Published:Updated:

6 ஆண்டுகள் கழித்து படமெடுத்த இயக்குநர்; வெறித்தன லுக்கில் ஃபகத்! - `டிரான்ஸ்' ஃபர்ஸ்ட் லுக்

fahad fazil
fahad fazil

அன்வர் ரஷீத் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடிக்கும் படம் , `டிரான்ஸ்'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார், ஃபகத் ஃபாசில். 

`அஞ்சு சுந்தரிகள்' படத்தைத் தொடர்ந்து 6 ஆண்டுகள் கழித்து அன்வர் ரஷீத் இயக்கியிருக்கும் படம், `டிரான்ஸ்'. படம் எதைப் பற்றிப் பேசப்போகிறது என்பது இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில், வெறித்தனமாக வெளிவந்திருக்கும் இந்தப் போஸ்டரைப் பார்த்து நெட்டிசன்கள் படத்தைப் பற்றி பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும், வாழ்க்கையின் 5 கட்டங்கள் பற்றி பேசப்போகும், இப்படத்துக்குத் தகுந்தார்போல் தன்னை மாற்றியமைத்து நடித்திருக்கிறார், ஃபகத். பொதுவாக, ஃபகத் ஃபாசில் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்து வித்தியாசமானதாகவே இருக்கும். அந்த வரிசையில் கட்டாயம் இந்தப் படமும் இடம்பெற்றிருக்கும். 

fahad fazil
fahad fazil
Trance

படத்துடைய ஷூட்டிங் ஒரு வாரத்துக்கு முன்புதான் மும்பையில் நடந்துமுடிந்தது. ஃபகத்தின் மனைவியான நஸ்ரியா நஸீம் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் வேதிகா, `பிரேமம்' இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன், விநாயகன், சௌபின் ஷகிர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். அன்வர் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையையையும், திரைக்கதையையும் வின்சன்ட் வடக்கன் எழுதியுள்ளார்.

மேலும், ரசூல் பூக்குட்டி இப்படத்துக்கு சவுண்ட் இன்ஜினீயராக பணியாற்றியிருக்கிறார். இதுமட்டுமின்றி, `போல்ட் ஹை ஸ்பீடு சினிபாட்' எனும் தொழில்நுட்பம் மலையாள சினிமாவில் முதன் முறையாக இப்படத்தில் பயன்படுத்தப்படவிருக்கிறது. இயக்குநர் அன்வர் ரஷீத்தே தயாரித்திருக்கும் இப்படம், வரும் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு