Published:Updated:

`ஃபைனலி' தர்ஷினி to `நக்கலைட்ஸ்' ஸ்ரீஜா - ஸ்பெஷல் ஷேரிங்ஸ் #VikatanDiwaliMalar2019

'நக்கலைட்ஸ்' தனம்: யூடியூப்பில் ஆண்கள் மட்டுமே காமெடி செய்துகொண்டிருந்த காலகட்டத்தில், ஒட்டுமொத்த டிரெண்டையும் மாற்றியமைத்தவர் தனம்

யூடியூப்
யூடியூப்

யூடியூப் உலகில் கலை வளர்த்து, கலாய் வளர்த்து, கலகலப்பாக கர்ஜித்துக்கொண்டிருக்கும் சிங்கப் பெண்களின் சின்னஞ்சிறு பயோகிராபி இங்கே...

'ஃபைனலி' தர்ஷினி: வித்தியாசமான கான்செப்ட்டுகள், ஜாலியான டீம் என யூடியூப் களத்தை அழகாகப் பயன்படுத்திவரும் சேனல் 'ஃபைனலி.' இந்த டீமிலிருக்கும் ஒரே பெண், தர்ஷினி. என்னதான் காமெடியை மையமாக வைத்து இவர்கள் வீடியோக்கள் உருவாக்கினாலும், தர்ஷினி கண்களை உருட்டி உருட்டிக் கொடுக்கும் ரியாக்‌ஷன் க்யூட் ரகம்.

''நடிக்க ஆரம்பிச்சு ஒரு வருஷம்தான் ஆவுது. அதுக்குள்ளே இவ்ளோ ரீச் கிடைச்சிருக்கு. வீட்டின் நிலவரம் இன்னும் அதே கலவரமாத்தான் இருக்கு. என்னை நினைச்சு வருத்தப்படுற என் குடும்பம், சீக்கிரமே என்னை நினைச்சு சந்தோஷப்படும்னு நம்புறேன்" என்கிறார் தர்ஷினி

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

`ஃபைனலி' தர்ஷினி to `நக்கலைட்ஸ்' ஸ்ரீஜா - ஸ்பெஷல் ஷேரிங்ஸ் #VikatanDiwaliMalar2019

'பொரி உருண்டை' ஹரிஜா: முழுக்க முழுக்கப் பெண்களே நடத்தும் முதல் தமிழ் யூடியூப் சேனல், பொரி உருண்டை. இந்தச் சேனலை கெத்தாக வழிநடத்துபவர் ராஜமாதா ஹரிஜா. கொஞ்ச நேரம் இவருடன் பேசினாலே போதும்... இவரின் உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்.

"எல்லாப்புகழும் என் கணவருக்கே! 'ஏன் நீ சும்மாவே இருக்கே... ஏதாவது பண்ணு'ன்னு சொல்லிக்கிட்டே இருப்பார். அவர்தான் கேமரா வாங்கிக் கொடுத்து, எடிட் பண்ணவும் கத்துக்கொடுத்தார். அப்புறம் என் கல்லூரித் தோழிகளோட சேர்ந்து 'பொரி உருண்டை' யூடியூப் சேனலை ஆரம்பிச்சேன். அது இந்த அளவுக்கு நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை" என்கிறார் ஹரிஜா.

'நக்கலைட்ஸ்' தனம்: யூடியூப்பில் ஆண்கள் மட்டுமே காமெடி செய்துகொண்டிருந்த காலகட்டத்தில், ஒட்டுமொத்த டிரெண்டையும் மாற்றியமைத்தவர் தனம். கொங்குத் தமிழ், இயல்பான நடிப்பு இவைதான் இவரின் பலம்.

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

'சாதிக்க வயசு தடை கிடையாது. நம்ம திறமை என்னன்னு கண்டுபிடிச்சாலே போதும், இந்த ஆன்லைன் உலகத்துல ஈஸியா ஃபேமஸாகிடலாம். திருமணமும் சமையலும் மட்டுமே பெண்களுக்கானது கிடையாது. அவங்களுக்குப் பிடிச்ச எல்லா விஷயங்களையும் செய்ய அவங்களுக்கு உரிமை இருக்குது" என்கிறார் தனம்.

`ஃபைனலி' தர்ஷினி to `நக்கலைட்ஸ்' ஸ்ரீஜா - ஸ்பெஷல் ஷேரிங்ஸ் #VikatanDiwaliMalar2019

'நக்கலைட்ஸ்' ஸ்ரீஜா: எத்தனையோ ஜொலிக்கும் வைரங்கள் இருந்தாலும், ஸ்ரீஜா கொஞ்சம் யுனிக். இவரின் அலப்பறையும் அட்டகாசமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். எடுக்கும் கான்செப்ட்டுகளில் துணிச்சலாக நடிப்பவர். நக்கலைட்ஸின் சிங்கப் பெண்.

"நான் நடிக்குறதுல எங்க வீட்ல உள்ளவங்களுக்கு உடன்பாடு இல்லாம இருந்தது. இதனாலேயே, வீட்ல அடிக்கடி பிரச்னைகள் வரும். பிறகு, நான் வீட்ல பேசிப் புரியவெச்சேன். ஆனா, இப்போவரை, நான் நடிச்ச வீடியோக்களை முழுசாகப் பார்த்ததே இல்லை. அம்மா மட்டும் பார்த்துட்டு அப்பப்போ பாராட்டுவாங்க. எனக்கு ரொம்பப் பிடிச்ச வீடியோன்னா 'க்ரஷ் அலப்பறைகள் 2'தான். ஏன்னா, நடிச்சது மட்டுமல்லாம, ஸ்க்ரிப்ட்லயும் வொர்க் பண்ணியிருந்தேன்" என்கிறார் ஸ்ரீஜா.

- இவர்களின் விரிவான பேட்டியை விகடன் தீபாவளி மலரில் வாசிக்கலாம்.

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1