Published:Updated:

"காந்தாரா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து புல்லரித்துப் போனேன்..." - ஹிரித்திக் ரோஷன்

ஹிரித்திக் ரோஷன்
News
ஹிரித்திக் ரோஷன்

`விக்ரம் வேதா' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து நடித்திருந்த பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் காந்தாரா திரைப்படத்தை ஓடிடியில் பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டியிருக்கிறார்.

"காந்தாரா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து புல்லரித்துப் போனேன்..." - ஹிரித்திக் ரோஷன்

`விக்ரம் வேதா' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து நடித்திருந்த பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் காந்தாரா திரைப்படத்தை ஓடிடியில் பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டியிருக்கிறார்.

Published:Updated:
ஹிரித்திக் ரோஷன்
News
ஹிரித்திக் ரோஷன்

சமீப காலமாக தென்னிந்திய திரைப்படங்கள் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்தவகையில் கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் தாயாரித்து வெற்றிகண்ட Hombale நிறுவனத்தின் தாயாரிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகியிருந்தத் திரைப்படம் 'காந்தாரா'. கன்னட கலாசாரத்தையும், பண்ணையார்களின் அதிகார அரசியலையும் பற்றிப் பேசியிருந்த இத்திரைப்படத்தை 'ரிஷப் ஷெட்டி' இயக்கி நடித்திருந்தார்.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி நல்ல வசூலையும், பாரட்டுக்களையும் பெற்றிருந்தது. தற்போது ஓடிடியிலும் வெளியாகி வசூலைக் குவித்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் 'விக்ரம் வேதா' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து நடித்திருந்த பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன், காந்தாரா திரைப்படத்தை ஓடிடியில் பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டியிருக்கிறார்.

இதுபற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``காந்தாரா திரைப்படத்தைப் பார்த்து நிறையக் கற்றுக் கொண்டேன். இயக்குநர் ரிஷப் ஷெட்டியின் வலிமையான அற்பணிப்பு இத்திரைப்படத்தை அசாதரணமாகியுள்ளது. சிறப்பான திரைக்கதை. இயக்கம், நடிப்பு. குறிப்பாக, கதையின் உச்சமாக அமைந்திருக்கும் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து புல்லரித்துப் போனேன். படக்குழுவினருக்கு எனது மரியாதையையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.