Published:Updated:

நடிப்பு செட் ஆகலை, பிசினஸ்ல பெஸ்ட் ஆகணும்! - நடிகை ஸ்ருதிகா

நடிகை ஸ்ருதிகா
பிரீமியம் ஸ்டோரி
நடிகை ஸ்ருதிகா

மாற்று வழி

நடிப்பு செட் ஆகலை, பிசினஸ்ல பெஸ்ட் ஆகணும்! - நடிகை ஸ்ருதிகா

மாற்று வழி

Published:Updated:
நடிகை ஸ்ருதிகா
பிரீமியம் ஸ்டோரி
நடிகை ஸ்ருதிகா

மிழ் சினிமா வில் ‘வசந்த சேனா’வாக 2002-ல் என்ட்ரி கொடுத்த ஸ்ருதிகா, காலஞ் சென்ற குணச்சித்திர நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி. முதல் படம் ‘ஸ்ரீ’யில் நடிகர் சூர்யாவின் ஜோடி. அடுத்து ‘ஆல்பம்’, ‘தித்திக்குதே’, ‘நளதமயந்தி’ படங்களில் தலைகாட்டியவர், திடீரென காணாமல் போனார். இப்போது ‘ஹேப்பி ஹெர்ப்ஸ்' (Haappy Herbs) என்ற பெயரில் மூலிகை அழகு சாதனப்பொருள்களை விற்பனை செய்து வருபவரைச் சந்தித்தோம்.

‘`நான் டென்த் படிக்கிறப்போ ‘ஸ்ரீ’ பட வாய்ப்பு கிடைச்சது. தாத்தா நடிகராயிருந்தாலும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் நடிகையாகுறதுல கொஞ்சம்கூட விருப்பமே இல்ல. நான் அழுது, அடம் பிடிச்சு, அம்மாகிட்ட அடிவாங்கின பிறகுதான் அப்பா எனக்காகப் பேசி, அம்மாகிட்ட பர்மிஷன் வாங்கிக் கொடுத்தார். நடிக்க வர்றதுக்கு முன்னாடி ஐ லைனர்கூட போடக்கூட அம்மா எனக்கு அனுமதி கொடுத்ததில்லை. மேக்கப் சென்ஸ், காஸ்ட்யூம் சென்ஸ் எதுவுமே தெரியாமதான் நடிக்க வந்தேன். நடிக்கவும் தெரியாம டைரக்டர்கிட்ட திட்டு வாங்கிட்டே இருப்பேன். நமக்கு சினிமா செட்டே ஆகாதுன்னு முடிவு பண்ணிட்டு மறுபடியும் படிக்கப்போயிட்டேன்’’ - ஃப்ளாஷ்பேக் சொல்லும் ஸ்ருதிகா, படிப்பில் கோல்டு மெடலிஸ்ட்.

‘`படிப்பு முடிஞ்சதும் அர்ஜுனுக்கும் எனக்கும் கல்யாணம். வீட்டைச் சுத்தமா வெச்சுக்கிறதுக்கும் என் பையன் ஆரவ்வை கவனிச்சுக்கிறதுக்குமே எனக்கு நேரம் சரியா இருந்துச்சு.

நடிகை ஸ்ருதிகா
நடிகை ஸ்ருதிகா

என் மாமனார்தான் ‘பிசினஸ் மேனேஜ்மென்ட் படிச்ச பொண்ணு இப்படி வீட்டைத் துடைச்சுகிட்டு உட்கார்ந்துட்டு இருக்கியே. ஏதாவது செய்மா’ன்னு சொல்லிட்டே இருப்பாரு. என் பையனை ஸ்கூல்ல விடப் போறபோது மத்த அம்மாக்கள் எல்லாம் ‘உங்க ஸ்கின் ரொம்ப அழகா இருக்கு. நீங்க என்ன யூஸ் பண்றீங்க’ன்னு கேட்க ஆரம்பிச்சாங்க. எனக்கு ரொம்ப சென்சிட்டிவ் ஸ்கின். அதனால எனக்கான ஃபேஸ்பேக்கை நானே வீட்ல தாயரிச்சுப்பேன். அதை அவங்களுக்கும் சொல்ல ஆரம்பிச் சேன். அவங்களோட பாசிட்டிவ் ஃபீட்பேக்கை கேட்டதும், இதையே பிசினஸா செய்யலாம்னு முடிவு செஞ்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல்ல சருமத்துக்கான ரெண்டு அழகு சாதனங்களை மட்டும் தயாரிச்சேன். நான் சரும மருத்துவம் படிக்கலைங் கிறதால, இதுதொடர்பா படிச்சவங்களை வேலைக்கு வெச்சு, நான் தயாரிச்ச அழகு சாதனப்பொருள்களை செக் பண்ணேன். அதுல ஓகேவானதும் முறைப்படி அப்ரூவல் வாங்கினேன். அந்த க்ரீம்களைத் தொடர்ந்து எங்க குடும்பத்துல உள்ள எல்லாரும் யூஸ் பண்ணிட்டு திருப்தியான பிறகுதான் எல்லோருக்கும் கொடுத்தேன். இப்படி வாய்வழி விளம்பரம் மூலமாதான் பிசினஸ் வளர ஆரம்பிச்சது’’ என்பவர், தற்போது மூலிகைகள் கலந்த ஐந்துவிதமான அழகு சாதனங் களை விற்பனை செய்கிறார்.

``ஒவ்வொரு தயாரிப்பையும் எங்க ஃபேமிலியில யூஸ் பண்ணிப் பார்க்கிறப்போ, ரெண்டு பேருக்கு திருப்தி யில்லைன்னாலும், அதை டிராப் பண்ணிடுவேன். இதனால, ஒரு தயாரிப்புக்கும் இன்னொரு தயாரிப்புக்கும் நடுவுல பெரிய இடைவெளி விழுந்துடும். கடந்த ரெண்டு வருஷத்துல நான் வெறும் அஞ்சு அழகுசாதனப் பொருள் களை மட்டும்தான் விற்பனை பண்ணிட்டிருக்கேன். பிசினஸ்ல நல்ல பெயர் வாங்குறது கஷ்டம். அப்படி வாங்கின பெயரை கடைசி வரைக்கும் காப்பாத்தறது ரொம்ப கஷ்டம். பிசினஸ்ல தி பெஸ்ட்டுனு பேர் வாங்கணும்’’ - ஆம்பிஷனோடு காத்திருப்பவருக்கு ‘ஆல் தி பெஸ்ட்’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism