Published:Updated:

Rajini: impossible என்ற வார்த்தைக்கான அர்த்தத்தையே மாற்றியமைத்தவர் ரஜினிகாந்த் - தினேஷ் கார்த்திக்

ரஜினிகாந்த், தினேஷ் கார்த்திக்

கிரிக்கெட் நட்சத்திரமான தினேஷ் கார்த்திக், ரஜினியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஸ்கிரீன் ஷாட் ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

Rajini: impossible என்ற வார்த்தைக்கான அர்த்தத்தையே மாற்றியமைத்தவர் ரஜினிகாந்த் - தினேஷ் கார்த்திக்

கிரிக்கெட் நட்சத்திரமான தினேஷ் கார்த்திக், ரஜினியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஸ்கிரீன் ஷாட் ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

Published:Updated:
ரஜினிகாந்த், தினேஷ் கார்த்திக்

தமிழ் திரையுலகில் அபூர்வ ராகங்கள் தொடங்கி இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹாலிவுட் என நூற்றுக்கும் மேற்பட்டத் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டார் எனும் புகழுடன் வளம் வருபவர் ரஜினிகாந்த். இன்று 73வது பிறந்த நாள் காணும் அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை அவரது போயஸ் கார்டன் வீட்டின் முன் ரசிகர்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க ஆரவாரத்துடன் குவிந்திருந்தனர். ஆனால் ரஜினிகாந்த் சென்னையில் இல்லாத செய்தி அறிந்து அவரின் வீட்டின் முன் இனிப்புகள் வழங்கி ரஜினியின் பிறந்த நாளைக் கொண்டடினர்.

இதையடுத்து சமூகவலைதளப் பக்கங்களில் ரஜினிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அந்தவகையில் கமல்ஹாசன், "அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டிருந்தார். இதேபோல் விளையாட்டு வீரரான சச்சின் டெண்டுல்கர், "'சிட்டி', 'சிவாஜி: தி பாஸ்', 'தளபதி' போன்ற படங்களின் மூலம் அவரது நடிப்பால் ஈர்க்கப்பட்ட ரஜினியின் தீவிர ரசிகர்கள் நாங்கள். ரஜிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், அவர் மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் கிரிக்கெட் நட்சத்திரமான தினேஷ் கார்த்திக், இம்பாசிபில் (impossible) என்ற வார்த்தையின் விதிவிலக்காக ரஜினி இருக்கிறார் என்பது போன்று அர்த்தம் தரும் ஸ்கிரீன் ஷாட் ஒன்றைப் பகிர்ந்து, "இம்பாசிபில் (impossible) என்ற வார்த்தைக்கான அர்த்தத்தையே மாற்றியமைத்தவர் ரஜினிகாந்த். பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவா" என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர்; ரஜினி
ஜெயிலர்; ரஜினி

இதனிடையே, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விரைவில் திரைக்காணக் காத்திருக்கிற 'ஜெயிலர்' படத்தின், ரஜினியின் 'முத்துவேல் பாண்டியன்' எனும் காதாப்பாத்திரத்தின் போஸ்டர் கிளிப் இன்று மாலை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.