Published:Updated:

நடிகைகளைத் தொடர்ந்து நடிகர்களும் நிர்வாண போஸ்... `பப்ளிசிட்டி'க்காக இப்படிச் செய்யலாமா?

ரன்வீர் சிங் | நிர்வாண போட்டோஷூட்

படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக வேண்டும்... நல்ல விதமாகவோ, எதிர்மறையாகவோ அதிக விமர்சனங்கள் வர வேண்டும்... அப்போதுதான் விளம்பரமாகும் என்பது ஒருவித வியாபார யுக்தி, இப்போது பப்ளிசிட்டிக்காக நிர்வாண போட்டோஷூட் செய்துவரும் கலாசாரத்துக்கு மாறியுள்ளனர்.

நடிகைகளைத் தொடர்ந்து நடிகர்களும் நிர்வாண போஸ்... `பப்ளிசிட்டி'க்காக இப்படிச் செய்யலாமா?

படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக வேண்டும்... நல்ல விதமாகவோ, எதிர்மறையாகவோ அதிக விமர்சனங்கள் வர வேண்டும்... அப்போதுதான் விளம்பரமாகும் என்பது ஒருவித வியாபார யுக்தி, இப்போது பப்ளிசிட்டிக்காக நிர்வாண போட்டோஷூட் செய்துவரும் கலாசாரத்துக்கு மாறியுள்ளனர்.

Published:Updated:
ரன்வீர் சிங் | நிர்வாண போட்டோஷூட்

நடிகை அமலாபால் `ஆடை' படத்தில் நிர்வாணமாக நடித்தது, பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. பரபரப்பாகப் பேசப்பட்டது... விமர்சிக்கப்பட்டது இணையத்தில் வைரல் ஆனது.

அடுத்து நடிகை ஆண்ட்ரியா, `வட சென்னை' படத்தில் ஒரு பாடலில் அரை நிர்வாணமாக நடித்திருந்தார். மாத இதழின் அட்டைப்படத்துக்கு ஆடை இன்றி கடல் கன்னியாகவும் போஸ் கொடுத்தார் ஆண்ட்ரியா.

ரன்வீர் சிங் | நிர்வாண போட்டோஷூட்
ரன்வீர் சிங் | நிர்வாண போட்டோஷூட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள்ளாகவே, விரைவில் ரிலீஸாக உள்ள `பிசாசு 2' படத்திலும், ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

`பிசாசு 2' படத்தின் கதையைக் கேட்டபோது 15 நிமிடங்கள் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என இயக்குநர் தெரிவித்ததாகவும், அதில் தனக்கு அப்போது உடன்பாடில்லை எனவும் கூறிய ஆண்ட்ரியா, கதை தரமானதாக இருந்ததால், இயக்குநரின் கட்டாயத்தின் பேரில் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

லேட்டஸ்ட் ரிலீஸ் `இரவின் நிழல்' படத்தில், நடிகைகள் ப்ரிகிடா மற்றும் ரேகா நாயர் ஆகியோரும் நிர்வாணம் மற்றும் அரை நிர்வாணமாக நடித்திருந்தனர். நடிகை கிரணும் நிர்வாண போஸ் கொடுத்து, அதை சோஷியல் மீடியாவில் பதிவேற்றியுள்ளார். நிர்வாணமாக `போஸ்' தருவதை பெருமையாகக் கொண்டாடும் போக்கு, சினிமா வட்டாரத்தில் இப்போது அதிகரித்துள்ளது.

விஷ்ணு விஷால் | நிர்வாண போட்டோஷூட்
விஷ்ணு விஷால் | நிர்வாண போட்டோஷூட்

நடிகர், நடிகையர் விரும்பி நடிக்கிறார்களா அல்லது படத்தின் வைரல் பப்ளிசிட்டிக்காக இப்படி நடிக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்களா எனத் தெரியவில்லை. நடிகைகளைத் தொடர்ந்து, தற்போது நடிகர்களே இப்படி இறங்கியுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் நிர்வாண போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பலரும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ஆங்கில இதழ் ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். அந்தப் படங்களை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். `இப்படி நிர்வாணமாக போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்ததில் எனக்கு அசிங்கம் இல்லை, பார்ப்பவர்களுக்குதான் தர்மசங்கடமாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.

விஷ்ணு விஷால் | நிர்வாண போட்டோஷூட்
விஷ்ணு விஷால் | நிர்வாண போட்டோஷூட்

`இந்த கான்செப்ட் குறித்து ரன்வீர் என்னிடம் சொன்னார். இது ஏதோ வித்தியாசமான கான்செப்ட் என்பதால் நான் அதிக ஆர்வத்துடன் காத்திருந்தேன். இந்த போட்டோ பத்திரிகையில் வெளியாகும் முன்பே நான் பார்த்துவிட்டேன். அது எனக்கு பிடித்திருந்தது. ரன்வீர் எப்போதும் வித்தியாசமாக எதையாவது முயன்று பார்க்க வேண்டும் என்று விரும்புவார். அவருக்கு எப்போதும் நான் துணையாக இருப்பேன்’ என்று தீபிகா படுகோன் கூறியுள்ளார்.

ரன்வீர் சிங், அவரின் மனைவியும் நடிகையுமான தீபிகா படுகோன் கூறிய பதில்கள் பலரையும் அதிர வைத்துள்ளது.

இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நெட்டிசன்கள் கண்டபடி கமென்ட் செய்து திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கோலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால், ரன்வீர் சிங்கை போல நிர்வாண போஸ் படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதற்கு அவர், `நிர்வாண போஸ் கொடுக்கும் டிரெண்டில் இப்போது நானும் இணைகிறேன்...' என்று அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அந்த நிர்வாண போட்டோவை எடுத்தவர் என் மனைவியும், பேட்மின்டன் வீராங்கனையுமான ஜூவாலா குட்டா என்பதையும் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

இவர்களுடைய போக்குகளை விமர்சிக்கும் நெட்டிசன்கள், கண்டபடி கடுமையான வார்த்தைகளால் திட்டி பதிவு செய்து வருகின்றனர்.

படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும்... இணையத்தில் சமூக ஊடகங்களில் வைரலாக வேண்டும்... நல்ல விதமாகவோ, எதிர்மறையாகவோ அதிகம் விமர்சனங்கள் வர வேண்டும்... அப்போதுதான் விளம்பரமாகி, வசூல் கிடைக்கும் என்பது ஒருவித வியாபார யுக்தி. அதற்குப் பலரும் பல்வேறு விளம்பர வழிமுறைகளைக் கையாள்வது உண்டு. இப்போது பப்ளிசிட்டிக்காக நிர்வாண போட்டோஷூட் செய்துவரும் கலாசாரத்துக்கு மாறியுள்ள இவர்களின் இந்தப் போக்கு கவலையை அளிப்பதாகப் பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.