Published:Updated:

"சின்ன வயசிலேயே கேமரா வெளிச்சம் விழுந்திடுச்சு!”

ப்ரீத்தா ஜெயராமன்
பிரீமியம் ஸ்டோரி
ப்ரீத்தா ஜெயராமன்

“ஒருவேளை ராதாமோகன் அப்படி நினைச்சிருக்கலாம்.

"சின்ன வயசிலேயே கேமரா வெளிச்சம் விழுந்திடுச்சு!”

“ஒருவேளை ராதாமோகன் அப்படி நினைச்சிருக்கலாம்.

Published:Updated:
ப்ரீத்தா ஜெயராமன்
பிரீமியம் ஸ்டோரி
ப்ரீத்தா ஜெயராமன்

“பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். எனக்கு ரொம்பப் பிடிச்ச துறையில வேலை பார்த்துட்டிருக்கேன். எத்தனை பொண்ணுங்களுக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும்னு தெரியல. ஆசீர்வதிக்கப் பட்டவளா உணர்றேன்.’’ என்கிறார் சினிமா ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன். மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் ஒளிப்பதிவாளர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“பி.சி.ஸ்ரீராம் என் தாய்மாமா. அவரை சின்ன வயசுல இருந்து பார்த்து வளர்ந்ததனாலேயே எனக்கும் கேமரா பிடிக்க ஆரம்பிச்சிருச்சு. என் அம்மா அடிக்கடி, ‘நீ கருவறையில இருந்ததுல இருந்தே கேமரா வெளிச்சம் உன்மேலே விழ ஆரம்பிச்சிருச்சு.

ப்ரீத்தா ஜெயராமன்
ப்ரீத்தா ஜெயராமன்

அதனாலேயே நீ இந்தத் துறைக்கு வந்துட்டே’ன்னு சொல்லுவாங்க. சின்ன வயசுல மாமா கேமரா லைட்டிங் செக் பண்ணிப் பார்க்கணும்னா வீட்டுல இருக்குறவங்க மேலேதான் முதலில் கேமரா ஒளியைப் படர விடுவார். அப்படி என் மேலேயும் பி.சி மாமாவின் கேமரா ஒளி பட்டிருக்குன்னு நினைக்குறேன். அஞ்சு வருஷம் பி.சி.மாமாகிட்டதான் ஒளிப்பதிவு கத்துக்கிட்டேன். இந்தத் துறைக்கு வந்து 17 வருஷம் ஆச்சு. தமிழ், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம்னு பல மொழிப் படங்களிலும் வேலை பார்த்திருக்கேன்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மணிரத்னம் தயாரிப்பில் முதல் படம். எப்படியிருந்தது?

“மணி சார்கூட வேலை பார்க்க எல்லாரும் ஆர்வமா இருப்பாங்க. அவர் தயாரிக்குற நிறுவனத்துல இருந்து போன் வந்தது. இயக்குநர் தனாவை நேர்ல பார்த்துக் கதை கேட்டேன். வித்தியாசமான ஜானரா இருந்தது. இரண்டு தலைமுறைகளை ஒளிப்பதிவுல காட்ட வேண்டியிருந்தது. வித்தியாசமான இரண்டு டோன்ஸ். சென்னையின் முக்கியப் பகுதிகளான கோயம்பேடு மார்க்கெட், திருவல்லிக்கேணி ஏரியாவுல லைவ் லொகேஷனில் ஷூட் பண்ணினோம். வித்தியாசமான அனுபவத்தை இந்தப் படம் கொடுத்திருக்கு. ஃபர்ஸ்ட் காப்பி ரெடியானவுடனே மணி சார் பார்த்துட்டுப் பாராட்டினார்.”

ப்ரீத்தா ஜெயராமன்
ப்ரீத்தா ஜெயராமன்

நீங்க வேலை பார்த்திருக்கும் பெரும்பாலான தமிழ்ப் படங்கள் கலைப்படங்கள். கமர்ஷியல் படங்களில் பெரிய நாட்டமில்லையா?

“கன்னடத்துல கமர்ஷியல் படங்கள் பண்ணினேன். தமிழில் அப்படிப்பட்ட வாய்ப்புகள் அமையல. என்னைப் பொறுத்தவரைக்கும் சில வரையறைகளுக்கு உட்பட்டு வேலை பார்க்க மாட்டேன். எல்லா விதமான ஜானர் படங்களும் பண்ணணும்கிறதுதான் என் எண்ணம். ராதாமோகனின் ‘கெளரவம்’ படத்தில் வேலை பார்த்தப்போ நிறைய ஆக்‌ஷன் சீக்வென்ஸ் இருந்துச்சு. ஒரு பெண் ஒளிப்பதிவாளர் அப்படிங்கிறதனால கேமராவைத் தூக்குறதே கஷ்டமா இருக்கும்னு நிறைய பேர் நினைச்சாங்க. ஆனா, அது ரொம்பத் தப்பு. உடலளவிலும் மனதளவிலும் விருப்பப்பட்டுதான் இந்தத் துறைக்கு வந்திருக்கேன். அதனால் எல்லாத்துக்கும் தயாராதான் இருக்கேன்.”

இந்தத் துறையில் உங்களுக்கு சவாலா இருக்கிற விஷயங்கள் என்ன?

“தொடர்ந்து வேலை செஞ்சிட்டு இருக்கணும்னு நினைக்கிறேன். நமக்கான வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கிறதே சவாலான விஷயமாதான் இருக்கு. போட்டிகள் அதிகம். நாம் நல்ல படங்களில் வேலை பார்த்திருந்தா மட்டும் பத்தாது. அந்தப் படங்கள் நல்லா ஓடணும். எனக்கு இடையில இடைவெளி விழுந்தது. அப்போ கஷ்டமா இருக்கும். அந்த நேரங்களைக் கடந்து வர்றது பெரிய சவாலா இருக்கும். இந்த நேரங்களில் நானே ஸ்க்ரிப்ட் எழுத ஆரம்பிப்பேன். நிறைய இயக்குநர்களுக்கு போன் பண்ணிப் பேசியிருக்கேன். எல்லாக் காலமும் இப்படி இருக்காது, மாறும்னு நம்பிக்கையோடு இருப்பேன். மாறிக்கிட்டே வருது.”

அதிகமான ராதாமோகன் படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கீங்க, பெண்களை மையமா வைத்த கதாபாத்திரம்ங்கிறதனாலதான் உங்களைத் தேர்வு செய்தாரா?

“ஒருவேளை ராதாமோகன் அப்படி நினைச்சிருக்கலாம். ‘அபியும் நானும்’ படம் அப்பா பொண்ணுக்கு இடையேயான உறவைப் பத்திச் சொல்லும். அதுக்காகக்கூட இருக்கலாம்.

வானம் கொட்டட்டும் படம்
வானம் கொட்டட்டும் படம்

நம்மளத் தேடி வர்ற வேலையை நாம எடுத்துக்கலாம்னு மட்டும்தான் வேலை பார்த்தேனே தவிர, பெண்களை மையமா வெச்ச படத்துல வேலை பார்க்கணும்னு போனதில்லை. பாலினம் வேலை பார்க்கிற இடத்துல பெரிய உறுத்தலா இருக்கிறதாத் தெரியல. ராதாமோகன் எனக்கு நல்ல நண்பர். அதுவும் அவர் படங்களில் நான் அதிகம் வேலை பார்த்ததுக்குக் காரணம்.”

ஒவ்வொரு படத்துக்குமான ஒளிப்பதிவு டோனை எப்படித் தேர்ந்தெடுப்பீங்க?

“படத்தோட கதையைப் படிக்கிறப்போ மனசுல காட்சிகள் ஓட ஆரம்பிக்கும். அப்போ எனக்குத் தோணுற விஷயங்களை இயக்குநருடன் பேசுவேன். ஒளிப்பதிவாளரா இறங்குறப்போ நிஜ வாழ்க்கையில் பார்த்த சில காட்சிகள் நமக்கு உதவியா இருக்கும். அதை அடிப்படையா வெச்சுட்டு வேலை பார்க்க ஆரம்பிப்பேன். டிஸ்கஷன் பண்றப்போ பேசுற விஷயங்களெல்லாம் ஸ்பாட்டுக்குப் போறப்போ மாறிடும். அப்போ அங்கே இருக்கிற டோனுக்கு ஏத்த மாதிரி லைட்டிங் செட் பண்ணிடுவேன். படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போறதுக்கு முன்னாடியே படம் பத்தி எல்லா லைட்டிங் விஷயங்களையும் நோட் புக்ஸ்ல ரெடி பண்ணிடுவேன். இது எல்லாத்துக்கும் ஹோம் வொர்க் ரொம்ப முக்கியம்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism