Published:Updated:

`` `எஞ்சாமி' பாக்கியம் அம்மாதான் ஒப்பாரிப் பாடல்களுக்கு முகவரி!"

கலைக்குழுவொன்றில் பாடி, ஆடும் பாக்கியம் அம்மாள்
கலைக்குழுவொன்றில் பாடி, ஆடும் பாக்கியம் அம்மாள்

``அவங்க ஒப்பாரி மட்டுமல்ல, அரிச்சந்திரா, நல்லதங்காள்னு புராணக்கதைகளையும் பாட்டா பாடுவாங்க. வரதட்சணை, மதுன்னு சமூகப் பிரச்னைகளுக்கு எதிராவும் அவங்களே இட்டுக்கட்டி பாடுவாங்க.’’

வைரல் ஆல்பம் `எஞ்சாயி எஞ்சாமி’ பாடலில் அறிவு மற்றும் தீயுடன் துள்ளாட்டமிடும் பாக்கியம் அம்மாவின் கிராமியக் களை சொட்டும் முகமும் அவர் உடுத்திக்கொண்டிருந்த அந்த பஞ்சு மிட்டாய் கலர் பட்டுப்புடவையும் இன்னமும் நம் கண்களுக்குள் இருக்கின்றன. அதற்குள், அவர் மறைந்துவிட்டார் என்கிற செய்தி நம் மனதைக் கலங்கடிக்கிறது. பாக்கியம் அம்மாவை `எஞ்சாயி’ குழுவுக்கு அறிமுகப்படுத்திய ஜே.கே.ஜெயக்குமாரிடம் பேசினோம்.

ஒப்பாரிப் பாடல்கள் புகழ் ‘பாக்கியம் அம்மாள்’
ஒப்பாரிப் பாடல்கள் புகழ் ‘பாக்கியம் அம்மாள்’
மதுர மக்கள்: ஓவியா, எஞ்சாயி எஞ்சாமி... லாக்டௌன் ஸ்ட்ரெஸ் போக்க பார்பிக்கு ஆடை வடிவமைக்கும் ஜெயஶ்ரீ!

``நானும் பாக்கியம் அம்மாவும் திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டத்தைச் சேர்ந்தவங்க. அதனால, என்னோட சின்ன வயசுல இருந்தே அவங்களை எனக்கு நல்லா தெரியும். கிட்டத்தட்ட 50 வருஷமா மரணங்கள்ல ஒப்பாரி பாடிட்டிருந்தாங்க. ஒப்பாரிப் பாடல்களுக்கு அவங்கதான் முகவரின்னே சொல்லலாம். நான் ஒப்பாரிப் பாடல்கள் பத்தி ஆராய்ச்சி செஞ்சுட்டிருக்கேன்.

அதோட `பேசு’ என்ற பெயர்ல கிராமியக் கலைக்குழுவையும் நடத்திக்கிட்டிருக்கேன். என்னோட குழுவுல அம்மா நிறைய பாடியிருக்காங்க. அவங்க ஒப்பாரி மட்டுமல்ல, அரிச்சந்திரா, நல்லதங்காள்னு புராணக்கதைகளையும் பாட்டா பாடுவாங்க. வரதட்சணை, மதுன்னு சமூகப்பிரச்னைகளுக்கு எதிராவும் அவங்களே இட்டுக்கட்டி பாடுவாங்க.

கலைக்குழுவொன்றில் பாடி, ஆடும் பாக்கியம் அம்மாள்
கலைக்குழுவொன்றில் பாடி, ஆடும் பாக்கியம் அம்மாள்

அவங்களுக்கு இப்போ கிட்டத்தட்ட 70 வயசு இருக்கும். அவங்க மகள்தான் அடிக்கடி அவங்களை வந்து பார்த்துட்டிருந்தாங்க. மத்தபடி, அவங்ககூடவே இருந்து பார்த்துக்க ஆளில்லை. ஜூலை 1-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ்ல அறிவோட சேர்ந்து அவங்க பாடறதா இருந்துச்சு. அதுக்காக ஜூன் 28-ம் தேதி போன் செஞ்சு கூப்பிட்டப்போ, ``இல்ல செல்லம். நாம் இப்போ வரலை. அப்புறம் வரேன்"னு சொன்னாங்க. அப்போகூட லேசா ஜலதோஷம்னுதான் சொன்னாங்க. 1-ம் தேதி காலையில அம்மாவோட மகள் எனக்கு போன் பண்ணி, ``அம்மாவுக்கு மூச்சுத்திணறலா இருக்கு''ன்னு சொன்னாங்க. கொஞ்ச நேரத்துல டாக்டர் வந்து பார்த்துட்டு இறந்துட்டதா சொல்லியிருக்கார். ஒப்பாரிக்கலை அவங்களை பேரும் புகழுமா வாழ வைக்க இருந்த நேரத்துல அவங்க இல்லைங்கிறது மனசை என்னவோ செய்யுது’’ என்கிறார் வருத்தமாக.

அடுத்த கட்டுரைக்கு