Published:Updated:

“யோகிபாபுவைக் கலாய்க்கிறதுதான் எங்க பொழுதுபோக்கு!”

கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தி

பருத்திவீரன்’ படத்தின்போது அமீர் சார் ஆபீஸுக்குப் போவேன். அங்கே பார்த்தால் வாய்ப்புக்காக சில பேர் வரிசையாக நிப்பாங்க. அந்த வரிசையில் யோகிபாபுவைப் பார்த்திருக்கேன்.

“யோகிபாபுவைக் கலாய்க்கிறதுதான் எங்க பொழுதுபோக்கு!”

பருத்திவீரன்’ படத்தின்போது அமீர் சார் ஆபீஸுக்குப் போவேன். அங்கே பார்த்தால் வாய்ப்புக்காக சில பேர் வரிசையாக நிப்பாங்க. அந்த வரிசையில் யோகிபாபுவைப் பார்த்திருக்கேன்.

Published:Updated:
கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தி
‘`என் சினிமா கரியர்ல இது ரொம்ப முக்கியமான கட்டம். ‘சுல்தான்’ என்வரையிலும் முக்கியமான படம். முன்னாடியெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் வேறுபாடு உள்ள படங்கள், அதற்கான ஹோம் வொர்க் சிம்பிளா இருக்கும். ‘கைதி’க்குப் பின்னாடி என்னை இன்னும் அதிகம் கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்க. இப்போ தினம் தினம் கூடு விட்டுக் கூடு பாயுற மாதிரி இருக்கு. கிடைக்கும் வரவேற்பும் அங்கீகாரமும் கவனிப்பும், வெற்றியும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ‘சுல்தான்’ படத்துக்கு அவ்வளவு உழைப்பு தேவைப்பட்டது. இப்போ வெரி ஹேப்பி! பொறுமையாகக் காத்திருந்து பொறுப்பாக உழைச்சதுக்கு படம் நல்லா வந்திருப்பது சந்தோஷம் தருது.’’ வந்தியத்தேவனாக மயக்கும் சுருள்முடி, மெருகேறிய உடம்பில் வசீகரமாக இருக்கிறார் கார்த்தி.
“யோகிபாபுவைக் கலாய்க்கிறதுதான் எங்க பொழுதுபோக்கு!”

``பெரிய கூட்டத்தோடு படம் கலகலன்னு இருக்கும் போலிருக்கே..?’’

“மூணு வருஷத்துக்கு முன்னாடி பாக்கியராஜ் கண்ணன் ‘ரெமோ’ பண்ணி முடிச்ச சமயம். என்கிட்டே ஒன்லைன் சொல்லணும்னு கேட்டு வந்தார். அந்த ஒன்லைன் எனக்குப் பிடிச்சது. நாம் ஒவ்வொருத்தரும் ஒரு கரியரை முன்வச்சுப் போவோம். அப்படி இருக்கிற ஒருத்தனுக்கு வேற மாதிரி சவால் வருது. அவனது இலக்கை விட்டுட்டு வேற ஒண்ணு செய்ய வேண்டி இருக்கு. இப்ப அதைச் செய்தால் பத்து வருஷத்துக்குப் பின்னாலும் அந்த முடிவு சரியாக இருக்கணும். பெரிய ரவுடிகளாக இருக்கும் நூறு பேரை குறிப்பிட்ட காலம் வரைக்கும் கட்டி சமாளிக்கிற வேலை. அதற்கான பயிற்சி முன் அனுபவம் ஒண்ணுமே கிடையாது. இப்படி வித்தியாசமான ஒன்லைன். அதனால் ஆக்‌ஷன், காமெடி, எமோஷன்னு படம் கலந்துகட்டி வந்திருக்கு. என் படங்களிலேயே இது அதிக பட்ஜெட்.”

“யோகிபாபுவைக் கலாய்க்கிறதுதான் எங்க பொழுதுபோக்கு!”

``ராஷ்மிகா உங்களுக்குப் பொருத்தமான ஜோடியா இருக்காங்க...’’

“கண்ணு வச்சிட்டிங்களா, சரி... ஆனா அப்படியும் உங்ககிட்ட சொல்ல முடியாது. நீங்க கண்ணு வச்சாதானே பொண்ணு ஹிட். அவங்க ரொம்ப ஸ்மார்ட்! தெலுங்கில் அவங்களைக் கொண்டாடறாங்க. அங்கேயிருந்து இப்ப இந்தி வரைக்கும் பயணப்பட்டுட்டாங்க. அழகுலயும் நடிப்புலயும் ராஷ்மிகா சூப்பர். அவங்களுக்குத் தெரியாத வேலையில்லை. டிராக்டர் ஓட்டுறாங்க. கலப்பையை வச்சுக்கிட்டு பரம்பரையாக உழுகிற மாதிரி உழுறாங்க. தமிழுக்கு நல்ல ஹீரோயின் கிடைச்சிருக்காங்கன்னு சொல்லணும்.”

“யோகிபாபுவைக் கலாய்க்கிறதுதான் எங்க பொழுதுபோக்கு!”

``யோகிபாபு காமெடி காம்போ எப்படி?’’

“ ‘பருத்திவீரன்’ படத்தின்போது அமீர் சார் ஆபீஸுக்குப் போவேன். அங்கே பார்த்தால் வாய்ப்புக்காக சில பேர் வரிசையாக நிப்பாங்க. அந்த வரிசையில் யோகிபாபுவைப் பார்த்திருக்கேன். அப்புறம்தான் அவர் அமீர் சாரின் ‘யோகி’யில் நடித்துப் பிரபலமானார். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் அவர் தூங்கினாலே அதிகம். அவ்வளவு பிஸி. ஏற்கெனவே லொள்ளு சபா டீமில் ஸ்கிரிப்ட் ரைட்டராக வேறு இருந்திருக்கிறார். இதையெல்லாம் கேள்விப்பட்டதும் எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. எதுவானாலும் உடனே கவுன்ட்டர் டயலாக் கொடுத்துடுறார். நானும் ஜெயம் ரவியும் ஹைதராபாத்தில் ‘பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங்கில் இருக்கும்போது யோகி பாபுவை போனில் கலாய்ப்பதுதான் எங்களது பெரிய பொழுதுபோக்கு. சுல்தானில் எங்க காம்பினேஷன் ரொம்பப் பேசப்படும்.”

“யோகிபாபுவைக் கலாய்க்கிறதுதான் எங்க பொழுதுபோக்கு!”

`` ‘பொன்னியின் செல்வ’னில் வந்தியத்தேவனா நடிக்கிற அனுபவத்தைச் சொல்லுங்க...’’


“சேர, சோழ, பாண்டியர்களின் அரசாளுமை, மக்கள் நலனில் அவர்களுக்கு இருந்த ஆர்வம் எல்லாம் நினைக்கும்போது ஆச்சரியம் தாங்க முடியலை. விக்ரம் சிறந்த நடிகர்னு தெரியும். பக்கத்திலேயே நடிச்சுப் பார்க்கிறது அதை இன்னும் உறுதிசெய்யுது.

“யோகிபாபுவைக் கலாய்க்கிறதுதான் எங்க பொழுதுபோக்கு!”

ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஜெயம் ரவின்னு நிறைய திறமையான நடிகர்கள்.

ஐஸ்வர்யா ராய், த்ரிஷாவுடனும் நடிக்கிறது நல்ல அனுபவம். அத்தனை நடிகர்களும் ஷூட்டிங் இல்லைன்னாலும் மத்தவங்க நடிக்கிறதைப் பார்க்க வந்துடறாங்க. இன்னைக்கும் புத்தகக் கண்காட்சியில் ‘பொன்னியின் செல்வன்’ நல்லா விக்குதுன்னு சொல்றாங்க. அது படமா மாறும்போது இன்னும் நல்லாருக்கும். கொஞ்சம் காத்திருங்க, ஷூட்டிங் முடியட்டும். இன்னும் நிறைய சொல்றேன்.”