஜாவுடன் வந்திருந்தார். லதாவின் உடலுக்கு ஷாருக்கான் அஞ்சலி செலுத்திவிட்டு சில நொடிகள் பிரார்த்தனை செய்தார். அவர் இஸ்லாமிய முறைப்படி இரு கரங்களையும் வேண்டி பிரார்த்தை செய்துவிட்டு, முககவசத்தை எடுத்துவிட்டு காற்றில் ஊதுவார். ஆனால் அவர் லதாவின் சிதை அருகில் எச்சில் துப்பியதாக அதற்கும் மதசாயம் பூசியுள்ளனர்.

ஷாருக்கான்
ஷாருக்கான்

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ஷாருக் கானை சிலர் விமர்சித்தனர். இப்படித்தான் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வீர்களா என்றும் இது என்ன கலாசாரம் என்றும் பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுக்கு மற்றொரு தரப்பின் ஷாருக் காற்றில் ஊதினாரே தவிர அப்படி செய்யவில்லை என பதில் தெரிவித்தனர். மகாராஷ்டிரா அரசு லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி இன்று அறிவிப்பதாக இருந்த நிதிக்கொள்கையை வேறு ஒரு தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது.