Published:Updated:

“வெற்றிமாறன்னு நினைச்சு மாரி செல்வராஜிடம் கதை கேட்டேன்!”

லால்
பிரீமியம் ஸ்டோரி
லால்

அஞ்சு மணிக்குத் திரும்பவும் ஷூட்டிங் ஆரம்பிச்சிருவார் மணிரத்னம். புது அனுபவமா இருக்கு.

“வெற்றிமாறன்னு நினைச்சு மாரி செல்வராஜிடம் கதை கேட்டேன்!”

அஞ்சு மணிக்குத் திரும்பவும் ஷூட்டிங் ஆரம்பிச்சிருவார் மணிரத்னம். புது அனுபவமா இருக்கு.

Published:Updated:
லால்
பிரீமியம் ஸ்டோரி
லால்
‘கர்ணன்’ படத்தின் டப்பிங்கிற்காக சென்னைக்கு வந்திருந்தார் மலையாள நடிகர் லால். ‘சண்டக்கோழி’ படத்தின் வில்லனாக நமக்கு அறிமுகமான லால், மலையாளத்தில் மாபெரும் நடிகர்.

``தனுஷுடன் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?’’

“எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி வொர்க் அவுட்டாக கொஞ்சம் நேரம் எடுத்துச்சு. தனுஷ் ஷூட்டிங் ஸ்பாட்ல எப்போவும் அமைதியாதான் இருப்பார். பெருசா எதுவுமே பேச மாட்டார். காலையில வந்தவுடனே ‘குட்மார்னிங்’ சொல்லுவார். வீட்டுக்குப் போறப்போ ‘போயிட்டு வரேன்’னு சொல்லிட்டுப் போவார். ஆனா, ‘ஆக்‌ஷன்’ சொல்லிட்டா ஆளே மாறிடுவார். அதுக்கப்புறம் தனுஷைப் பார்க்கமுடியாது. கர்ணனைத்தான் பார்ப்போம். படத்துல நான் பக்கா லோக்கல் ஆளா நடிச்சிருக்கேன். ஹீரோகூடவே டிராவல் பண்ணுவேன். தனுஷுக்கு காட்பாதர் மாதிரியான கேரக்டர்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``மாரி செல்வராஜ் எப்படி உங்ககிட்ட கதை சொன்னார்?’’

‘‘தமிழ்ல நிறையப படங்கள் பார்த்திருக்கேன். ஆனா, டைரக்டர்கள் பற்றித் தெரியாது. என்னோட மேனேஜருக்கு முதல்ல போன் வந்தது. என்கிட்ட மேனேஜர் ‘வெற்றிமாறன் படத்துக்காக உங்ககிட்ட கதை சொல்ல வரணுமாம். எப்போ வரச் சொல்லலாம்’னு கேட்டார். ‘வெற்றிமாறன்னா யார்’னு என் பையன்கிட்ட கேட்டேன். ‘பெரிய டைரக்டர்’னு சொன்னான். போட்டோக்கள் காட்டச் சொல்லிப் பார்த்தேன். தாடியோட இருந்தார் வெற்றிமாறன். ‘தாடி வெச்சிருக்குற டைரக்டர் வெற்றி’ன்னு மனசுல பதிஞ்சிருச்சு. உடனே, ‘நானே சென்னை வந்து கதை கேட்குறேன்னு சொல்லிரு’ன்னு மேனேஜரைக் கூப்பிட்டுச் சொல்லிட்டேன். சென்னைக்கு வந்து கதை கேட்க ரெடியாகி, ஹோட்டல்ல காத்துட்டு இருந்தேன்.

லால்
லால்

தாடி வெச்சிட்டு ‘கர்ணன்’ படத்தோட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரும் சின்னப் பையன் மாதிரி மாரிசெல்வராஜும் வந்திருந்தாங்க. ரெண்டு பேரையும் வெல்கம் பண்ணிட்டு, பேசினேன். மாரி கதை சொல்றார். என் கவனம் முழுவதும் தேனி ஈஸ்வர் மேலயே இருக்கு. ஏன்னா, இவர்தான் தாடி வெச்சிருக்கார். தேனி ஈஸ்வரை வெற்றிமாறன்னு நினைச்சுக்கிட்டேன். ‘என்ன மாதிரியான கதை, எந்த ரோல்ல நடிக்குறேன்’னு முழுக்க ஈஸ்வர்கிட்டயே பேசிக்கிட்டு இருக்கேன். கொஞ்ச நேரத்துல ஈஸ்வருக்குத் தெரிஞ்சிருச்சு, ‘சார் நம்மள டைரக்டர்னு நினைச்சி பேசிக்கிட்டு இருக்கார்’னு. ஈஸ்வர், ‘நான் டைரக்டர் இல்ல. இவர்தான் டைரக்டர்’னு மாரியைக் காட்டினார். அதுக்கு அப்புறம் மாரி சொன்ன எதுவுமே என் காதுல விழல. ஆனா, ‘படத்துல நடிக்குறேன்’னு சொல்லிட்டு நேரா ரூமுக்குப் போயிட்டு ‘இப்படி தப்பா புரிஞ்சிக்கிட்டோமே’ன்னு தலையில கையை வெச்சிட்டு உட்கார்ந்துட்டேன். மாரியோட ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்திருக்கேன். ரொம்ப நல்ல சப்ஜெக்ட். ஆனா, மாரி பற்றி பெரிசா தெரியாது. ரியலிஸ்டிக்கா ‘கர்ணன்’ படத்தை எடுத்திருக்கார் மாரி செல்வராஜ். இதுவரைக்கும் சினிமாவுல பார்க்காத காட்சிகள் படத்துல இருக்கும். படத்துல பேசியிருக்குற பிரச்னையும் புதுசா இருந்தது. படம் பார்த்துட்டு அரண்டுபோயிட்டேன். ‘கர்ணன்’ படத்துக்காக தமிழ்நாட்டுல இருந்து விருது எனக்குக் கிடைக்கும்னு நம்புறேன்.’’

`` ‘சுல்தான்’ படத்துல கார்த்திகூட நடிச்சது எப்படி இருந்தது?’’

‘‘ஷூட்டிங் ஸ்பாட்ல கார்த்தி கலகலன்னு பேசிட்டே இருப்பார். படத்துல கார்த்தியோட அப்பா நெப்போலியனின் ப்ரெண்ட் கேரக்டர் பண்ணியிருக்கேன். ஹ்யூமர் கலந்த கேரக்டர். ‘தென்காசி பட்டணம்’ படத்தோட தெலுங்கு வெர்ஷன்ல நெப்போலியன் கேரக்டர்ல நான் நடிச்சிருப்பேன். அதனால் கேரளா வந்தா என்னோட வீட்டுக்கு வந்து தங்கிட்டுத்தான் போவார் நெப்போலியன்.’’

தமிழ்ல இன்னும் நல்ல கேரக்டர்கள் பண்ணியிருக்கலாம்னு நினைச்சது உண்டா?

‘‘அதிகமா தமிழ்ல வில்லன் ரோல்லதான் நடிச்சிருக்கேன். ‘சண்டக்கோழி’ படத்துல பெரிய வில்லனா நடிச்சிருந்தேன். இதுக்குப் பிறகு நிறைய படங்களிலும் வில்லனா கேட்டுட்டு இருந்தாங்க. ஒரு கட்டத்துல அலுத்துப்போய், வில்லனா நடிக்குறதை நிறுத்திட்டேன். ஹ்யூமர் மற்றும் குணச்சித்திர கேரக்டர்ஸ் மட்டும் செலக்ட் பண்ணி நடிச்சேன். வாழ்க்கையில வராத விஷயங்கள் குறித்து பெருசா நான் வருத்தப்படல. எனக்கு வந்ததை நினைச்சு திருப்தியா இருக்கேன்.”

லால்
லால்

``கலாபவன் மணியை மிஸ் பண்றீங்களா?’’

‘‘என்ன சொல்றதுன்னு தெரியல. வாழ்க்கையை பயங்கரமா என்ஜாய் பண்ணினார். திருவிழாக் கூட்டம் மாதிரி அவர் இருக்கற இடம் இருக்கும். எப்போவும் ப்ரெண்ட்ஸ்கூட இருப்பார். கணக்கு பார்க்காம செலவழிப்பார். இதே மாதிரியே குடும்பத்துக்கும் சேர்த்து வெச்சிருக்கார். இருந்தும், இவர் இல்லைங்குற குறை குடும்பத்துல எப்போவும் இருக்கும். அவங்களுக்குத்தான் பேரிழப்பு. சமீபத்துல என்னோட நெருங்கிய நண்பர் சச்சுவும் இறந்துட்டார். ‘அய்யப்பன் கோஷியும்’ டைரக்டர். நாங்க நெருங்கிய நண்பர்கள். இதுவும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.’’’

``உங்க பையன் ஜீன் பால் லாலுடன் இணைந்து படம் பண்ணுன அனுபவம்?’’

‘‘முதல்ல சினிமாவுக்கு வரேன்னு பையன் சொன்னான். ‘அதெல்லாம் வேண்டாம்’னு சொல்லிட்டு பெங்களூர்ல ஒரு காலேஜ்ல சேர்த்து விட்டேன். அங்கே படிச்சிட்டே லீவு கிடைக்குறப்போ வந்து, என்னோட படங்கள்ல அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்த்தான். நுணுக்கமா வேலைகள் செஞ்சான். படத்தோட வேலைகள் முடிஞ்சவுடனே படிக்கப் போயிட்டான். நான் அடுத்த படத்துக்கான வேலையில இறங்கிட்டேன். அப்போ போன் பண்ணி, ‘என்னை எதுக்கு படிக்க காலேஜூக்கு அனுப்பி வெச்சிருக்கீங்க. உங்ககூட வந்து வொர்க் பண்றேன்’னான். ‘சரிடா வா’ன்னு சொன்னேன். அப்புறம் நியூயார்க் போயிட்டு பிலிம் அகாடமில படிச்சிட்டு வந்தான். அப்புறம் முதல் படம் ‘Honey Bee’ டைரக்ட் பண்ணினான். நல்ல ஹிட்டாச்சு. தொடர்ந்து நல்ல படங்கள் பண்ணிட்டிருக்கான். இப்போ ‘tsunami’ மலையாளப் படம் ரெண்டு பேரும் சேர்ந்து இயக்கியிருக்கோம். உலகத்துலயே அப்பா, பையன் சேர்ந்து டைரக்‌ட் பண்ணின முதல் படம் இதுதான்னு நினைக்குறேன். கூடிய சீக்கிரம் தமிழ்ல டைரக்‌ஷன் பண்ணணும்னு சொல்லிக்கிட்டு இருக்கான்.’’

`` `பொன்னியின் செல்வன்’ படத்துல பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் நடிக்குறது எப்படியிருக்கு?’’

‘‘அரண்மனை செட்டுக்குள்ள எல்லாருமே மாஸ்க் போட்டுட்டு நின்னுட்டு இருந்தாங்க. முதல்நாள் பார்த்துட்டு டிப்ரஷன் ஆகிட்டேன். எல்லா பெரிய ஆர்ட்டிஸ்டும் ராஜா காலத்து டிரஸ் போட்டுட்டு நின்னுட்டு இருப்போம். ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு, நிழல்கள் ரவி, ஜெயராம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், த்ரிஷானு எல்லாருமே செட்ல இருக்காங்க. ஒரு ஷாட் எடுக்குறப்போ கார்த்தியும், நிழல்கள் ரவியும் சீன்ல இருக்கணும்னா, மற்ற ஆர்ட்டிஸ்ட் எல்லாருமே சும்மா உட்கார்ந்திருக்கணும். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் லெவலுக்கு ஃபீல் பண்ண ஆரம்பிச்சிட்டேன். நான் மட்டுமில்ல, என்கூட பெரிய ஆர்ட்டிஸ்ட் பலரும் இப்படித்தான் உட்கார்ந்திருக்காங்க. அப்புறம் சூழலைப் புரிஞ்சிக்கிட்டேன். செட்டுக்குள்ள வந்துட்டா ரெஸ்ட் ரூம்கூட போக முடியாது. நாம போட்டிருக்குற டிரஸ் மற்றும் நகைகள் வெயிட் அதிகமா இருக்கும். நடுராத்திரி மூணு மணி வரைக்கும் ஷூட்டிங் போயிட்டிருக்கும். ரெண்டு மணி நேர இடைவெளி. அஞ்சு மணிக்குத் திரும்பவும் ஷூட்டிங் ஆரம்பிச்சிருவார் மணிரத்னம். புது அனுபவமா இருக்கு.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism