Published:Updated:

“ஆஸ்கருக்காகக் காத்திருக்கிறேன்!”

சினிமா இந்த வாழ்க்கையோட ஒரு சின்னப் பகுதி. நிறைய விஷயங்கள் மீதி இருக்கு.

பிரீமியம் ஸ்டோரி
திர்வரும் ஆஸ்கர் விருதுக்கான மெயின்ஸ்ட்ரீம் போட்டியில் இந்தியாவிலிருந்து ‘ம்ம்ம்’ திரைப்படம் தேர்வாகியிருக்கிறது. என்ன முடிவு என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார், கதாநாயகியாக நடித்த செம்மலர் அன்னம்.

‘‘சினிமாவில் நடிகையாகணும்னு கனவெல்லாம் இருந்ததில்லை. அப்பா நல்ல மனிதர். திடீர்னு கடைக்குக் கூட்டிட்டுப் போய் பாய்ஸ் கட் வெட்டிவிட்டு என்னை சுதந்திரமாக இருக்கவிட்டார். நேரத்திற்கு கண்டிப்பாக வந்திடணும்... காலையில் எழுந்து தண்ணீர் தெளித்துக் கோலம் போடணும்ங்கிற விதிகளுக்குள்ள என்னை வைக்கலை. எனக்குச் சின்ன வயதிலிருந்தே டைரக்‌ஷன் மேல கவனம் இருந்தது. வீட்டில் இருக்கும்போது மற்ற நடிகைகள் மாதிரி நடிச்சுப் பார்ப்பேன்.

“ஆஸ்கருக்காகக் காத்திருக்கிறேன்!”
“ஆஸ்கருக்காகக் காத்திருக்கிறேன்!”

கடந்த பத்து வருஷமா வீதி நாடகம், மேடை நாடகம், நடனம், நடிப்புன்னு தொடர்ந்து செயல்பட்டுக்கிட்டிருக்கேன். என் வேலை, வாசிப்பு, பயணம்னு எல்லாமே நடிப்பை நோக்கித்தான் இழுத்திட்டுப் போகுது. கோவையிலிருந்து சென்னைக்கு வந்த புதிதில் இயக்குநர் வஸந்தின் படத்தில் உதவி இயக்குநராக வேலை செய்திருக்கேன். மறைந்த இயக்குநர் அருண்மொழியின் நடிப்புப்பள்ளியில் பயிற்சி பெற்றிருந்தேன். இயக்குநர்கள் லட்சுமி ராமகிருஷ்ணன், பிரம்மா, ஜேஜே பிரெட்ரிக் படங்களில் நடித்தபோது பலரின் கவனத்துக்கு வந்தேன். லீனா மணிமேகலை இயக்கத்தில் நான் நடிச்ச ‘மாடத்தி’ உலகத் திரைப்பட விழாவில் பரபரப்பாகப் பேசப்படுது.

“ஆஸ்கருக்காகக் காத்திருக்கிறேன்!”
“ஆஸ்கருக்காகக் காத்திருக்கிறேன்!”

இப்போ கண்டாலே குற்றம், தீட்டுன்னு சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்படுற, புதிரைவண்ணார் சாதியைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருக்கிறேன். உள்ளூர் மக்களும் நடிக்கும்போது அவர்கள் பேசும் மொழியிலேயே நானும் பேசி நடிப்பது சுலபம் இல்லை. அதைச் சுலபமா தாண்ட லீனா உதவியாக இருந்தார். எனக்கான நல்ல அடையாளத்தை இந்தப்படம் பெற்றுத்தரும்ங்கிற நம்பிக்கை இருக்கு.

“ஆஸ்கருக்காகக் காத்திருக்கிறேன்!”
“ஆஸ்கருக்காகக் காத்திருக்கிறேன்!”

நான் கதாநாயகியா நடிச்ச ‘ம்ம்ம்’ படம், ஆஸ்கர் வரைக்கும் போயிருக்கு. கேரளாவைச் சேர்ந்த விஜேஷ் மணி இயக்கியிருக்கார். குரும்பர் மொழியில் ஒரு சினிமா வெளியாவது இதுவே முதல்முறை. தேன் சேகரிக்கிற ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவளா இதில் வர்றேன். நம் அத்தனை பேருக்குமான உணவுச்சங்கிலியும் பரிமாற்றமும் தேனீக்கள் மூலமே நடக்குதுங்கிறது ஆச்சர்யமான உண்மை. காட்டில் தேன் இருப்பதற்கான ஆதாரங்கள் அழிக்கப்படுது. ஊடுருவுற செல்போன் கோபுரங்கள், தேனீக்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குது. மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் விஜயன் என் கணவராக நடிக்கிறார். இது மனித உணர்வோட ஊர்வலம். இதில் கற்பனையில்லை. இங்கே பயணமாகும் ஒவ்வொருவரின் ஓட்டமும் ஒரு கதை.

“ஆஸ்கருக்காகக் காத்திருக்கிறேன்!”
“ஆஸ்கருக்காகக் காத்திருக்கிறேன்!”

சினிமா இந்த வாழ்க்கையோட ஒரு சின்னப் பகுதி. நிறைய விஷயங்கள் மீதி இருக்கு. இருக்கிறவரைக்கும் சினிமாவின் நல்ல பகுதியில ஒரு நல்ல இடத்தில இருந்துட்டுப் போயிடமுடியுமான்னு பார்க்கிறேன். என் நடிப்பார்வத்துக்கு இன்னும் தீனி கிடைக்கணும்னு விரும்புகிறேன். எல்லா ஜானர்களிலும் நடிக்க ஆசைப்படுறேன்” என்கிறார் செம்மலர் அன்னம்.

ஆசைகள் நிறைவேறட்டும் அன்னம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு