Published:Updated:

சினிமாவும் போலீஸும்: வெற்றிமாறன், வினோத், மிஷ்கின் Vs ரவி ஐ.பி.எஸ்

போலீஸ் சினிமாக்கள்
போலீஸ் சினிமாக்கள்

என் படங்களில் நான் அறத்தை மட்டுமே வலியுறுத்துவேன். சமூகத்தில் நல்ல மனிதர்கள், கெட்ட மனிதர்கள் என இரண்டுவகையான மனிதர்களும் இருக்கிறார்கள். என் படத்தில் மோசமான போலீஸ்காரர் நிச்சயம் தண்டிக்கப்படுவார்: மிஷ்கின்

இயக்குநர் வெற்றிமாறன்:

''தமிழ் சினிமா என்றில்லை... உலகம் முழுக்கவே எடுக்கப்படும் போலீஸ் படங்களில் லாக்கப் சித்திரவதைகள், என்கவுன்டர்களை நியாயப்படுத்தும் பழக்கம் இருக்கிறது. முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி, நீதித்துறை மூலமாகவே தண்டனை வாங்கித் தருவதுதான் காவல்துறையின் கடமை.

ஆனால், உடனடியாக நம்மைத் திருப்திப்படுத்தும் விஷயங்களை அவர்கள் செய்யும்போது பாராட்டத் தொடங்குகிறோம். அதனால்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கைகளை உடைப்பதிலிருந்து என்கவுன்டர் வரை நடக்கின்றன. கதாநாயகர்களுக்கு இதுபோன்ற காட்சிகளை திரைக்கதை ஆசிரியர்கள் எழுதவே கூடாது, அதேபோல் கதாநாயகர்களும் இதுபோன்ற காட்சிகளைத் தங்கள் படங்களில் வைக்கச்சொல்லிக் கேட்கக்கூடாது.”

இயக்குநர் வினோத்:

'' 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் இறுதியில் வரும் வாய்ஸ்ஓவர்தான் என்னோட கருத்து. அதிகாரத்துல இருக்கிறவங்களோட உயிருக்குக் கொடுக்குற அதே மரியாதையை காமன்மேனுக்கும் கொடுத்தா இவ்ளோ பேர் பாதிக்கப்படமாட்டாங்க. இது போலீஸ் டிபார்ட்மென்ட்டோட தப்பா, அதை வழிநடத்துற அதிகாரத்தோட தப்பா, இல்ல அவங்களை அதிகாரத்துக்குக் கொண்டுவந்த மக்களோட தப்பான்னு நிறைய கேள்விகள் விவாதிக்கப்படணும்.”

இயக்குநர் மிஷ்கின்:

''என் படங்களில் நான் அறத்தை மட்டுமே வலியுறுத்துவேன். சமூகத்தில் நல்ல மனிதர்கள், கெட்ட மனிதர்கள் என இரண்டுவகையான மனிதர்களும் இருக்கிறார்கள். என் படத்தில் மோசமான போலீஸ்காரர் நிச்சயம் தண்டிக்கப்படுவார். அதேபோல் நல்ல போலீஸுக்கான உரிய மரியாதையும் வழங்கப்படும். சாத்தான்குளத்தில் நடந்ததைப்போன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது.”

ரவி ஐ.பி.எஸ், சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி:

''போலீஸைப் பற்றிய அதீத மிகைப்படுத்துதல்கள்தான் சினிமாவில் இருக்கும். 'காக்க காக்க', முதல் 'விசாரணை' வரை எல்லாப்படங்களுமே இப்படித்தான். இந்தப்படங்களில் காட்டப்படுவதற்கும், உண்மைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

ஒருவர் காவல்துறைக்குள் வரும்போதே அவருக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களுக்கான அதிகாரங்கள் தெளிவுபடுத்தப்பட்ட பிறகுதான் பணிக்கு அனுப்பப்படுகிறார்கள். அதனால் சினிமாக்களைப் பார்த்து போலீஸ்காரர்கள் செயல்படுகிறார்கள் என்று சொல்வதில் உண்மையில்லை.''

- தமிழ் சினிமாவில் போலீஸ் காட்டப்படும் விதம், ரசிகர்களின் பார்வை உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அலசும் ஆனந்த விகடன் சிறப்புக் கட்டுரையை வாசிக்க க்ளிக் செய்க... > அத்துமீறலை ஆதரிக்கலாமா போலீஸ் சினிமாக்கள்? https://bit.ly/3iJ9Xzt

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

அத்துமீறலை ஆதரிக்கலாமா போலீஸ் சினிமாக்கள்?

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு