Published:Updated:

விஜய் படம் என்னால்தான் தாமதம்!... தனுஷுக்குக் கத்துக்கொடுத்த இளையராஜா... காளை வளர்க்கும் சூர்யா...

விஜய் சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
விஜய் சேதுபதி

‘` ‘விடுதலை’ நாங்க நினைச்சதைவிடவும் ரொம்ப சவாலான ஒரு சினிமாவா இருக்கு. ஏன்னா, காட்டுல எடுக்கிறோம். லைட்டிங் பற்றாக்குறை.

விஜய் படம் என்னால்தான் தாமதம்!... தனுஷுக்குக் கத்துக்கொடுத்த இளையராஜா... காளை வளர்க்கும் சூர்யா...

‘` ‘விடுதலை’ நாங்க நினைச்சதைவிடவும் ரொம்ப சவாலான ஒரு சினிமாவா இருக்கு. ஏன்னா, காட்டுல எடுக்கிறோம். லைட்டிங் பற்றாக்குறை.

Published:Updated:
விஜய் சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
விஜய் சேதுபதி
கோலிவுட்டில் கைநிறைய கமிட்மென்ட்டுகளோடு களத்தில் இருக்கும் இயக்குநர் வெற்றிமாறன். ‘விடுதலை’, ‘வாடிவாசல்’, ‘ராஜன் வகையறா’ என இவர் இயக்கவிருக்கும் சினிமாக்கள் ஒருபக்கம், திரைக்கதை எழுத்து ஒருபக்கம், விஜய்யுடன் கூட்டு சேரும் படத்துக்கான சஸ்பென்ஸ் ஒரு பக்கம் என எப்போதும் பரபரப்பிலேயே இருக்கிறார். வேடந்தாங்கல் அருகே கட்டியாம்பந்தல் கிராமத்தில் உள்ள அவரது விவசாய பூமியில் சந்தித்தேன்.

‘`போன வருஷம் இங்க வரும்போது தூயமல்லி நெல் பயிர் செஞ்சிருந்தீங்க. இப்ப எல்லாமே மாறியிருக்கே?’’

‘`இப்பவும் அதே தூயமல்லிதான். ஆனால், சாகுபடி முறையை மாத்தியிருக்கோம். சிஸ்டம் ஆஃப் ரைஸ் இன்டென்ஸிஃபிகேஷன் (SRI)... அதாவது திருந்திய நெல் சாகுபடி முறை. மடகாஸ்கர்ல ஒரு பாதிரியார்தான் இதை முதன்முதல்ல முயற்சி செஞ்சு பார்த்தவர். ஆந்திராவில் நாகரத்தினம் என்பவர் இந்த முறையில் வெற்றிகரமா பயிர்செஞ்சு நல்ல அறுவடை பண்ணியிருக்கார். ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தப்போ நாகரத்தினத்தோட விவசாய முறையை நேர்ல பார்த்துட்டுப் போயிருக்கார். இந்த SRI கான்செப்ட் பிடிச்சிருந்தது. அதனால, அதை இங்கே முயற்சி பண்ணிப் பார்க்கலாம்னு இறங்கிட்டோம். பொதுவா நாத்து வரிசையா நடுவாங்க. ஆனா, இதுல 6 அடி 6 அடியா பிரிச்சி, ஒரு நாத்துக்கும் இன்னொரு நாத்துக்கும் 1 அடி இடைவெளி விட்டு பண்றோம். இப்படிப் பண்றதால, நாற்றை நட்டதுமே வேர் பிடிக்க ஆரம்பிச்சிடும். தண்ணீர்த் தேவை அதிகம் இல்ல. ஆனா, இதை நடுவது, களை எடுப்பது எல்லாம் கொஞ்சம் சவாலானது. ‘விடுதலை’ ஷூட்டுக்கு நடுவுல ஒரு பிரேக் கிடைச்சது. உடனே இங்கே வந்து நடவு நட்டுட்டோம். இங்கே இந்த மெத்தட் எங்க எல்லோருக்குமே புதுசுன்றதால எல்லோருமே பழகுறதுக்கு சிரமப்பட்டோம்.’’

விஜய் படம் என்னால்தான் தாமதம்!... தனுஷுக்குக் கத்துக்கொடுத்த இளையராஜா... காளை வளர்க்கும் சூர்யா...
விஜய் படம் என்னால்தான் தாமதம்!... தனுஷுக்குக் கத்துக்கொடுத்த இளையராஜா... காளை வளர்க்கும் சூர்யா...

‘`சூரி, விஜய் சேதுபதியுடன் ‘விடுதலை.’ படம் எந்த நிலையில் இருக்கு?’’

‘` ‘விடுதலை’ நாங்க நினைச்சதைவிடவும் ரொம்ப சவாலான ஒரு சினிமாவா இருக்கு. ஏன்னா, காட்டுல எடுக்கிறோம். லைட்டிங் பற்றாக்குறை. அதனால பகல்லயே எல்லா ஷூட்டையும் எடுக்கிறோம். விஜய் சேதுபதி தன்னோட கேரக்டருக்காக முதல்ல எட்டுநாள் ஷூட்டுக்கு வந்தா போதும்னு நினைச்சேன். ஆனா, 25 நாள்கள் தேவைப்படறமாதிரி ஆயிடுச்சு. இப்ப இன்னும் 20 நாள் தேவைப்படுது. இன்னொரு பக்கம் சூரி இந்தப் படத்துக்காக டெடிகேட்டடா, கமிட்டடா நிறைய படங்கள் நடிக்காம காத்துட்டு இருக்கிறார். அதனால அவரையும் அவரோட படங்களை முடிச்சிட்டு வாங்கன்னு சொன்னோம். இவ்வளவு பெரிய புராஜெக்ட் நடக்க முக்கிய காரணம் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்தான்.’’

“ஜெயமோகனின் ‘துணைவன்' சிறுகதைதான் ‘விடுதலை’யா மாறியிருக்கா?’

“ ‘துணைவன்’ கதையில் வர்ற பாத்திரங்களை அடிப்படையா வெச்சுக் கதை பண்ணியிருக்கோம். ஷூட்டிங் இன்னும் முடியல. அதனால, படம் பற்றி நிறைய விஷயங்கள் பேசமுடியல. படம் முழுமையா முடிஞ்சதும் பேசுவோம்.’’

விஜய் படம் என்னால்தான் தாமதம்!... தனுஷுக்குக் கத்துக்கொடுத்த இளையராஜா... காளை வளர்க்கும் சூர்யா...
விஜய் படம் என்னால்தான் தாமதம்!... தனுஷுக்குக் கத்துக்கொடுத்த இளையராஜா... காளை வளர்க்கும் சூர்யா...

‘`இளையராஜாவுடன் முதல்முறையா சேர்ந்திருக்கீங்க.அந்த அனுபவம் எப்படியிருக்கு?’’

‘`முதல்ல அவரைச் சந்திக்கும்போது ‘விசாரணை’, ‘அசுரன்’ படம் பாருங்க சார்னு சொல்லி ஸ்கிரீன் பண்ணிக் காண்பிச்சேன். ‘விசாரணை’ வெனீஸ் வெர்ஷன் போட்டுக் காட்டினேன். அந்த ரெண்டு படங்களையும் பார்த்துட்டு ‘நீ எந்த மாதிரி ஃபிலிம் மேக்கர்னு தெரியுது. வொர்க் பண்ணலாம்’னு சொன்னார். அப்புறம் ‘விடுதலை’க்கான ட்யூன்ஸ் கொடுத்தார். முதல் ஷெட்யூல் முடிச்சிட்டு வந்ததும் எடுத்த காட்சிகளைக் போட்டுக்காட்டினேன். அவர் ஒரு லவ் ட்யூன் பண்ணியிருந்ததை வேண்டாம்னு சொல்லிட்டு, நேரா போய் பியானோல ப்ளே பண்ணினார். ‘இந்த ட்யூன் வெச்சிக்கலாம். இந்தப் பாட்டை நானே எழுதுறேன்’னு சொல்லி அவ்ளோ ஆர்வமா பண்ணினார். அதை வீடியோவாவே எடுத்து வெச்சிருக்கேன். இதுல தனுஷ் ஒரு பாட்டு பாடியிருக்கிறார். தனுஷுக்கு ராஜா சார் சொல்லிக்கொடுத்த விதம், அவர் பாடிக்காட்டினது எல்லாமே ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது. காலைல 11 மணியிலிருந்து சாயங்காலம் 3 மணி வரைக்கும் தனுஷுக்குச் சொல்லிக்கொடுத்துப் பாட வெச்சார். கொஞ்சம்கூட டயர்டாகல. அவருடைய அந்த இன்வால்வ்மென்ட், கமிட்மென்ட், எக்ஸைட்மென்ட் பார்த்துட்டு எங்களுக்கு அவ்ளோ இன்ஸ்பிரேஷனா இருந்தது. எல்லாப் பாடல்களும் நல்லா வந்திருக்கு.’’

‘` ‘வாடிவாசல்’ ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் ஒருபக்கம் நடந்துட்டிருக்கிறதா நிறைய செய்திகள் வருது. படத்துக்கான எதிர்பார்ப்பு கூடிட்டே இருக்கே?’’

‘`அந்த எதிர்பார்ப்புகளைப் பார்க்கும்போது எனக்கு கொஞ்சம் பயமாதான் இருக்கு. ‘வாடிவாசல்’ ரொம்ப எளிமையான கதை. கொஞ்சம் நாவலை ஒட்டியும் இருக்கும். மனிதனுக்கும் விலங்குக்குமான தொடர்பைப் படமாக்குறது ரொம்பவே சவால். காளை மாடுகள் புதுசா ஒருத்தரை உடனே நம்பாது. அதுகூட பழக ரொம்ப நாள் தேவைப்படுது. அதனால சூர்யா சார் ஒரு காளை மாட்டை வளர்த்து, பழக ஏற்பாடுகள் செஞ்சிருக்கோம். ஆனால், படத்துக்கு அது மட்டும் பத்தாது. நாம நினைக்கிற விஷயங்களை எல்லாம் பண்றதுக்கு நாம ஒரு காளையை உருவாக்க வேண்டியிருக்கு. அதுக்கு அனிமேட்ரானிக்ஸ் துணையும் வேணும். அதுக்கான வேலைகளும் இப்ப நடந்துட்டு இருக்கு. நிஜமும், அனிமேஷனும், அனிமேட்ரானிக்ஸும் சேர்ந்தாதான் நாம நினைச்ச ரிசல்ட்டைக் கொண்டுவரமுடியும்.’’

விஜய் படம் என்னால்தான் தாமதம்!... தனுஷுக்குக் கத்துக்கொடுத்த இளையராஜா... காளை வளர்க்கும் சூர்யா...
விஜய் படம் என்னால்தான் தாமதம்!... தனுஷுக்குக் கத்துக்கொடுத்த இளையராஜா... காளை வளர்க்கும் சூர்யா...

‘` ‘வாடிவாசல்' படம் நாவலை ஒட்டியும் இருக்கும்னு சொன்னீங்க… அப்படின்னா நீங்க கதையில் நிறைய விஷயங்களை மாத்தியிருக்கீங்களா?’’

“ ‘வாடிவாசல்’ நாவல்ல சில விஷயங்களைச் சொல்லாமல் கடந்துபோயிருக்காங்க. ஆனா, நாங்க ஸ்கிரிப்டா அந்த ஏரியாக்குள்ள போகும்போது அதைச் சொல்லாமல் கடந்து போக முடியல. கதை தமிழ்நாட்ல ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்திருக்கு. அது பொலிட்டிக்கலா தமிழ்நாடு பரபரப்பா இருந்த காலகட்டம். அந்த இளைஞர்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து இருந்தவர்கள். அதுபத்தின ரெஃபரன்ஸ் நாவல்ல இல்லை. ஆனால், அதைப் படத்துக்குள்ள கொண்டுவரணும்னு உழைக்கிறோம்.’’

‘`இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைச் சொல்றீங்களா?’’

“அந்தக்காலம்னு சொல்லும்போது அதை நீங்களே புரிஞ்சுக்க வேண்டியதுதான்’’ (சிரிக்கிறார்).

‘‘வாடிவாசல் படத்தில் இவர்களெல்லாம் நடிக்கிறார்கள் என ஒரு பெரிய லிஸ்ட்டே இணையத்தில் பரவுது. உண்மையில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்?’’

‘‘இப்போதைக்கு ரெண்டுபேர்தான் ஃபிக்ஸ் பண்ணியிருக்கோம். சூர்யா சார் லீடு கேரக்டர் பண்றார். இன்னொரு கேரக்டர் இயக்குநர் அமீர் பண்றார்.’’

விஜய் படம் என்னால்தான் தாமதம்!... தனுஷுக்குக் கத்துக்கொடுத்த இளையராஜா... காளை வளர்க்கும் சூர்யா...
விஜய் படம் என்னால்தான் தாமதம்!... தனுஷுக்குக் கத்துக்கொடுத்த இளையராஜா... காளை வளர்க்கும் சூர்யா...

‘`ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம், ‘ராஜன் வகையறா’ன்னு நிறைய படங்கள் உங்க பிலிமோகிராபில இருக்கே?’’

‘`நிறைய கமிட் பண்ணியிருக்கேன். அதெல்லாம் ஒன்னொன்னா பண்ணணும். லாரன்ஸ் படத்தை செந்தில்தான் டைரக்ட் பண்றார். நான் ஸ்கிரிப்ட் பண்றேன். ‘ராஜன் வகையறா’ ஒரு வெப்சீரிஸா பிளான் பண்ணிட்டிருக்கோம். ‘வடசென்னை’ படத்தோட முன்கதை. ராஜனோட 15 வயசுல இருந்து 20 வயசுவரைக்குமான வாழ்க்கைதான் கதை. கென் கருணாஸ் ராஜனா நடிக்கிறார். கரண் கார்க்கி இந்த வெப்சீரிஸை ஒரு நாவல் போல எழுதியிருக்கார். அவர் எழுதுற கேரக்டர்ஸை வெச்சி அதை நான் வொர்க் பண்ணணும். இது இல்லாமல் ZEE 5-க்கும் ஒரு வெப்சீரிஸ் பண்ணப்போறேன்.’’

‘`விஜய் படம் என்ன நிலையில் இருக்கு?’’

‘`என்னோட லைன் அப்தான் டிலே ஆகுது. விஜய் சார் தரப்புல ‘நீங்க முடிச்சிட்டு வாங்க’ன்னு சொல்லியிருக்காங்க. இன்னைக்கு இருக்கிற சூப்பர் ஸ்டார்ஸ்ல விஜய் சாரோட படம் பண்றதுக்கான வாய்ப்பிருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம். அதனால இப்ப இருக்கிற படங்களை முடிச்சிட்டு அவரோட படம் பண்றதுல ஆர்வமா இருக்கேன்.’’

‘`அற்புதம் அம்மாள் பத்தி ஒரு பயோபிக் பண்ணப் போறதா சொல்லியிருந்தீங்களே?’’

‘`ஆமா, ரொம்ப மும்முரமா அதுல வொர்க் பண்ணிட்டிருக்கேன். ஒரு தாயின் போராட்டம், நாட்டினுடைய வரலாறாவும் இருக்கு. 32 ஆண்டுகளா நடக்கிற ஒரு அம்மாவோட போராட்டத்தைக் காட்சிப்படுத்துறது ரொம்பவே சவாலானது. அதுக்கான வேலைகள் நடந்துட்டிருக்கு. அற்புதம் அம்மாளா நடிக்கப்போறவங்களைக்கூட முடிவு பண்ணி வெச்சிட்டேன். சீக்கிரம் சொல்றேன்.'’

‘‘கமல்ஹாசனை சமீபத்துல சந்திச்சிருந்தீங்க?”

‘‘படம் பண்றதுக்கான சூழல் இருக்கான்னு டிஸ்கஸ் பண்ற சந்திப்பாதான் அது இருந்தது. என்னோட வொர்க்கிங் ஸ்டைல் பத்திக் கேட்டார். ஸ்கிரிப்ட் எழுதாம ஷூட் பண்றதுனா, ஒரு ரிகர்சல் மாதிரி பண்ணிட்டு ஷூட்டிங்குக்குப் போலாமேன்னு சொன்னார். ஆமா சார், அது நல்ல முறைதான்னு சொன்னேன். அவரோட டிஸ்கஷன் போயிட்டிருக்கு.’’

விஜய் படம் என்னால்தான் தாமதம்!... தனுஷுக்குக் கத்துக்கொடுத்த இளையராஜா... காளை வளர்க்கும் சூர்யா...

‘‘சினிமாவைக் கற்றுக்கொடுக்க ஒரு கல்வி நிலையம் ஆரம்பிச்சிருக்கீங்க?’’

‘‘முன்னாடி அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்து படம் பண்ணுவாங்க. அப்புறம் குறும்படங்கள் எடுத்து அதன்மூலமா சினிமா இயக்குநரா மாறுவாங்க. ஆனா, இப்ப பிலிம் மேக்கிங் படிக்காம சினிமாக்குள்ள வரமுடியாதுன்னு ஒரு சூழல் உருவாக ஆரம்பிக்குது. ஆனா, அந்தக் கல்வியை எல்லோராலயும் பெரிய பணம்கட்டிப் படிக்க முடியல. அதனால, ஒரு சாரார் மட்டுமே படம் பண்ண முடியும், அவர்கள் மட்டுமே அவர்களின் வாழ்வியல் சார்ந்த கதைகள் சொல்லமுடியும்னு ஒரு சூழல் உருவாகுது. இந்த மண்ணைப் பற்றிச் சொல்லக்கூடியவர்கள் இன்னும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாத்தான் இருக்காங்க. அதுக்காகத்தான் இந்த இலவசக் கல்வி நிலையம். தமிழ்நாட்டுல ஒவ்வொரு மாவட்டத்துல இருந்தும் ஒருத்தர்னு 40 பேரை இந்த ஆண்டு தேர்ந்தெடுக்க இருக்கோம். நுழைவுத் தேர்வுகள் நடந்திருக்கு. ஃபாதர் ராஜநாயகம், இயக்குநர் அனுராக் காஷ்யப்னு முக்கியமானவர்கள் இந்த போர்ட்ல இருக்காங்க. ஏழ்மையான பின்னணியில் இருந்து வரக்கூடிய சினிமா ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு இது நல்ல பயிற்சிக்களமா இருக்கும்னு நம்புறோம்.’’