Published:Updated:

“எந்தக் கிசுகிசுவிலும் சிக்க மாட்டேன்!”

சசிகுமார்
பிரீமியம் ஸ்டோரி
சசிகுமார்

படங்கள்: தீரன்

“எந்தக் கிசுகிசுவிலும் சிக்க மாட்டேன்!”

படங்கள்: தீரன்

Published:Updated:
சசிகுமார்
பிரீமியம் ஸ்டோரி
சசிகுமார்
சினிமாவுக்குள் வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. பல ஏற்ற இறக்கங் களுக்குப் பிறகும் இன்னும் நிலையாய் நிற்கிறார் சசிகுமார். முதன்முதலாக ஒரு முழுநீள நகைச்சுவைப்படத்தில் சசிகுமார். ‘எம்.ஜி.ஆர் மகன்’ பட ரிலீஸுக்காகக் காத்திருந்தவரிடம் பேசினேன்.

‘‘நிறைய தலைப்புகளை யோசித்ததில் இந்த ‘எம்.ஜி.ஆர் மகன்’ ரொம்பப் பொருத்தமா இருந்தது. அப்பாவுக்கும் மகனுக்குமான உறவுதான் இந்தப் படம். இயக்குநர் பொன்ராம் ஸ்டைலில் செம ஜாலியா இருக்கும். மத்தியானம் பிரேக்ல நானும் சத்யராஜ் சாரும் சமுத்திரக் கனியும், சிங்கம் புலியும் உட்கார்ந்து பேசினால் எம்.ஜி.ஆர் பற்றிப் பல சுவாரஸ்யமான செய்திகளை சத்யராஜ் சொல்வார். ரொம்பக் கலகலப்பான மனிதர். ஷூட்டிங் முடிஞ்சபிறகும் அப்பப்போ பேசிக்கிறோம்” உற்சாகத்துடன் ஆரம்பிக்கிறார்.

சசிகுமார்
சசிகுமார்

``இவ்வளவு நகைச்சுவையா நீங்க படம் நடிச்சது இல்லையே...’’

“அப்படியான கதையும் எனக்கு வந்ததில்லையே! மதுரைப்புழுதியை அப்பிக்கிட்டு, ஆளுக்கு ஒரு கத்தியைச் செருகிக்கிட்டு ஒவ்வொரு மனுஷனையும் தூக்கிப் போட்டுப் பந்தாடுறமாதிரியான படங்கள்தானே அமைஞ்சது? எனக்கு மட்டுமா, சமுத்திரக்கனிக்கும் அப்படித்தான். நாங்க சேர்ந்தாலே ஆளுக்குப் பத்து அட்வைஸ் சொல்லாம விட மாட்டோம். ஆனா ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தில் எங்களுக்கு அறிவுரை சொல்லித் திருத்தப் பார்க்கிற அளவுக்கு அலப்பறை கேரக்டர்ஸ். அரை டவுசர் போட்டுக்கிட்டு கனி அவ்ளோ அட்டூழியம் பண்ணுவார்.

சசிகுமார்
சசிகுமார்

சிவகார்த்திகேயனும், சூரியும் ஒரு இடத்தை நிரப்புவாங்கல்ல... அந்த மாதிரி நானும் சமுத்திரக்கனியும் இருக்கோம். கனி வேட்டி உடுத்தாமல் டிரவுசர் போட்டுட்டு சபதம் எடுக்கிறதுதான் படமே.

என் பெயரே இதில் அன்பளிப்பு ரவி. ஊருக்கு பிரசிடன்ட்டாக இருந்துகிட்டே அதகளம் பண்ற காட்சிகள் இருக்கே, உங்ககிட்ட பேசும்போதே நினைச்சு நினைச்சு சிரிப்பு வருது. டிக்டாக்கில் பெயர் வாங்கின மிருணாளினி ரவிதான் ஹீரோயின். டிக்டாக்கிலேயே நவரசம் காட்டின பொண்ணு. பிரமாதப்படுத்தியிருக்காங்க.”

சசிகுமார், சத்யராஜ்
சசிகுமார், சத்யராஜ்

``ஜோதிகா, சமுத்திரகனிகூட நடிக்கிற படத்தை இன்னொரு பாசமலர்னு பேசிக்கிறாங்க...’’

“உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா... இயக்குநர் இரா.சரவணனின் ‘கத்துக்குட்டி’ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. முடியாமல்போச்சு. இந்தப் படத்தோட கதை மனதைத்தொட்டது. நானும் ஜோதிகா மேடமும் அண்ணன் தங்கையாக நடிக்கிறோம். அதிரடியான அண்ணன், நேர்மையான கணவர் என எங்க இரண்டு பேரையும் தோளில் தாங்கற, அன்பால, பாசத்தால் நிறைக்கிற சகோதரியா ஜோதிகா மேடமும் சிறப்பாப் பண்ணியிருக்காங்க.”

சசிகுமார்
சசிகுமார்

``இதுவரை எந்தக் கிசுகிசுவிலும் சிக்காத ரகசியம்?’’

“கிசுகிசு எழுதித்தான் பாருங்களேன்! வம்பு தும்புக்குப் போகாம என் வேலையை மட்டும் பார்க்கிறதையுமா ‘ஏன் இப்படி இருக்கீங்க’ன்னு கேட்பீங்க? கூட நடிக்கும் பெண்கள்கிட்ட பேசாம ‘உம்’னு இருக்கிறதில்லை. ஆனா கிசுகிசுவில் சிக்கிற அளவுக்குப் பழகிறதில்லை. ‘இப்படி இருங்க’, ‘அப்படி இருங்க’ன்னு யாரையும் சொல்றதுக்கு முன்னாடி நானே அப்படி இருந்திடு வேன். அப்படி இருந்தாலே மத்தவங் களுக்கும் அந்த ஒழுங்கு வந்துடும். பல கஷ்டங்கள் பட்டு மேலேறி வந்திருக்கேன். கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் குவிஞ்சு கிடக்குங்க.”

சசிகுமார், சமுத்திரக்கனி
சசிகுமார், சமுத்திரக்கனி

`` ‘சுப்ரமணியபுரம்’ படத்திற்குப் பிறகு அப்படி ஒரு படத்தை எடுக்க ரெடியா இருக்கீங்களா?’’

“அதுக்கு கொஞ்சம் மனசு ஃப்ரீயா இருக்கணும். நடிக்கிற படங்கள் இன்னும் சிலது முடிக்க வேண்டி யிருக்கு. அதெல்லாம் முடிஞ்சபிறகு டைரக்‌ஷ னில் கண்டிப்பா இறங்குவேன். ஏன்னா, அந்த சினிமா எனக்கு 24 மணி நேர வேலை. இப்ப மாதிரி ஷூட்டிங் முடிஞ்சதும் வீட்டுக்குப் போயிட முடியாது.”

`` ‘முந்தானை முடிச்சு’ ரீமேக்கில் நீங்கள்... எப்படியிருக்கு?’’

“பிரமாதமான குடும்பப்படம். ஸ்கிரிப்ட்டாகவும் பாக்யராஜ் சாரோட பெஸ்ட் ஒர்க். படத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கு. இந்தக் காலத்திற்கு இப்படி ஒரு பள்ளிக்கூட வாத்தியார், பரிமளா, தவக்களை இருந்தால் எப்படி இருப்பாங்க? அதையும் பாக்யராஜ் சாரே எழுதினால் எப்படி இருக்கும்னு நானும் எதிர்பார்க்கிற படம். இது முந்தானை முடிச்சுதான். ஆனா வேற மாதிரி இருக்கும். பாக்யராஜ், ஊர்வசி, தவக்களை என்று எல்லோரும் மாறலாம். ஆனால், ஒன்றே ஒன்று மாறாதது... அது முருங்கைக்காய்தான்.”

வழக்கம்போல் கண்கள் சுருக்கிச் சிரிக்கிறார்.