கட்டுரைகள்
Published:Updated:

“சீக்கிரமே ‘பாய்ஸ்’ ரீயூனியன்!”

பரத்
பிரீமியம் ஸ்டோரி
News
பரத்

திரும்பவும் சினிமாவுக்கு மணி வரணும்னு ஆசைப்படுறேன். ஜெனிலியா பிறந்தநாளுக்கு சமீபத்தில் விஷ் பண்ணினேன்.

‘லாக்டெளனால அஞ்சு மாசமா வீட்டுல பேமிலியோடு இருக்கேன். வீட்டுல ரெண்டு பசங்க இருக்காங்க. இவங்க பின்னாடி சுத்துனதுலயே லாக்டெளன் சீக்கிரம் போற மாதிரி இருக்கு. கொரோனாவுக்கு முன்னாடி எனக்குக் கிடைச்ச உற்சாகமான செய்தி விகடன் மார்க். ஆமா, ‘காதல்’ படத்துக்குப் பிறகு அதிக மார்க் வாங்கிய என் படம் ‘காளிதாஸ்.’ நல்லவேளை லாக்டௌனுக்கு முன்னால ரிலீஸ் ஆகி எனக்கு நல்ல பேர் வாங்கித் தந்திடுச்சு” - உற்சாகமாகப் பேசுகிறார் பரத்.

“இன்னும் சொல்றதுக்கு சில நல்ல செய்திகள் இருக்கு. தமிழில் நிலைச்சு நிக்கணும்னு நினைச்சதால் மத்தமொழிப் படங்களில் கவனம் செலுத்தலை. ஆனா ‘ஜாக்பாட்’ இந்திப்பட வாய்ப்பு தற்செயலா அமைஞ்சது. ஆனா, இப்போ பண்ணிட்டிருக்கிற ‘ராதே’க்கு முக்கியமான காரணம் பிரபுதேவா மாஸ்டர் கூப்பிட்டுக் கொடுத்த வாய்ப்பு. ‘ராதே’ படத்துல வேலை பார்க்கிறவங்க 60 சதவிகிதம் தமிழர்கள். அதனால எனக்கு இந்திப்படம் பண்ணுன உணர்வே இல்லை. சி.சி.எல் கிரிக்கெட்ல இருந்தே சல்மான் கானைத் தெரியும். கிரிக்கெட் மேட்சுக்கு வரப்போ பார்த்துப் பார்த்து அவருக்கு என்னோட முகம் பதிஞ்சிருச்சு. சல்மானுடன் நான், மேகா ஆகாஷ், ஜாக்கி ஷெராப் நடிச்சிருக்கோம்.

பரத்
பரத்

இன்னொரு குட் நியூஸ் வெப்சீரிஸ். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே வெப்சீரிஸில் நடிச்சுட்டேன். அப்போதான் வெப்சீரிஸ் கலாசாரம் தமிழுக்கு அறிமுகமாயிருந்தது. இப்போ மறுபடியும் ஒரு வெப்சீரிஸ், கவிதாலயா தயாரிப்பில் நடிக்கிறேன். ‘சுட்ட கதை’ டைரக்டர் சுபு டைரக்‌ஷன் இயக்கத்தில் நான், அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர், கருணாகரன், ரோபோ சங்கர்னு பெரிய டீம் படத்துல நடிச்சிருக்கோம். காமெடி கலந்த சயின்ஸ் பிக்‌ஷன் கதை.”

`` ‘பாய்ஸ்’ பசங்ககூட இன்னும் தொடர்புல இருக்கீங்களா?’’

“தமன்கூட அடிக்கடி பேசுவேன். சித்தார்த்கூட எப்போதாவது பார்ட்டில பார்க்குறப்போ பேசுறதுதான். தொடர்ந்து நகுல்கூட டச்ல இருக்கேன். ஜிம்ல அடிக்கடி பார்ப்போம். மூணு வருஷத்துக்கு முன்னாடி மணிகண்டன்கூட போன்ல பேசினேன். ‘ஷார்ட் பிலிம்ஸ் டைரக்‌ஷன் பண்ணிட்டி ருக்கேன்’னார். திரும்பவும் சினிமாவுக்கு மணி வரணும்னு ஆசைப்படுறேன். ஜெனிலியா பிறந்தநாளுக்கு சமீபத்தில் விஷ் பண்ணினேன். நாங்க எல்லாருமே ரீயூனியன் பண்ணணும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டிருக்கோம். கூடிய சீக்கிரம் நடக்கும்.”