Published:Updated:

“நீங்களே எதிர்பார்க்காத நிறைய ஹீரோயின்ஸ் இருக்காங்க!”

பிரபுதேவா
பிரீமியம் ஸ்டோரி
பிரபுதேவா

இவங்களைத் தவிரவும் சில நடிகைகள் படத்தில் நடிச்சிருக்காங்க. படம் பார்க்கும்போது அது உங்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும்.

“நீங்களே எதிர்பார்க்காத நிறைய ஹீரோயின்ஸ் இருக்காங்க!”

இவங்களைத் தவிரவும் சில நடிகைகள் படத்தில் நடிச்சிருக்காங்க. படம் பார்க்கும்போது அது உங்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும்.

Published:Updated:
பிரபுதேவா
பிரீமியம் ஸ்டோரி
பிரபுதேவா
“ ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துக்கு அப்புறமே ‘பஹிரா’ படத்தைப் பண்றதுதான் என்னோட பிளானா இருந்தது. ஆனால், ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துக்கு வந்த விமர்சனங்களைப் பார்த்தபிறகு வேற ஒரு ஜானரில் படம் பண்ணலாம்னு நினைச்சேன். சிம்பு அண்ணாவை வெச்சு கமர்ஷியலா ஒரு படம் பண்ணலாம்னு ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை ஆரம்பிச்சேன். அந்தப் படம் ரிலீஸானதுக்கு அப்புறம் எல்லாரும் பயங்கரமா ட்ரால் பண்ணிட்டிருந்தாங்க. அதைத் தப்பு சொல்லலை; ட்ரால் பண்ணவேண்டிய படமாகத்தான் அதுவும் இருந்துச்சு. அந்த விமர்சனங்களுக்கு அப்புறம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ பட ஜானரில் ஒரு ஹாரர் படம் பண்றதுக்கான வாய்ப்பு வந்துச்சு. ‘பழைய ஐடியாக்கள் வேண்டாம்’னு ஒரு புது ஐடியாவைச் சொல்லி, அதை 3டி-யில் எடுக்கலாம்னு முடிவு பண்ணி ஆரம்பிச்சதுதான், ‘காதலைத்தேடி நித்தியா-நந்தா.’ நித்தியாங்கிற பொண்ணும் நந்தாங்கிற பையனும் காதலைத் தேடிப் போறதுதான் கதை. ஃபேன்டஸி லவ் ஸ்டோரியா எடுக்குறேன். ‘பஹிரா’ ரிலீஸுக்கு அப்புறம், அந்தப் படத்தோட வேலைகளை பார்க்கணும்” - தனது அடுத்தடுத்த பிளான்களை அடுக்குகிறார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
பிரபுதேவா
பிரபுதேவா
பிரபுதேவா
பிரபுதேவா

`` ‘பஹிரா’ கதைக்குள் பிரபுதேவா எப்படி வந்தார்..?’’

“ஜி.வி.பிரகாஷை வெச்சு ‘காதலைத்தேடி நித்தியா-நந்தா’ படத்தைப் பண்ணிட்டிருந்தப்போ, ஒளிப்பதிவாளர் அபிநந்தன்கிட்ட ‘பஹிரா’ படத்தைப் பற்றிச் சொன்னேன். ஒன்லைனைக் கேட்டுட்டு, ‘யார் நடிச்சா நல்லா இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க’ன்னு கேட்டார். ‘பிரபு மாஸ்டர் நடிச்சா நல்லாருக்கும். ஆனால், அவர் பண்ணுவாரான்னு தெரியலை. ஏன்னா, இதில் ஹீரோ கேரக்டர் நல்லவன் கிடையாது’ன்னு சொன்னேன். ‘கேட்டுப் பார்ப்போம்’னு சொல்லி அபிநந்தன்தான், என்னையும் பிரபு மாஸ்டரையும் சந்திக்க வெச்சார்; இயக்குநர் ஏ.எல்.விஜய் சாரும் பிரபு மாஸ்டர்கிட்ட என்னைப் பற்றிச் சொல்லியிருந்ததால, உடனே மாஸ்டர் கதை கேட்டார். ஆறு மாசம் கழிச்சி மறுபடியும் கதை சொல்றதுக்காக வரச்சொன்னார். ‘கதை ரொம்ப நல்லா இருக்கு; உடனே பண்ணிடலாம்’னு சொன்னார். ‘பஹிரா’ ஆரம்பமாச்சு. இதுவரைக்கும் அவர் இரண்டு படங்களில் மட்டும்தான் தாடி இல்லாமல் நடிச்சிருக்கார். இந்தப் படத்துக்காக தாடியை எடுத்ததோடு, மொட்டையும் அடிச்சிட்டார். முதலில் மொட்டை அடிக்காமல் அதை மேட்ச் பண்றமாதிரி மேக்கப் பண்ணிக்கலாம்னு சொன்னேன். ஆனால், ‘பரவாயில்லை. மொட்டை அடிச்சுக்கிறேன்’னு சொல்லிட்டார். அப்போதான் இந்தக் கதை மேல அவர் ரொம்ப நம்பிக்கை வெச்சிருக்கார்னு தோணுச்சு. நடிக்கும்போதும் நான் சொல்ற மாதிரி ஒரு வெர்ஷன் நடிச்சுக் கொடுப்பார். அவரோட வெர்ஷனா ஒரு நடிப்பும் கொடுப்பார். ரெண்டுமே வேற லெவல்ல இருக்கும். ரெண்டையும் சேர்த்துத்தான் படத்தில் யூஸ் பண்ணியிருக்கோம். இந்தப் படம், எங்க ரெண்டு பேருக்கும் இடையே இயக்குநர் - நடிகர் என்பதைத் தாண்டி அண்ணன் - தம்பிங்கிற நல்ல உறவையும் உருவாக்கியிருக்கு. ‘பஹிரா’ ஷூட்டிங் நடந்திட்டு இருந்தப்போதான், திடீர்னு சல்மான் கான் சார் ‘தபாங் - 3’ பண்றதுக்காக பிரபு மாஸ்டரைக் கூப்பிட்டார். எங்களைக் கொஞ்சம் வெயிட் பண்ணச் சொல்லிட்டு பிரபு மாஸ்டர் அந்தப் படத்தை டைரக்ட் பண்ணப் போயிட்டார். எங்களை வெயிட் பண்ண வெச்சிட்டோமேன்னு நினைச்சு, ‘ஆதிக், நீங்க எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க. அந்த சமயத்தில் ‘தபாங் - 3’ படத்தோட தமிழ் வெர்ஷனுக்கு டயலாக் எழுதித் தர்றீங்களா’ன்னு கேட்டு, அந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தார். எத்தனை பேர் இப்படிப் பண்ணுவாங்கன்னு தெரியலை. அதனாலதான் அவர் லெஜென்டா இருக்கார்.’’

பிரபுதேவா
பிரபுதேவா
பிரபுதேவா
பிரபுதேவா

``பிரபுதேவா படங்களில் டான்ஸ் எப்போதுமே ஸ்பெஷல்தான். இதில் எப்படி..?’’

“அவரோட டான்ஸைப் பார்க்கிறதுக்கு உலகம் முழுக்கவும் ரசிகர்கள் இருக்காங்க. ஆனால், ‘இந்தப் படத்தில் பிரபு மாஸ்டர் நடிப்புல பின்னிட்டார்யா’ன்னு படம் பார்க்கிற எல்லாரும் சொல்லணும்னு நினைச்சேன். அதுனால, என் முழுக்கவனமும் அவர்கிட்ட இருந்து வித்தியாசமான நடிப்பை வாங்கணும்கிறதாதான் இருந்துச்சு. இருந்தாலும், டான்ஸ்ல ஏதாவது மேஜிக் பண்ணணும்னு நினைச்சேன். அப்படித்தான் ‘ராஜு சுந்தரம் மாஸ்டர் - பிரபு மாஸ்டர்’ங்கிற எவர்கிரீன் காம்போவை இந்தப் படத்தில் எங்கேயாச்சும் கொண்டு வந்திட நினைச்சேன். படத்தோட ஒரு ஜாலியான பாட்டுல அது அமைஞ்சது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவங்க சேர்ந்து வொர்க் பண்றதைப் பார்த்தப்போ அவ்வளவு அழகா இருந்துச்சு.”

பிரபுதேவா
பிரபுதேவா

``படத்தில் பல ஹீரோயின்ஸ் இருக்காங்களே..?’’

“படத்தோட ஹீரோ கேரக்டர் சைக்கோ; அந்தக் கேரக்டரோட வாழ்க்கையில் பல பெண்கள் வந்துபோறாங்க. அந்தக் கேரக்டர்களுக்கெல்லாம் முகம் தெரிந்த நடிகைகளையே நடிக்க வைக்கலாம்னு கேட்டப்போ, யாருமே நோ சொல்லலை. ஏன்னா, இதை அவங்க ஒரு கேரக்டர்னுதான் பார்த்தாங்க. இதில் நடிச்சிருக்கிற எல்லா நடிகைகளுக்கும் தனித்தனி போர்ஷன் இருக்கு. யாரும் சும்மா, வந்துபோன மாதிரி இருக்க மாட்டாங்க. ‘அனேகன்’ படத்தில் நடிச்ச அமைரா தஸ்தூர்தான் மெயின் ஹீரோயின். அவங்களைத் தவிர சோனியா அகர்வால், ரம்யா நம்பீசன், காயத்ரி ஷங்கர், ஜனனி ஐயர், சாக்ஷி அகர்வால், சஞ்சிதா ஷெட்டின்னு எல்லா நடிகைகளுக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்கும். இவங்களைத் தவிரவும் சில நடிகைகள் படத்தில் நடிச்சிருக்காங்க. படம் பார்க்கும்போது அது உங்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும்.”

ஆதிக் ரவிச்சந்திரன்
ஆதிக் ரவிச்சந்திரன்

``நடிகர் ஆதிக் ரவிச்சந்திரன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு அப்புறம் எந்தப் படத்திலும் நடிக்கலையா..?’’

“நடிக்கணும்னு எனக்கு ஆசை வந்ததே கிடையாது. கே.எஸ்.ரவிக்குமார் சார் மாதிரி நான் இயக்குற படங்களில் சின்னச் சின்ன கேமியோவில் நடிக்கணும்னு ஆசைப்பட்டேன்; அவ்வளவுதான். ஆனால், ‘கே13’, ‘நேர்கொண்ட பார்வை’ மாதிரியான படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடிப்பேன்னு நானே நினைக்கலை. ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் ‘எதுக்குடா இது நடக்குது’ன்னு அவங்களுக்கே தெரியாமல் பல கஷ்டங்கள் வரும். அடிக்கு மேல அடியா பல அடிகள் விழுந்ததுக்கு அப்புறம், அந்த அடிகளுக்கு பதில் சொல்ற மாதிரி வாழ்க்கையில் ஒரு அழகான விஷயம் வந்துபோகும். அப்படிப் பல அடிகளுக்கு அப்புறம் என் வாழ்க்கையில் வந்த அழகான விஷயம்தான் அஜித் சார்கூட நடிச்சது. ஒரு ரசிகரா அவரை நேரில் பார்த்துப் பேசணும்னு பல வருடங்களாக ஆசைப்பட்டிருக்கேன். ஆனால், அவரோட சேர்ந்து நடிக்கிறதுக்கும்; அவர்கூட பல நாள்கள் ட்ராவல் பண்றதுக்கும் வாய்ப்பு கிடைச்சப்போ செம ஹேப்பியா இருந்தது. அவர்கூட வொர்க் பண்ணிட்டு வந்ததுக்கு அப்புறம், அடுத்து நான் இயக்குற படங்களிலும் நடிக்கிற படங்களிலும் ரொம்பவே கவனமாக இருக்கணும்னு முடிவு பண்ணினேன். ‘நேர்கொண்ட பார்வை’க்கு அப்புறம், விக்ரம் சாரோடு ‘கோப்ரா’ படத்தில் நடிச்சிருக்கேன்.”

பிரபுதேவா
பிரபுதேவா
“நீங்களே எதிர்பார்க்காத நிறைய ஹீரோயின்ஸ் இருக்காங்க!”

``உங்களுக்கும் சிம்புவுக்குமான நட்பு எந்த அளவில் இருக்கு..?’’

“சினிமாவில் இன்னைக்கு ஒண்ணு நடக்கும்; நாளைக்கு ஒண்ணு நடக்கும். சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி நாமளும் அதை சமாளிச்சுப் போயிடணும். நேத்து நடந்ததையே நினைக்கிட்டு இருக்கக்கூடாது. அந்த மாதிரிதான் எனக்கும் சிம்பு அண்ணாவுக்கும் இடையில் நடந்தது. அந்தச் சம்பவத்துக்கு அப்புறம் சிம்பு அண்ணாவுக்கு நானோ, எனக்கு சிம்பு அண்ணாவோ எதிரியாக மாறிக்கலை. அந்தச் சூழ்நிலையில் அப்படி ஒரு விஷயம் நடந்திடுச்சு. அது யாரால நடந்துச்சுன்னு இன்னமும் உட்கார்ந்து யோசிச்சிட்டு இருக்கக்கூடாது; அதைக் கடந்து வந்திடணும். நாங்க ரெண்டு பேருமே அதைக் கடந்து வந்திட்டோம். சிம்பு அண்ணாவும் தன்னை மாத்திக்கணும்னு நினைச்சார்; இப்போ வேற மாதிரி மாறிட்டார். ‘ஈஸ்வரன்’ படத்துல அவரோட லுக்கைப் பார்க்கும் போது ‘கோவில்’ படத்தில் இருந்த மாதிரி இருக்கார். பயங்கர பாசிட்டிவ்வா இருக்கார். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தோட டீசரைப் பார்த்துட்டு முதலில் போன் பண்ணி, ‘டீசர் நல்லா இருக்கு; படமும் நிச்சயமா நல்லா வரும்’னு சொன்னது, சிம்பு அண்ணாதான். அதுக்கப்புறம் என்மேல நம்பிக்கை வெச்சு, ‘எனக்கு ஏதாவது கதை இருந்தால் சொல்லு’ன்னு கேட்டப்போ, அவரைப் பிரமிப்பா பார்த்தேன். அப்படித்தான் இப்போதும் பார்க்கிறேன். அப்போதும் இப்போதும் என் மனசுல அவர் ஒரே மாதிரிதான் இருக்கார்.”