Published:Updated:

"நாம் இந்தியப் படங்களைத் தயாரிக்க வேண்டுமே தவிர, மொழிப் படங்களை அல்ல" - இயக்குநர் ராஜமௌலி

ராஜமௌலி

"நாங்கள் பாகுபலி, கேஜிஎஃப் போன்ற படங்களின் மூலம் தெற்கிலிருந்து வடக்கிற்குச் செல்ல ஆரம்பித்தோம்; 'பிரமாஸ்திரா' படத்தை ஆதரிப்பதற்கான காரணம் இதுதான்" -இயக்குநர் ராஜமௌலி.

"நாம் இந்தியப் படங்களைத் தயாரிக்க வேண்டுமே தவிர, மொழிப் படங்களை அல்ல" - இயக்குநர் ராஜமௌலி

"நாங்கள் பாகுபலி, கேஜிஎஃப் போன்ற படங்களின் மூலம் தெற்கிலிருந்து வடக்கிற்குச் செல்ல ஆரம்பித்தோம்; 'பிரமாஸ்திரா' படத்தை ஆதரிப்பதற்கான காரணம் இதுதான்" -இயக்குநர் ராஜமௌலி.

Published:Updated:
ராஜமௌலி

ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் வரும் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ள படம் 'பிரமாஸ்திரா'. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மெளனி ராய், நாகார்ஜுனா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீட்டையொட்டி படக்குழுவினர் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

ராஜமௌலி
ராஜமௌலி

இதனால் பலர் இயக்குநர் ராஜமௌலி இப்படத்தை ஆதரிப்பதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் வண்ணம் பேசிய ராஜமௌலி, "பிரம்மாஸ்திரா படத்திற்காக நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. நான் இப்படத்தைப் பற்றி பேசுவதற்கான உண்மையான காரணம் இயக்குநர் அயன் முகர்ஜியின் கதையும், அவரின் நல்ல நோக்கமும்தான். ஒரு நல்ல படம் உருவாகியுள்ளதால் அதன் வெற்றிக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று நினைக்கிறன். கே.ஜி.எஃப் படத்தை நான் முதன்முதலில் பார்த்தபோது படத்தின் தயாரிப்புப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது ஒரு நல்ல படம் என்றுதான் நினைத்தேன். எனவே அப்படம் குறித்து மக்களிடம் பேச ஆரம்பித்தேன்.

பிரம்மாஸ்திரா
பிரம்மாஸ்திரா

அதேபோல், 'பிரமாஸ்திரா' படமும் ஒரு நல்ல படம் என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் இப்படத்தை பற்றி பேச முடிவு செய்தேன். உலகெங்கிலும் உள்ள நாகரிகங்கள் அனைத்தும் நதிகளின் கரையில் உருவானவை. நாங்கள் பாகுபலி, கேஜிஎஃப் போன்ற படங்களின் மூலம் தெற்கிலிருந்து வடக்கிற்குச் செல்ல ஆரம்பித்தோம். இப்போது, அவர்களின் அன்பு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய ஆரம்பித்திருக்கிறது என்று நம்புகிறேன். நாம் அனைவரும் ஒரே நாடுதான், நாம் இந்தியப் படங்களைத் தயாரிக்க வேண்டுமே தவிர, மொழிப் படங்களை அல்ல” என்று கூறியுள்ளார்.