Published:Updated:

சினிமா விகடன்: “நூறு கிலோ வெயிட் இருந்தேன்!”

பாலாஜி தரணிதரன், காளிதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
பாலாஜி தரணிதரன், காளிதாஸ்

காளிதாஸ் தொடர்ந்தார். ‘‘கொஞ்சம் டிப்ரஷன்ல இருந்த நேரம் இது. ‘இனி நமக்கு சினிமா சரியா வராது’ன்னு முடிவு பண்ணிட்டு யுஎஸ்ல படிச்சிட்டு இருந்தேன்.

சினிமா விகடன்: “நூறு கிலோ வெயிட் இருந்தேன்!”

காளிதாஸ் தொடர்ந்தார். ‘‘கொஞ்சம் டிப்ரஷன்ல இருந்த நேரம் இது. ‘இனி நமக்கு சினிமா சரியா வராது’ன்னு முடிவு பண்ணிட்டு யுஎஸ்ல படிச்சிட்டு இருந்தேன்.

Published:Updated:
பாலாஜி தரணிதரன், காளிதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
பாலாஜி தரணிதரன், காளிதாஸ்
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’... இந்த இரு படங்களுக்கு மத்தியில் இயக்குநர் பாலாஜி தரணிதரனின் படைப்பு ‘ஒரு பக்க கதை.’ படம் ரெடியாகி ஐந்து வருடங்களுக்கு மேலாகியும், ரிலீஸாகாமல் தள்ளிப்போனது. ஓ.டி.டி-யில் படங்கள் நேரடியாக ரிலீஸாகும் இக்காலத்தில் ஜீ5-ல் வெளியாகவிருக்கிறது. எப்படி இருக்கும் படம்? ஏன் இந்தக் காத்திருப்பு? தெரிந்துகொள்ள இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் நாயகன் காளிதாஸை சந்தித்தேன்.

‘‘ ‘ஒரு பக்க கதை’ ரிலீஸாகப் போற சந்தோஷத்தை எப்படிச் சொல்றதுன்னு தெரியல. நான் ஹீரோவா நடிச்ச முதல் படம். படத்தோட ஷூட்டிங் 2014 டிசம்பர்ல நடந்துச்சு. இப்போ ஒரு பார்வையாளனா இந்தப் படத்தைப் பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கேன். விஜய்சேதுபதி அண்ணாவை திரையில பார்த்து அசந்திருக்கேன். இவர் வாயால என்னோட நடிப்பு நல்லாருக்குன்னு சொன்னது பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு’’ என்ற காளிதாஸ் திரும்பிப் பார்க்க, பாலாஜி தரணிதரன் தொடர்ந்தார்.

சினிமா விகடன்: “நூறு கிலோ வெயிட் இருந்தேன்!”

‘‘படம் எடுத்து முடிச்சிட்டு ரிலீஸாகாம இருந்தப்போ ரொம்பக் கவலையா இருந்தது. ஒரு கட்டத்துக்கு அப்புறம், ‘வர்றப்போ வரட்டும்’னு மத்த வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். அடுத்து ‘சீதக்காதி’ படத்துக்குப் போயிட்டேன். ‘ஒருபக்க கதை’ படத்தில் பல பேருடைய கடின உழைப்பு இருக்கு. காலேஜ் படிக்குற சரவணன் மற்றும் மீரா கேரக்டர்ல காளிதாஸும் மேகாவும் நடிச்சிருக்காங்க. காளிதாஸ், மேகா ஆகாஷ் மற்றும் கோவிந்த் வசந்தாவுக்கு இது முதல் படம். காளிதாஸும், மேகாவும் ரொம்ப நாள் இந்தப் படத்துக்காக உழைப்பைக் கொடுத்தாங்க. தொழில்நுட்பக் கலைஞர்களும் ரொம்ப மெனக்கெட்டிருக்காங்க. யார் என்னைப் பார்த்தாலும், ‘படம் எப்போ ரிலீஸ்’னு கேட்காம இருந்தது இல்ல. இந்தக் கேள்வி எனக்குப் பெரிய வலியைக் கொடுத்திருக்கு. எல்லாருடைய உழைப்பும் வெளியே தெரிய படம் ரிலீஸாகும்னு நினைச்சேன். இதுக்கு அப்புறம் ரிசல்ட், ஆடியன்ஸ் கையில.

மிடில் கிளாஸ் பேமிலில இருக்குற ஒருத்தருக்கு, நினைச்சுக்கூட பார்க்க முடியாத ஒரு விஷயம் நடக்குது. எப்படி இதைப் புரிஞ்சிக்குறோம், எப்படியெல்லாம் ரியாக்ட் பண்றோம், சமூகம் எப்படிப் பார்க்குதுன்னு சொல்லியிருக்கேன். கதையில ஒரு விஷயத்தை ஹேண்டில் பண்ணியிருக்கேன். இதை இப்பவே சொல்லிட்டா சுவாரஸ்யம் போயிரும். அந்த விஷயத்துக்காக விஜய்சேதுபதி பாராட்டினார்.

பாலாஜி தரணிதரன், காளிதாஸ்
பாலாஜி தரணிதரன், காளிதாஸ்

ஹீரோ, ஹீரோயினா சித்தார்த், சமந்தா நடிச்சா நல்லாருக்கும்னு தோணுச்சு. ரெண்டு பேர்கிட்டயும் கதை சொன்னேன். பிடிச்சிருந்தது. ஆனா, பிசினஸ் சம்பந்தப்பட்ட சில காரணங்களால் அவங்க பண்ண முடியல. புதுமுக ஹீரோ, ஹீரோயின் போடலாம்னு முடிவு பண்ணி தேடிட்டு இருந்தப்போ, என் கண்ணுல காளிதாஸ் பட்டார். மிடில் கிளாஸ் பையனுக்கு இருக்குற தெளிவற்ற தன்மை முகத்துல தெரியணும்னு நினைச்சேன். ஒரு விருது விழாவுல காளிதாஸ் மேடையில மிமிக்ரி பண்ணியிருந்தார். இவரைப் பார்த்தவுடனே சரியாயிருப்பார்னு தோணுச்சு. ஆனா, இதுக்கு முன்னாடி வரைக்கும் காளிதாஸை ஹீரோவா நினைக்கவே இல்ல. ஏன்னா, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட புரொமோஷனுக்காக லயோலா காலேஜ் போயிருந்தப்போ இவரைப் பார்த்திருக்கேன். பயங்கர குண்டாயிருந்தார். ‘காளிதாஸா இது’னு ஆச்சர்யம் தாங்கல’’ என்ற பாலாஜி ஹீரோவைப் பார்த்தார்.

‘‘ஆமா, காலேஜ் படிச்சிட்டு இருந்தப்போ பயங்கர பப்ளியா நூறு கிலோவுக்கு மேல இருந்தேன். கஷ்டப்பட்டு அதைக் குறைச்சேன். எனக்குக் கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. சின்ன வயசுல இருந்தே ஹீரோவா வரணும்னு ஆசையிருந்தது. படத்தோட ஹீரோயின் மேகாவும் நானும் ஒரே காலேஜ். இதனால, எங்களுக்குள்ள அறிமுகம் இருந்தது. மியூசிக் டைரக்டர் கோவிந்த் வசந்தாவும் எனக்குப் பழக்கமானவர். இதனால, புதுசா ஒரு யூனிட்டுக்குள்ள போன உணர்வு இல்ல. ரொம்ப என்ஜாய் பண்ணி ஜாலியா நடிச்சேன்.

ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே சோமசுந்தரம் சார் கிட்ட ட்ரெயினிங். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயிற்சி கொடுத்து நடிப்பு சொல்லிக் கொடுத்தார். இந்த ட்ரெயினிங் பீரியட் ரொம்ப நல்லா போச்சு. ஷூட்டிங் முடிஞ்சு இத்தனை வருஷம் கடந்து போயிருந்தாலும், இன்னும் நாங்க கனெக்டடா இருக்கோம். ஒண்ணா கிரிக்கெட் விளையாடுவோம். சொல்லப் போனா ‘பாவக் கதைகள்’க்காக சுதா கொங்கரா மேடம்கிட்ட என்னோட போன் நம்பரைக் கொடுத்ததே இவர்தான்’’ என்றபடி பாலாஜியைப் பார்த்தார் காளிதாஸ்.

‘‘ஆடிஷன் பண்ணுனபோதே இவருக்கு நடிப்பு வருதுன்னு புரிஞ்சிக்க முடிஞ்சது. என்னோட கதைக்கு ஏத்த மாதிரி காளிதாஸை மாத்துறதுக்கு ரிகர்சல் பீரியட் தேவைப்பட்டுச்சு. இவரும், ‘நீங்க என்ன சொன்னாலும் பண்றதுக்கு ரெடியா இருக்கேன் சார்’னு சொல்லிட்டார். படம் பார்த்துட்டு என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாருமே காளிதாஸ் நடிப்பு நல்லாருக்குன்னு வெகுவா பாராட்டுனாங்க. எனக்கு காளிதாஸ் பெருசா வருவார்னு நம்பிக்கை இருந்தது. இடையில, சுதா மேடம் போன் பண்ணி காளி நம்பர் கேட்டாங்க. நல்ல இயக்குநர் நம்பர் கேட்டதே சந்தோஷமா இருந்தது. நம்பர் கொடுத்துட்டு இவர்கிட்ட விஷயத்தைச் சொன்னேன்’’ என்றார் பாலாஜி.

காளிதாஸ் தொடர்ந்தார். ‘‘கொஞ்சம் டிப்ரஷன்ல இருந்த நேரம் இது. ‘இனி நமக்கு சினிமா சரியா வராது’ன்னு முடிவு பண்ணிட்டு யுஎஸ்ல படிச்சிட்டு இருந்தேன். அப்போ, பாலாஜி தரணிதரன் சார் போன் பண்ணி விஷயத்தைச் சொன்னார். கேட்டவுடனே சந்தோஷமா இருந்தது. ஏன்னா, ‘இறுதிச்சுற்று’ படத்தைப் பார்த்திருக்கேன். அப்புறம் சுதா மேடம் படத்தோட பிபிடி அனுப்பி வெச்சிட்டு டிஸ்கஷன் பண்ணினாங்க. புராஜெக்ட் டேக் ஆப் ஆச்சு.’’

‘‘இவரோட உழைப்பு எனக்கே பிரமிப்பா இருக்கும். நாம அறிமுகப்படுத்துன ஹீரோங்குறதைத் தாண்டி, நடிப்புத் திறமை இருக்குற ஒருத்தர். குறிப்பா, ‘பாவக் கதைகள்’ டீசர் பார்த்துட்டு மெசேஜ் பண்ணினேன். ‘உங்க லுக் மற்றும் நடிப்பு நல்லாருக்கு’ன்னு சொல்லியிருந்தேன். திருநங்கை கேரக்டர் பண்றதுக்கு நடிகரா முதல்ல தயாராகணும். சட்டுனு இது அமையாது. நமக்குள்ளயே சின்னதா தயக்கம், கூச்சம் இருந்திருக்கும். கான்பிடன்ட் லெவலே கம்மியா இருக்கும். ஆனா, காளிதாஸ் நார்மலா பண்ணியிருந்தார்’’ என பாலாஜி பெருமைப்பட்டார்.

சினிமா விகடன்: “நூறு கிலோ வெயிட் இருந்தேன்!”

‘‘சுதா மேடத்தின் ஸ்க்ரிப்ட் பார்த்தவுடனே, ‘இந்தக் கேரக்டர்ல நடிச்சுடணும்’னு நினைச்சேன். ‘ஒரு ஆக்டருக்கு லைப்டைம்ல கிடைக்காத வாய்ப்பு கிடைச்சிருக்கு’ன்னு தோணுச்சு. ‘பாவக் கதைகள்’ கேரக்டருக்காக ரொம்பவே மெனக்கெட்டேன். சுதா மேடமும் நிறைய சொல்லிக் கொடுத்தாங்க. படத்தோட டீசர் பார்த்துட்டு நிறைய பாசிட்டிவ் மெசேஜ்கள் வருது’’ என எமோஷனலாகச் சொன்னார் காளிதாஸ்.

‘‘ ‘ஒரு பக்க கதை’ படத்தோட முதல் நாள் முதல் ஷாட் எடுத்தபோது, மகன் நடிப்பைப் பார்க்க நடிகர் ஜெயராம் சார் மனைவியோடு வந்திருந்தார். எங்கேயும் கட் பண்ணாம முழு ரோல் ஓட விட்டுட்டு இருந்தேன். கட் சொன்னவுடனே, காளிதாஸ் அப்பா மற்றும் அம்மா ரியாக்‌ஷன் பார்த்தேன். அம்மா, எதுவும் சொல்லல. நார்மலா ரசிச்சுப் பார்த்துட்டு சந்தோஷமா இருந்தாங்க. அப்பா ஜெயராம் சிரிக்கறார். அதே சமயம் கண் கலங்கி ரொம்ப எமோஷனல் ஆகிட்டார். பார்த்துக்கிட்டு இருந்த எனக்கே ஒரு மாதிரி ஆகிருச்சு’’ என்றார் பாலாஜி.

‘‘இப்போவும் என் படங்களோட ட்ரெய்லர் ரிலீஸ் ஆச்சுன்னா பாலாஜி சாருக்கு அனுப்பி வைப்பேன். இந்தப் படத்தோட ஜீ5 ரிலீஸை விஜய்சேதுபதி அண்ணா வாழ்த்தி ட்வீட் பண்ணியிருந்தார். தமிழில் இவர் நடிப்பும், மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பும் ரொம்பப் பிடிக்கும்’’ என காளிதாஸ் சந்தோஷப்பட்டார்.

‘ஓ.டி.டி ரிலீஸில் தியேட்டர் ரெஸ்பான்ஸை மிஸ் செய்கிறீர்களா’ என்று கேட்டேன்.

‘‘கண்டிப்பா நிறைய விஷயங்கள் மிஸ் பண்ணுறோம். ஆடியன்ஸோட விசில் சத்தம், கைத்தட்டல், கமென்ட் எல்லாத்தையும். ஆனா, இதெல்லாம் தாண்டி வணிகமும் பெருசாகியிருக்கு. இந்தக் கொரோனா காலத்துல ‘சூரரைப் போற்று’ மாதிரியான படங்கள் ஓ.டி.டில ரிலீஸாகுறது பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. இந்த பீரியட்ல இது தப்பில்லன்னு நினைக்குறேன்.

எங்க படம் லேட்டா ரிலீஸானாலும் படத்துல சொல்லியிருக்குற விஷயம் எக்காலத்துக்கும் பொருந்தும். குறிப்பா, இப்போ போயிட்டு இருக்குற நடப்புக்கு. நார்மல் வாழ்க்கையில இருக்குற எதார்த்தம், உறவுகளின் சிக்கல், அறிவியல், ஆன்மிகம்னு எல்லாமே இதுல இருக்கு. கண்டிப்பா படம் ஆடியன்ஸுக்குப் பிடிக்கும்...’’ இயக்குநர் பாலாஜி தரணிதரன் சொல்ல, சிரித்த முகத்தோடு இதை ஆமோதித்தார் காளிதாஸ் ஜெயராம்.