Published:Updated:

Chhello Show: ஆஸ்கர் விருதுக்குத் தேர்வான படத்தில் நடித்த சிறுவன் மறைவு - தந்தை உருக்கம்!

ராகுல் கோலி

'Chhello Show' (Last Film Show) படம் அக்டோபர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அக்டோபர் 2-ம் தேதி இப்படத்தில் நடித்த சிறுவன் இறந்திருக்கிறார்.

Chhello Show: ஆஸ்கர் விருதுக்குத் தேர்வான படத்தில் நடித்த சிறுவன் மறைவு - தந்தை உருக்கம்!

'Chhello Show' (Last Film Show) படம் அக்டோபர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அக்டோபர் 2-ம் தேதி இப்படத்தில் நடித்த சிறுவன் இறந்திருக்கிறார்.

Published:Updated:
ராகுல் கோலி

அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதம் 95-வது அகாடமி விருதுகள் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருது விழா நடக்கவிருக்கிறது. இந்த விழாவின் சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் போட்டியிட இந்தியா சார்பில் குஜராத்தித் திரைப்படமான 'Chhello Show' (Last Film Show) தேர்வு செய்யப்பட்டுள்ளது. பான் நளின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் படச்சுருள்களில் திரையிடப்பட்ட சினிமா பற்றியும் அதைக் கனவாகக் கொண்ட ஒரு சிறுவனின் வாழ்க்கை பற்றியும் பேசுகிறது.

இத்திரைப்படத்தில் பவின் ரபரி, பவேஷ் ஸ்ரீமாலி, ரிச்சா மீனா, திபென் ராவல் மற்றும் பரேஷ் மேத்தா போன்ற பலர் நடித்துள்ள நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் ராகுல் கோலி என்ற சிறுவனும் நடித்திருக்கிறார். அக்டோபர் 14-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் அக்டோபர் 2-ம் தேதி, இப்படத்தில் நடித்த 15 வயதுடைய ராகுல் கோலி என்ற சிறுவன் புற்றுநோய் பாதிப்பால் இறந்திருக்கிறார்.

'Chhello Show' (Last Film Show)
'Chhello Show' (Last Film Show)

இதுகுறித்து அச்சிறுவனின் தந்தை, "அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். படம் வெளியான பிறகு எங்கள் வாழ்க்கை மாறும் என்று அடிக்கடி என்னிடம் கூறிக்கொண்டே இருப்பான். ஆனால் அதற்கு முன்னரே அவன் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டான். ராகுலின் சிகிச்சைக்காக என்னுடைய ஆட்டோவை விற்க இருந்தேன். ஆனால் நிலைமையை அறிந்த 'Chhello Show' படக்குழுவினர் எனக்கு உதவி செய்தனர்" என்று தெரிவித்திருக்கிறார்.

"நாங்கள் ராகுலைக் காப்பாற்றப் பல வாரங்களாக முயன்று வந்தோம். ஆனால் இறுதியில், அவரைக் காப்பாற்ற முடியவில்லை” என்று Chhello Show படத்தின் இயக்குநர் பான் நளினும் கூறியிருக்கிறார்.

அக்டோபர் 14 வெளியாகவுள்ள 'Chhello Show’ படத்தை தாங்கள் குடும்பத்துடன் பார்க்க இருப்பதாக ராகுல் கோலியின் தந்தை தெரிவித்திருக்கிறார். இச்சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.