Published:Updated:

என் உடல் என் உரிமை! - ஷ்ருதி ஹாசன் ஓப்பன் டாக்

ஷ்ருதி ஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷ்ருதி ஹாசன்

நம்பிக்கை நட்சத்திரம்

ஷ்ருதிஹாசன் - அப்பாவைப் போலவே போல்டு அண்டு பியூட்டிஃபுல் ஆளுமை. ஒப்பனை யற்ற பேச்சால் எப்போதும் கவனம் ஈர்ப்பவர். சர்ச்சைகளுக்கு பயப்படாத வெளிப்படையான பேச்சு ஷ்ருதியின் யுஎஸ்பி.

‘`லாக்டௌன் ஆரம்பிச்சபோது மும்பையில இருந்தேன். பசுமையைக்கூடப் பார்க்க முடியாத அப்பார்ட்மென்ட் வாழ்க்கை பிடிக்காம, ஹைதராபாத் வந்தேன். எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்கிறதில்லைதான். ஆனாலும், பாசிட்டிவ்வாகவும் க்ரியேட்டிவ்வாகவும் நிறைய யோசிக்க ஆரம்பிச்சிருக்கேன்’’ - அப்டேட்ஸ் சொல்பவர் செம ஹேப்பி. காரணம், அவரது இசை முயற்சி ‘எட்ஜ்’.

‘`லண்டன்ல நிறைய பர்ஃபாமன்ஸ் கொடுத்திட்டிருந்தேன். பேண்டெமிக்ல எல்லாம் தடைப்பட்டுப்போச்சு. இப்பவும் லண்டன்ல உள்ள மியூசிக் புரொடியூசர்ஸ்கூட வொர்க் பண்ணிக்கிட்டிருக்கேன். ரெண்டே நாள்ல பாட்டு எழுதி அடுத்த வாரம் ரெக்கார்ட் பண்ணினேன். என் கிடார் பிளேயர் கரணும் நானும் புரொடியூஸ் பண்ணினோம். செல்போன்ல ஷூட் பண்ணி, நாலாவது வாரம் ரிலீஸ் பண்ணிட்டோம்.

என் உடல் என் உரிமை! - ஷ்ருதி ஹாசன் ஓப்பன் டாக்

சோஷியல் மீடியாவுல எல்லாரையும் ஜட்ஜ் பண்றதும் திட்டறதும் இன்னிக்கு ரொம்ப ஈஸியாயிடுச்சு. அந்த வகையில இந்த மியூசிக் இங்கிலீஷ்ல இருக்கிறதால நிறைய பேர் ரசிக்க மாட்டாங்கன்னு நினைச்சேன். எம்.எஸ்.வி சார், ராஜா சார் மியூசிக் கேட்டு வளர்ந்தவள்தான் நானும். ஆனாலும், அப்பா அளவுக்கு எனக்கு தமிழ்ல விளையாடத் தெரியாது. ரஹ்மான் சார் என் ஆல்பத்தை ஷேர் பண்ணதோடு, நிறைய என்கரேஜ் பண்ணார். மொத்தத்துல நான் எதிர்பார்த்ததைவிட செம ரெஸ்பான்ஸ்’’

- ஹேப்பினஸ் பகிர்பவருக்கு லாக்டௌன் பல விஷயங்களைக் கற்றுத் தந்திருக்கிறது.

‘`என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், ஃபிரெண்ட்ஸை மீட் பண்ணணும், யார்கிட்டயாவது பேசிக்கிட்டே இருக்கணும்... இப்படி நமக்கு ஏகப்பட்ட அழுத்தங்கள். தனியா இருக்கிறதுல சிலருக்கு பயம் இருக்கு. ஆனா, பல வருஷங்களா நான் தனியா வாழ்ந்து பழகினவள். சென்னை வந்தா அப்பாவை மீட் பண்ணுவேன். ஆனாலும், தனியாதான் இருப்பேன். தனிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும். தனியா இருந்தா போரடிக்கும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கு. உங்களுக்கு நீங்களே போரடிக்கிறீங்கன்னா, மத்தவங்களுக்கும் அப்படித்தானே இருப்பீங்க’’ - தனிமையில் இனிமை காண்பவர், தனியாளாக என்னவெல்லாம் செய்கிறார் தெரியுமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘`சமையல், வீட்டைச் சுத்தம் பண்றது, துணி துவைக்கிறதுனு எல்லா வேலைகளையும் நான்தான் பண்றேன். ‘செலிபிரிட்டீஸ் எல்லாம் பாத்திரம் தேய்ப்பாங்களா’னு யாராவது கேட்டா ஆச்சர்யமா இருக்கு. லண்டன்ல இருந்தவரை குப்பையை வெளியில கொண்டுபோய் கொட்டறதுவரை நான்தான் பண்ணியிருக்கேன். வீடு சுத்தமா இல்லைனா எனக்கு மூளை வேலை செய்யாது. லாக்டௌன் ஆரம்பிச்ச டைம்ல நிறைய பேர் என்கிட்ட பாத்திரம் கழுவற சேலஞ்ச்ல சேரச் சொல்லிக் கேட்டாங்க. பாத்திரம் கழுவறதும் வீட்டைப் பெருக்கிறதும் சேலஞ்ச் கிடையாது. வீட்டை சுத்தமா வெச்சிருக்கிறது உங்க பொறுப்பு. இப்படியே போனா பல்லு தேய்க்கிற சேலஞ்ச் வந்தாலும் ஆச்சர்யமில்லை’’

- வெளுத்து வாங்குபவரின் அடுத்த எதிர்பார்ப்பு ‘லாபம்’.

என் உடல் என் உரிமை! - ஷ்ருதி ஹாசன் ஓப்பன் டாக்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ஷ்ருதி நடித்துள்ள அந்தப் படத்தின் டிரெய்லரே மிரட்டுகிறது. ‘`மெயின் பிக்சர் வேற லெவல். நான் நடிச்சிருக்கிற க்ளாரா கேரக்டருக்காக எக்ஸைட்மென்ட்டோடு காத்துக்கிட்டிருக்கேன்’’ என்று எதிர்பார்ப்பு ஏற்றுகிறார்.

வாரிசு நடிகையிடம் அதைக் கேட்காமல் எப்படி... `நெப்போட்டிஸம்..?'

‘`ஹாலிவுட்டையும் சேர்த்து நான் நாலு இண்டஸ்ட்ரீஸ்ல வொர்க் பண்ணியிருக்கேன். மும்பைலதான் என் முதல் படம் ரிலீஸாச்சு. ஆனா, 11 வருஷங்களுக்குப் பிறகும் நான் சௌத் இந்தியன் நடிகைன்னு பெருமையா சொல்ல முடியும். இந்தி பட வாய்ப்பு வந்தா, அது பிடிச்சா நான் பண்ணுவேன். ஆனா, அது என் ஃபோகஸா எப்போதும் இருந்ததில்லை. நம்ம ஊர்ல யாரையும் ஈஸியா அக்ஸெப்ட் பண்றதில்லை. என்னை இன்னும் அக்ஸெப்ட்டே பண்ணலையோனுகூட நினைச்சிருக்கேன். `3' மாதிரி படம் பண்ணா ரசிக்கிறாங்க. இன்னொரு படம் சரியில்லைங்கிறாங்க. என்ன காரணம்னு தெரியலை. எங்கப்பா எனக்காக என்னிக்கும் யார்கிட்டயும் வாய்ப்பு கேட்டதில்லை. கேட்கவும் மாட்டார். அதனால நெப்போட்டிஸத்தின் பலன் பத்தி நான் யோசிச்சதுகூட இல்லை. 11 வருஷங்களா நான் இந்தத் துறையில நிற்கறேன்னா அது என் வேலையால மட்டும்தான். என்னால இங்கிலீஷ், இந்தி, தமிழ், தெலுங்குனு எல்லா மொழிகள்லயும் பேச முடியும். ஆனா, பாலிவுட்டுக்குப் போனா ‘உங்க இங்கிலீஷ் சௌத் இந்தியனா இருக்கு, நீங்க இட்லி, தோசைதானே சாப்பிடுவீங்க’ன்ற அவங்க கேள்வி எனக்குப் பிடிக்காது. ஆனா, இப்படிப் பல பிரச்னைகள் இருக்கு. எந்த லேங்வேஜா இருந்தாலும் சரி, வேலையைச் சரியா பண்ணலைன்னா வாய்ப்பு கிடைக்காது.’’

பாலிவுட்டில் தீபிகா படுகோன், மாலிவுட்டில் பார்வதி வரிசையில் மன அழுத்தம், ஆங்ஸைட்டி பற்றி வாய்திறந்த முதல் தமிழ் ஹீரோயின் ஷ்ருதி. பாடி ஷேமிங், பீரியட்ஸ் பெயின், பிளாஸ்டிக் சர்ஜரி எனப் பல விஷயங்களையும் பேச நிச்சயம் பெரிய தைரியம் வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`16, 17 வயசுல நான் இப்படியோர் இன்டர்வியூவை படிச் சிருந்தாலோ, எனக்குப் பிடிச்ச நடிகையோ, ஆளுமையோ இப்படிச் சொல்லியிருந்தாலோ இது ஒண்ணும் பெரிய விஷய மில்லைபோல... எல்லார் வாழ்க்கையிலும் எமோஷன்ஸ் வரும் போகும். அதைப் பத்திப் பேசறதுல தப்பில்லைனு எனக்குத் தெரிஞ்சிருக்கும். மத்தவங்க எப்படி கோபப்படாம, எல்லா சிச்சுவேஷனையும் பொறுமையா, அழகா ஹேண்டில் பண்றாங்க, என்னால முடியலை, நான் சரியா இல்லைனு நினைச்சுக்கிட்டிருந்தேன். நான் ரொம்ப எமோஷனல் பர்சன். இந்த உலகம் உணர்வுகளை வெளிப்படுத்தறதைவிடவும் அதை மறைக்கிறதைத்தான் விரும்பும்.

என் உடல் என் உரிமை! - ஷ்ருதி ஹாசன் ஓப்பன் டாக்

இப்ப எனக்கு 33 வயசாகுது. 30 வயசுலதான் அது ஆங்ஸைட்டி டிஸ்ஆர்டர்னு தெரிஞ்சது. மாத்திரை வேண்டாம்னு, ஹெல்தி லைஃப்ஸ்டைல் மூலமா ஆங்ஸைட்டிலேருந்து வெளியேவர நினைச்சேன், வந்தேன். என் அனுபவத்தைப் படிக்கிற ஒருத்தங்க, ‘ஓ இது அவ்வளவு பெரிய பிரச்னை இல்லை, இதுலேருந்து வெளியில வரலாம்’னு புரிஞ்சுப்பாங்க.

பாடி ஷேமிங்... பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பாடி ஷேமிங்க்கு உள்ளாகிறாங்க. குண்டா இருக்காங்களா, ஒல்லியா இருக்காங்களா, சர்ஜரி பண்ணியிருக்காங்களா, அதெல்லாம் அவங்களுடைய தனிப்பட்ட விஷயம். நான் இண்ட்ஸ்ட்ரிக்கு வந்தபோது ஒல்லியா இருக்கணும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனா, இன்னிக்கு நான் ஃபிட்டா இருக்கேன். வொர்க் அவுட் பண்றதுக்கு அழுவேன். ஆனா, வொர்க் அவுட் பண்ணதுக்குப் பிறகு வரும் அந்த பவர், அந்த வியர்வை, அந்த எனர்ஜி ரொம்பப் பிடிக்கும். என்னை யாரும் பாடி ஷேம் பண்ணிடக் கூடாதுனு வொர்க் அவுட் பண்றதில்லை, எனக்காகப் பண்றேன்.

சின்ன வயசுல நான் அப்பா, அம்மாகூட ஃபங்ஷன்ஸுக்கு வந்திருக்கேன். உங்க முன்னாடிதான் வளர்ந்திருக்கேன். நீங்க எல்லாரும் என் பழைய மூக்கைப் பார்த்திருக்கீங்க. இப்ப திடீர்னு என் மூக்கு வேற மாதிரி மாறினா கண்டுபிடிக்க மாட்டீங்களா? சின்ன வயசுல மூக்குல ரெண்டு தடவை அடிபட்டது, எனக்கும் என் மூக்கைப் பார்க்கப் பிடிக்கலை. பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணணும்னு முடிவு பண்ணினேன். அது என் உடம்பு, என் உரிமை. யார்கிட்டயும் கருத்து கேட்க வேண்டிய தேவையோ பதில் சொல்ல வேண்டிய அவசியமோ இல்லை.

பீரியட்ஸ் பிரச்னையைப் பத்திப் பேச ஆரம்பிச்சதன் பின்னாலும் என் அனுபவமும் வலியும் இருக்கு. நடிகைகளான எங்களுக்கும் அந்த வலியும் வேதனையும் இருக்கும்தானே. ஸொமேட்டோவில் முதன்முறையா பீரியட் லீவு அறிவிச்சிருக்காங்க. அமெரிக்காவில் நடிகைகளின் கான்ட்ராக்ட்லயே பீரியட்ஸ் டேட்ஸ்ல அவங்களுக்கு ஸ்டன்ட் சீன் வைக்காதீங்கனு இருக்கு.

பீரியட்ஸ் டைம்ல வேலை பார்க்கிறதே கஷ்டம். அதுல அழகா இருக்கணும், ஆடணும், ஸ்டன்ட் பண்ணணும்னெல்லாம் எதிர்பார்க்கிறது ரொம்ப கஷ்டம். நானும் இவையெல்லாத்தையும் பண்ணியிருக்கேன்.

சின்ன வயசுல நான் வீட்லயும் என் டாக்டர்கிட்டயும் மட்டும் இதைப் பத்திப் பேசியிருக்கேன். கொஞ்சம் வயசானதும் என் ஃபிரெண்ட்ஸ்கிட்ட பேசும்போது புரிய ஆரம்பிச்சது. பீரியட்ஸ் பிரச்னையைப் பத்தி நான் பேச ஆரம்பிச்சதும் எனக்கு அத்தனை ரெஸ்பான்ஸ். எனக்கு பிசிஓடி பிரச்னை இருக்கு. ட்ரீட்மென்ட் எடுத்திட்டிருக்கேன். எக்சர்சைஸ், யோகா, நேச்சுரல் வைட்டமின்கள் ஓரளவுக்கு உதவும். மத்தபடி இதுக்கு நிரந்தரத் தீர்வு இல்லை. ஆரோக்கியமான லைஃப்ஸ்டைல் மட்டும்தான் ஒரே வழி’’ பல விஷயங்களைப் பகிரும் ஷ்ருதி, அடுத்த கேள்விக்கும் அதே துணிச்சலோடு பதிலளித்தார்.

‘ஆல்கஹால் பழக்கத்திலிருந்து வெளியே வந்துட்டதா ஒரு பேட்டியில சொன்னீங்களாமே..?’

‘‘நான் சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டாங்க. 2020-ல இருக்கோம். எதுக்கெடுத்தாலும் குடிக்கற நிலை இன்னிக்கு இருக்கு. நம்ம கலாசாரத்துக்குள்ளே அது ரொம்ப ஈஸியா வந்திருச்சு. எனக்கு அது வேண்டாம்னு முடிவெடுத்தேன். சினிமால ஆல்கஹாலை ரொம்ப குளோரிஃபை பண்றாங்க. குடிச்சாதான் பாட்டும் டான்ஸும் வரும், குடிச்சாதான் ஹார்ட் பிரேக்லேருந்து வெளிய வர முடியும். குடிச்சாதான் செலிபிரேட் பண்ண முடியும்னு நினைக்கிறாங்க. அப்படிக் கிடையாது. குடி இல்லாமலும் கொண்டாடலாம்னு சொல்றேன்.’’

`அப்புறம்?'

‘என் ஃபேமிலியை மிஸ் பண்றேன். எல்லாரும் தனித்தனியா இருக்கோம். ஆனாலும், தேங்க்ஸ் டு டெக்னாலஜி. எல்லார்கிட்டயும் பேசற மாதிரிதான் இருக்கு. லாக்டௌன்ல இன்னும் என் ஃபேமிலியை மீட் பண்ணலை. இந்த நிலைமை சீக்கிரம் சரியாகணும். சினிமால உள்ள தினக்கூலிகளோட வாழ்க்கை ரொம்ப பரிதாபமா இருக்கு. இயல்பு வாழ்க்கை திரும்பி எல்லாம் சரியாகி, அவங்களுக்கெல்லாம் நல்லது நடக்கணும்ங்கிறது மட்டும்தான் இப்போதைக்கு ஒரே ப்ரேயர்.’’

ப்ரே பண்ணுவோம்!