Published:Updated:

"விஜய் எனக்கு அண்ணன் மாதிரி!"

எங்க குடும்பத்துக்கு அவர் அண்ணன் மாதிரி.

பிரீமியம் ஸ்டோரி

டன இயக்குநர் ஷோபியின் மனைவி லலிதாவும் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடன இயக்குநர். விஜய்யின் ஃபேவரிட் டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவர். அமேசானில் சென்ற வாரம் வெளியான ‘சூஃபியும் சுஜாதாயும்’ படத்தில் பணிபுரிந்ததில் உற்சாகமாக இருக்கிறார்.

“இந்தப் படத்துல அதிதி ராவ் கதக் டான்ஸர். நிறைய வொர்க் பண்ணினோம். ஆனா படத்தில் குறைவாத்தான் இருக்கும். காதலை மியூசிக்கலா சொல்லணும்னு சொல்லி, பாடலையும் ஒரு சீன் மாதிரியே கம்போஸ் பண்ணச் சொன்னார் இயக்குநர். டான்ஸ் ஆடியே ஆகணும்னு இல்லாமல் கதைக்கு ஏத்த மாதிரி ரொம்பவே யதார்த்தமா இருக்கும். அதிதிக்கு கதக்ல எந்த மூவ்மென்ட் செட்டாகுது, ஆகலைன்னு தெரிஞ்சுகிட்டு அதுக்குத் தகுந்த மாதிரி சொல்லிக்கொடுக்கிறதுதான் என்னுடைய சவால். அவங்க பரதநாட்டிய டான்ஸர்ங்கிறதனால கதக்கை ரொம்ப ஈஸியா கத்துக்கிட்டாங்க.”

லலிதா
லலிதா

‘`தமிழ், தெலுங்கு, மலையாளம்னு மூணு மொழிப் படங்களுக்கும் டான்ஸ் பண்ணுறீங்க... மாநிலத்துக்குத் தகுந்த மாதிரி மூவ்மென்ட்ஸை மாத்துவீங்களா?’’

“ஒவ்வொரு மொழி ரசிகர்களும் ஒவ்வொரு ரசனையில் இருப்பாங்க. தெலுங்குல ரொம்ப ஹெவி மூவ்மென்ட் போட்டு ஆடணும். இப்போ அந்த மாதிரி டான்ஸ்ல கிரியேட்டிவிட்டியும் கலந்து வொர்க் பண்ணுறாங்க. கிட்டத்தட்ட தமிழ்நாட்டு ஃப்ளேவர் இருக்கும். ஆனா, மலையாள சினிமா அப்படியில்லை. எதார்த்தமா இருக்கணும், எந்தக் காரணம் கொண்டும் சினிமாத்தனம் இருக்கக்கூடாதுன்னு ரொம்ப கவனமா இருப்பாங்க. ஒவ்வொரு படமும் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அவங்க வொர்க் எல்லாம் பார்த்துட்டுப் போறதனால அந்தந்த ரசனைக்குப் பொருந்திக்கிறோம்னு நினைக்கிறேன்.”

"விஜய் எனக்கு அண்ணன் மாதிரி!"

‘`விஜய் உங்களைப் பற்றி நிறைய இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். விஜய் உங்களுக்கு எவ்வளவு ஸ்பெஷல்?’’

“எங்க கல்யாணத்துக்கு விஜய் சாரால வரமுடியலை. ‘தலைவா’ ஷூட்டிங்ல மும்பையில இருந்தார். அதனால அவர் அம்மாவையும் மனைவியையும் அனுப்பி வெச்சார். ‘பத்து முறை போன் பண்ணி இன்னும் கிளைம்பலையா, சீக்கிரம் போங்க போங்கன்னு எங்களைக் கேட்டுக்கிட்டே இருந்தாரும்மா. அதனால, ரெண்டு பேருமே வந்துட்டோம்’னு சொன்னாங்க. ஷூட்டிங் முடிஞ்சி மும்பையில இருந்து வந்தவுடன் எங்களுக்கு அவர் வீட்ல விருந்து கொடுத்தார். அதே மாதிரி, என் சீமந்தத்திற்கு என் அண்ணன் மாதிரி நிறைய பழங்கள் வாங்கிட்டு வந்தார். எங்க குடும்பத்துக்கு அவர் அண்ணன் மாதிரி. அவங்க குடும்பத்துக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.”

லலிதா, ஷோபி
லலிதா, ஷோபி

‘`இந்தப் பாட்டை நாம கோரியோகிராஃப் பண்ணாம மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தப்பட்டதுண்டா?’’

“ `பாகுபலி’ வாய்ப்பு மிஸ் ஆகிடுச்சு. பிரபாஸ் - தமன்னா பாடலைக் கோரியோ பண்ணக் கூப்பிட்டாங்க. ப்ராக்டீஸ், ரிகர்சல் எல்லாம் பண்ணியாச்சு. ஆனா, டேட்ஸ் சரியா செட்டாகலை. என்னை மாஸ்டரா ‘மரியாதை ராமண்ணா’ படத்துல அறிமுகப்படுத்தியதே ராஜமெளலி சார்தான். ஆனா, அவர் கூப்பிட்டு நம்மளால போகமுடியலைன்னு ரொம்ப வருத்தமா இருந்தது. அதே மாதிரி ஷோபி, ‘எந்திரன்’ படத்துல ‘இரும்பிலே ஒரு இதயம்’ பாட்டுக்குக் கோரியோ பண்ண முடியலையேன்னு ரொம்ப வருத்தப்பட்டார்.”

லலிதா
லலிதா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`குரூப் டான்ஸர் டு மாஸ்டர் ஆன கதை சொல்லுங்களேன்?’’

“பத்து வயசுல சினிமால டான்ஸ் ஆட வந்தேன். முன் வரிசைல ஆடுறவங்களுக்கு மாஸ்டர் என்ன மூவ்மென்ட் சொல்றாங்கன்னு தெரியும். பின்னாடி இருக்கிறவங்க தனக்கு முன்னாடி இருக்கிறவங்களை கேட்டும் பார்த்தும்தான் ஆடணும். என் பக்கத்துல ஆடின அக்காகிட்ட ‘ஏன் நாம முன்னாடி நிக்கலை?’ன்னு கேட்டேன். அப்போ அவங்க, ‘நீ நல்லா ஆடணும். அப்போதான் அந்தப் பொண்ணு நல்லா ஆடுறான்னு சொல்லி முதல் வரிசையில நிக்க வைப்பாங்க’ன்னு சொன்னாங்க. அந்த வார்த்தை மனசுல பதிஞ்சுடுச்சு. ஒவ்வொரு நாளும் பயங்கரமா ப்ராக்டீஸ் பண்ணுவேன். ஒரு நாள் சின்னி பிரகாஷ் மாஸ்டர் நான் நல்லா ஆடுறதைப் பார்த்துட்டு முதல் வரிசையில நிக்க வெச்சார்.அப்புறம் அவர்கிட்டேயே அசிஸ்டென்ட் கோரியோகிராஃபர் ஆகுற அளவுக்கு முன்னேறிட்டேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு