Published:Updated:

சினிமா விகடன் : “வடிவேலு இன்னொரு கமல்ஹாசன்!”

ஆர்தர் வில்சன்
பிரீமியம் ஸ்டோரி
ஆர்தர் வில்சன்

மீடியா வெளிச்சமில்லாமல் இயங்கிவரும் ஆர்தர் வில்சனின் முதல் பேட்டி இதுதான்.

சினிமா விகடன் : “வடிவேலு இன்னொரு கமல்ஹாசன்!”

மீடியா வெளிச்சமில்லாமல் இயங்கிவரும் ஆர்தர் வில்சனின் முதல் பேட்டி இதுதான்.

Published:Updated:
ஆர்தர் வில்சன்
பிரீமியம் ஸ்டோரி
ஆர்தர் வில்சன்

ஆர்தர் வில்சன்... ஒளிப்பதிவாளராக 25 வருடங்களை நிறைவு செய்யவிருக்கிறார். அவர் ஒளிப்பதிவு செய்த பல படங்களும் சூப்பர்ஹிட்டுகள், ப்ளாக்பஸ்டர்கள். இவரது ஃபிலிமோகிராபியைப் பார்த்தால் ஆச்சர்யப்படாதவர்களே இருக்கமாட்டார்கள். பட போஸ்டர்களிலும் டைட்டில் கார்டிலும்தான் இவரைப் பார்க்கமுடியும். அப்படி தனக்கென்று ஒரு கூடு கட்டிக்கொண்டு, மீடியா வெளிச்சமில்லாமல் இயங்கிவரும் ஆர்தர் வில்சனின் முதல் பேட்டி இதுதான்.

``யார்கிட்ட உதவி ஒளிப்பதிவாளரா வேலை செஞ்சீங்க?’’

“சேலம் மாவட்டம், கோனேரிப்பட்டிதான் சொந்த ஊர். சினிமா பத்தியோ ஒளிப்பதிவு பத்தியோ எதுவுமே தெரியாது. ‘இந்த கோர்ஸ் படிச்சா தூர்தர்ஷன்ல வேலை கிடைக்கும்’னு சொல்லி ஃபிலிம் இன்ஸ்டியூட்ல சேர்த்துவிட்டாங்க. கூட படிக்கிற பசங்களை எல்லாம் பார்த்தா பயமா இருக்கும். என்னென்னவோ பேசுவாங்க. ஒரு கட்டத்துல படம் பார்த்தால்தான் கத்துக்க முடியும்னு அவங்களோட சேர்ந்து நிறைய படங்கள் பார்க்க ஆரம்பிச்சேன். அப்படித்தான் சினிமா ஆர்வமாச்சு. 1988-ல இன்ஸ்டியூட்ல படிப்பை முடிச்சதும், வாய்ப்பு தேட ஆரம்பிச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆர்தர் வில்சன்
ஆர்தர் வில்சன்

வேலை கேட்கப் போகும்போது, அந்த ஆபீஸுக்கு வெளியே நிறைய செருப்பு இருந்தா உள்ள போகவே மாட்டேன். கூட்டம்னா அலர்ஜி. பாலுமகேந்திரா சார்கிட்ட சேர நினைச்சு, அவர் வீட்டுக்கு வெளியே ரெண்டு நாள் நின்னேன். அவரைப் பார்க்க முடியலை. மூணாவது நாள் அவரைப் பார்த்துட்டேன். ‘இன்ஸ்டியூட்ல படிச்சிருக்கியா?’ன்னு கேட்டுட்டு, ‘என்கிட்ட நிறைய பேர் இருக்காங்கப்பா. வெளியே முயற்சி பண்ணு’ன்னு சொல்லிட்டார். அடுத்து டி.ராஜேந்தர்கிட்ட சேரலாம்னு நினைச்சேன். அவர் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு, அவரைப் பார்க்காமலே வந்துட்டேன். ‘ஊமைவிழிகள்’ வந்த சமயம். ஆபாவாணன் சார்கூட செல்வகுமார்னு ஒரு கேமராமேன் இருக்கார். ரெண்டு பேரும் சேர்ந்து மறுபடியும் படம் பண்ணப் போறாங்கன்னு சொன்னாங்க. ‘மூங்கில் கோட்டை’ங்கற படம்தான் நான் அசிஸ்டென்டா வேலை செஞ்ச முதல் படம்.”

ஆர்தர் வில்சன்
ஆர்தர் வில்சன்

``ஒளிப்பதிவாளரா முதல் பட வாய்ப்பு?’’

“இன்ஸ்டியூட்ல படிக்கும்போதிலிருந்தே இயக்குநர் கதிர் நல்ல பழக்கம். அவர் இயக்கிய ‘இதயம்’ படத்துல மூணு மாசம் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். அவர் என்கிட்ட, ‘என் அடுத்த படத்துல வொர்க் பண்ணு’ன்னு சொன்னார். அதுதான் ‘காதல் தேசம்’. குஞ்சுமோன் சார்கிட்ட என்னை அறிமுகமும் செஞ்சு வெச்சார், கதிர். அந்தக் கதையுடைய ப்ரீ புரொடக்‌ஷன்ல வேலை செஞ்சேன். அந்த சமயத்துல ‘தென்மாவின் கொம்பத்து’ங்கிற மலையாளப் படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது கே.வி.ஆனந்துக்குக் கிடைச்சது. உடனே, அவரை இந்தப் படத்துக்கு கமிட் பண்ணிட்டாங்க. இந்தத் தகவல் எனக்குத் தெரிஞ்சவுடன் குஞ்சுமோன் சார் ஆபீஸுக்கு வந்தேன். ‘அவர்தான் பண்றார். நீங்க வேற பக்கம் பார்த்துக்கங்க’ன்னு சொல்லிட்டாங்க. கதிர் என்கிட்ட ஒரு வார்த்தைகூட சொல்லலை. அந்த வலி இன்னும் மனசுல இருக்கு. அப்புறம், இன்ஸ்டியூட்ல என் கூட படிச்ச சபாபதி சூப்பர்குட் பிலிம்ஸ் பேனர்ல ‘சுந்தரபுருஷன்’ படம் கமிட்டானார். அந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு தந்தார். ‘60 நாள்ல குறிப்பிட்ட பட்ஜெட்ல படத்தை முடிக்கணும்’னு செளத்ரி சார் சொல்லியிருந்தார். ‘செட்டப்ப மாத்தி’ பாடலுக்காக தனியா ரிக் ஒன்னை டிசைன் பண்ணி அதுல ஷூட் பண்ணேன். அது பிடிச்சுப்போய் செளத்ரி சார் எங்களை சுதந்திரமா விட்டுட்டார். 102 நாள் ஷூட்டிங் பண்ணோம். படமும் நல்ல ஹிட். இதைத் தொடர்ந்து, சபாபதியும் நானும் ‘விஐபி’ பண்ணோம்”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`` ‘வானத்தைப்போல’, ‘ஆனந்தம்’ இந்த ரெண்டு படங்களுமே ஒரே மாதிரி கதைதான். இதுவரை காதல் படங்களா பண்ணிட்டு இருந்த உங்களுக்கு இந்தப் படங்கள் என்ன அனுபவத்தைக் கொடுத்தது?’’

சினிமா விகடன் :  “வடிவேலு இன்னொரு கமல்ஹாசன்!”

“நான் வொர்க் பண்ணினதிலேயே விக்ரமன் சார்தான் பெஸ்ட். ஸ்கிரிப்ட் அவ்ளோ பக்காவா வெச்சிருப்பார். க்ளோஸ் அப் ஷாட்லேயே கதை சொல்லணும்னு நினைப்பார். விஜயகாந்த் சார் தங்கமான மனுஷன். எங்ககூடவேதான் இருப்பார். நைட் ஹோட்டல்ல எங்களோட வந்து கார்ட்ஸ் விளையாடுவார். இன்னொரு காமெடியான நிகழ்வைச் சொல்றேன். ‘தாவணியே என்னை மயக்குறியே’, ‘காதல் வெண்ணிலா’ன்னு ராஜஸ்தான்ல ரெண்டு பாடல்களை எடுக்கணும். அதுக்கு விக்ரமன் சார் வரலை. அசிஸ்டென்ட்ஸைத்தான் அனுப்பிவெச்சார். எடுத்துட்டு வந்ததைப் பார்த்துட்டு அசிஸ்டன்ட்ஸை பயங்கரமா திட்டிட்டார். என்னன்னு விசாரிச்சதுக்குப் பிறகுதான் தெரிஞ்சது, அந்தப் பாடலுக்குக் கொடுக்கவேண்டிய காஸ்ட்யூமை இதுக்கும் இதுக்குக் கொடுக்கவேண்டியதை அதுக்கும் மாத்திக் கொடுத்துட்டாங்க. இப்ப டிவியில அந்தப் பாடல்களைப் போட்டால்கூட சேனலை மாத்திடுவேன்.

சினிமா விகடன் :  “வடிவேலு இன்னொரு கமல்ஹாசன்!”

அடுத்து ‘ஆனந்தம்’. இதனுடைய கதையைக் கேட்கும்போதே யார்யார் எங்கெங்க வருவாங்கன்னு தெரிஞ்சிடுச்சு. ஏன்னா, முன்னாடியே பண்ணிட்டேன்ல. லிங்குசாமி சொன்ன கதை ரொம்ப லைவ்லியா இருக்கும். எப்படி ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி யோசனை வந்ததுன்னு தெரியலை. ஆனா, லிங்குசாமி குடும்பமும் அதே மாதிரிதான்னு தெரியும். அத்தனை பேரை வெச்சு சமாளிக்கிறது பெரிய கஷ்டம். மம்மூட்டி சார் ‘நீ கத்துக்கிறதுக்கெல்லாம் நான் நடிக்கமாட்டேன்’னு கோபப்பட்டுப் போயிடுவார். அப்புறம், எல்லோரும் போய் கூட்டிட்டு வருவாங்க. வெளியே கெத்தா காட்ட முயற்சி பண்ணுவார். ஆனா, உள்ள குழந்தை மாதிரி. ரெண்டு படங்களும் எனக்குத் திருப்தியைக் கொடுத்துச்சு. ரெண்டுமே செம ஹிட்.”

``விஜய்கூட ‘ஷாஜகான்’, அஜித்கூட ‘பூவெல்லாம் உன் வாசம்’னு ரெண்டு படங்கள் ஒரே நேரத்துல பண்ணிட்டு இருந்திருக்கீங்களே?’’

“உண்மையாவே ரொம்ப டென்ஷனா இருந்தது. ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்துக்கு ‘காதல் வந்ததும்’ பாடலை குலுமணாலியில எடுக்கணும். யூனிட் எல்லாம் மணாலி கிளம்பிட்டாங்க. அதனால, நான் அங்கே போக வேண்டியதாகிடுச்சு. அதே நாள், ‘ஷாஜகான்’ல ‘சரக்கு வெச்சிருக்கேன்’ பாடலை சென்னையில செட்ல எடுக்கணும். என் நண்பர் சரவணனை (‘சிலம்பாட்டம்’ பட இயக்குநர்) ‘ஷாஜகான்’ படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணச் சொல்லிட்டு நான் அங்கே போயிட்டேன். விஜய் சாருக்கு என் மேல சின்ன வருத்தம். ‘ஷாஜகான்’ இயக்குநர் ரொம்ப நல்ல மனுஷன். படம் மூணு முறை ட்ராப்பாகி ட்ராப்பாகி ஆரம்பிச்சது. அப்போ அந்த இயக்குநருடைய மனநிலையை யோசிச்சுப் பாருங்க. இன்னமும் போராடிட்டு இருக்கார். அந்தப் படத்துப் பாடல்கள் இன்னிக்கு வரை பேசப்படுதுன்னா அதுக்கு அவர்தான் காரணம். அஜித் ரொம்ப ஜாலியான மனுஷன். இதுக்குப் பிறகு, ‘ஜி’, ‘வரலாறு’ன்னு ரெண்டு படங்கள் அவர்கூட பண்ணினேன்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` ‘பஞ்சதந்திரம்’, ‘பம்மல் கே சம்பந்தம்’, ‘அன்பே சிவம்’னு கமல்ஹாசன்கூட மூணு படங்கள் அடுத்தடுத்து வொர்க் பண்ணியிருக்கீங்களே!’’

சினிமா விகடன் :  “வடிவேலு இன்னொரு கமல்ஹாசன்!”

“ ‘பம்மல் கே சம்பந்தம்’ படத்துக்கு கேமராமேன் சரவணன். இந்தப் படத்து ஷூட்டிங் போயிட்டு இருந்தபோது, யார்கிட்டயும் சொல்லாமல் ‘அரசாட்சி’ங்கிற படத்துக்கு வெளிநாடு போயிட்டார். தேனப்பன் சார் சொல்லி நான் படத்துக்குள்ள வந்தேன். இந்தப் படம் முடிஞ்சவுடன், தேனப்பன் சார் தயாரிப்புல மறுபடியும் ‘பஞ்சதந்திரம்’. கிரேஸி மோகன் சார் எழுதிக் கொடுத்துட்டு ஃபாரின் போயிட்டார். ஸ்பாட்ல கமல் சாரும் ரவிக்குமார் சாரும்தான் எல்லாம். ‘ரன்’ படத்துக்கான டிஸ்கஷன்ல இருந்தேன். கே.எஸ்.ரவிக்குமார் சார் போன் பண்ணி, ‘கமல் சார் உன்னைக் கூப்பிட்டிருக்கார். போய்ப் பாரு’ன்னார். அப்போதான் ‘அன்பே சிவம்’ பண்ணணும்னு சொன்னார் கமல் சார். அந்தப் படத்துக்கு முதல்ல இயக்குநரா இருந்தது ப்ரியதர்ஷன் சார்தான். அப்புறம்தான், சுந்தர்.சி வந்தார். கமல் சார்கூட டிஸ்கஷன் அவ்ளோ பரபரப்பா இருக்கும். எல்லாமே முறையா இருக்கும். நிறைய கத்துக்கலாம். சுந்தர்.சி சாருக்கு சம்பந்தமே இல்லாத படம் அது. சுந்தர்.சி சாருடைய டிஸ்கஷன்ல எல்லோரும் ஜாலியா படுத்துக்கிட்டுக் கதை பேசுவாங்க. இங்க அப்படியில்லை. எல்லோருடைய கையிலயும் பேப்பர் பேனா இருக்கும். முறையா டேபிள்ல உட்கார்ந்து கதை பேசுவாங்க. ‘அன்பே சிவம்’ படத்தைப் பிடிச்சு சுந்தர்.சி சார் அப்படியே வந்திருக்கலாம். ஆனா, அவர் மறுபடியும் ஒரு ஜானருக்குள்ளேயே போயிட்டார். ரொம்பத் திறமையானவர். ஆனா, எதையும் முயற்சி பண்ணமாட்டேங்கிறார். ஏன் மறுபடியும் கமர்ஷியல்ல போய் விழுறார்னு தெரியலை. அது அவர்மேல வருத்தம்.”

`` ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ பீரியட் படம். நிறைய மெனக்கெட வேண்டியிருந்திருக்குமே!’’

“நிறைய ரெஃபரென்ஸ் எடுத்துக்கிட்டு வேலை செஞ்சேன். எம்.ஜி.ஆர் மாதிரி டிரஸ் போடணும்னு வடிவேலுவுக்கு ரொம்ப ஆசை. அந்த ஜோஷ்லேயேதான் நடிச்சிருப்பார். வடிவேலு என்னை எப்போவும் பங்காளின்னுதான் கூப்பிடுவார். மனுஷன் செம ஜீனியஸ். அவர் இன்னொரு கமல்ஹாசன். வடிவேலு டப்பிங் பண்ணும்போது, கூட இருக்கிறவங்களுக்கும் சேர்த்து டப் பண்ணிட்டு வந்திடுவாராம். அவங்க வந்தா, ‘நான் என்ன பேசியிருக்கேனோ அதை அப்படியே பேசச்சொல்லுங்க’ன்னு சொல்லிடுவாராம். அந்த அளவு ஷார்ப். அதனாலதான், அதெல்லாம் எபிக்கா நிக்குது. ”

சினிமா விகடன் :  “வடிவேலு இன்னொரு கமல்ஹாசன்!”

`` ‘நான் கடவுள்’, ‘அவன் இவன்’னு இயக்குநர் பாலாவுடன் பயணிச்ச அனுபவம்?’’

“ ‘பிதாமகன்’ படத்துக்கே பாலா கூப்பிட்டார். அப்போ எனக்கு ஒரு தெலுங்குப் படம் இருந்ததுன்னு பண்ணமுடியலை. அப்புறம், ‘நான் கடவுள்’ பண்ணேன். 299 நாள் ஷூட்டிங் மட்டும் பண்ணினோம். படம் ஆரம்பிச்சு முடிய மூணு வருஷமாகிடுச்சு. அப்புறம், ‘அவன் இவன்’ ரெண்டு வருஷம். மொத்தம் ஐந்து வருடங்கள் அவர்கூடவே ட்ராவல் பண்ணினேன். ஒருநாள் நைட் ஷூட். எல்லாம் ரெடியாகி இருக்கோம். ரெண்டு சாமியார்களைக் காணோம். எங்கேயோ ஓடிட்டாங்க. அப்புறம், அவங்களைக் கண்டுபிடிச்சு, அவங்களுக்குச் சில பொருள்கள் எல்லாம் வாங்கிக்கொடுத்து கூட்டிட்டு வந்தா, ‘சிவன் உத்தரவு கொடுக்கலை. நான் நடிக்கமாட்டேன்’னு சொல்றாங்க. பல லட்சம் செலவு பண்ணி எல்லாம் ரெடி பண்ணிட்டு இருக்கோம். இவங்க இப்படிச் சொல்றாங்களேன்னு கோபமா வரும். உண்மையாவே அகோரிகள் என்னெல்லாம் பண்ணுவாங்களோ எல்லாமே எடுத்தோம். படத்துல நிறைய விஷுவல் வரலை. ‘அவன் இவன்’ படத்துக்கு என்கிட்ட சொன்ன கதை பிரமாதமா இருந்தது. ஆனா, திடீர்னு ஸ்பாட்ல சில விஷயங்களை மாத்திட்டார். ஏன் அப்படி பண்ணார்னு தெரியலை. ஆரம்பத்துல இருந்த கதையை அப்படியே மாத்தாமல் எடுத்திருந்தால் படம் நிச்சயம் பேசப்பட்டிருக்கும். அதனால, இன்னும் நான் அவர்கிட்ட பேசவேயில்லை.”

``முதல் தெலுங்குப் பட வாய்ப்பு?’’

“யாரோ என்னைப் பத்திச் சொல்லி என்னை ‘பத்ரா’ங்கிற படத்துக்குக் கூப்பிட்டாங்க. பொயப்புடி ஸ்ரீனுதான் இயக்குநர். அவருக்கு கொஞ்சம் தமிழ் தெரியும். கமர்ஷியலா சூப்பரா எடுப்பார். டெக்னீஷியன்களை எக்காரணத்துக்கும் விட்டுக்கொடுக்கமாட்டார். அவருக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருக்கும். அதனால, அடுத்தடுத்து வொர்க் பண்ணோம்.”

`` ‘அவன் இவன்’ படத்துக்குப் பிறகு, நீங்க தமிழ்ல பண்ற படம், ‘பாரிஸ் ஜெயராஜ்’. சந்தானம் என்ன சொல்றார்?’’

“நண்பர் ஒருத்தர் மூலமா இந்தப் பட டீமை சந்திச்சேன். ‘ஏன் சந்தானம் ஹீரோவாகணும்? காமெடியனா இருந்தார்னா இப்போவரை ரொம்ப பிஸியாதான் இருந்திருப்பார். யாராவது இவரைத் தூண்டிவிட்டாங்களோ’ன்னு எல்லோருக்கும் தோணுற மாதிரி எனக்குத் தோணுச்சு. ஷூட்டிங்ல அவர் நடிக்கிறதைப் பார்த்ததும் இவர் ஹீரோவா நடிக்கலாம்னு தோணுச்சு. காரணம், டான்ஸ், பைட்னு எல்லாமே நல்லா பண்றார். ஹியூமர் சொல்லவே தேவையில்லை. சரியான கதைகளைத் தேர்ந்தெடுத்தால் நிச்சயமா பெரிய ஹீரோவா வருவார். இதையெல்லாம் நான் அவர்கிட்டேயே சொன்னேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism