Published:Updated:

“என்னை இந்தி கத்துக்கச் சொன்னார் கமல்!”

 அருண்விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
அருண்விஜய்

மருதநாயகம்’ ஆரம்பிக்கிற சமயம். கமல் சார் என் அப்பாவிடம் ‘பையனை இந்தி கத்துக்கச் சொல்லுங்க. ‘மருதநாயகம்’ எல்லா மொழியிலும் பண்றேன்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பின், அருண்விஜய் தயாரித்து நடிக்கும் ‘சினம்’ படத்தின் மூலம் என்ட்ரி ஆகிறார் இயக்குநர் ஜி.என்.ஆர். குமாரவேலன். ‘ஹரிதாஸ்’ படம் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநரான ஜி.என்.ரங்கராஜனின் மகன். மழை சூழ் சென்னையின் ஒரு மாலையில் அவரிடம் உரையாடியபோது...

``தமிழ் சினிமாவுல எத்தனையோ போலீஸ் படங்கள் வந்திருக்கு. அதுல ‘சினம்’ எப்படி ஸ்பெஷல்?’’

“போலீஸ்னாலே ஹீரோயிசம்னு மத்த படங்கள் பேசுறப்போ, கள யதார்த்தத்தை என் படத்துல காட்டணும்னு நினைச்சேன். ‘ஹரிதாஸ்’ படத்துல கிஷோர் ஒரு சப் இன்ஸ்பெக்டர் கேரக்டர்ல நடிச்சிருப்பார். அதுக்காக, நிறைய போலீஸ் அதிகாரிகளை சந்திச்சேன். அப்படி சரவணன்னு ஒரு போலீஸ் அதிகாரிகிட்ட பேசினபோது சுவாரஸ்யமான ஒரு லைன் கிடைச்சது. அதை வெச்சுக்கிட்டு எனக்குக் கிடைச்ச அனுபவங்களைச் சேர்த்து ‘சினம்’ திரைக்கதை எழுதினேன். சம்பளத்தைத்தாண்டி வேறெந்த வருமானமும் பார்க்காத நேர்மையான ஒரு மிடில்-கிளாஸ் சப் இன்ஸ்பெக்டர் பாரி வெங்கட். அவருடைய யதார்த்தமான வாழ்க்கைதான் ‘சினம்.’ அவர் இருக்கிற இடத்துல, வேலையில, சமூகத்துல சந்திக்கிற சவால்கள் என்ன, அதை எப்படிக் கடந்து வர்றார் என்பதுதான் கதை. நாம சரியா இருக்கும்போது நம்ம எதிராளியும் சரியா இருக்கணும்னு நினைப்போம். இல்லைன்னா நமக்குக் கோபம் வரும். நேர்மையான போலீஸுக்கு கொஞ்சம் அதிகமாவே வரும். அப்படி பாரி வெளிப்படுத்துற கோபத்தோட க்ராஃபை படத்துல சரியா சொல்லிருக்கேன்னு நம்புறேன்.”

 அருண்விஜய்
அருண்விஜய்
“என்னை இந்தி கத்துக்கச் சொன்னார் கமல்!”

``அருண் விஜய் நிறைய போலீஸ் படங்கள் பண்ணியிருக்கார். இதுலயும் போலீஸ்னு நீங்க அவர்கிட்ட சொன்னதும் அவர் என்ன சொன்னார்?’’

“ ‘ஹரிதாஸ்’ பார்த்துட்டு எனக்கு போன் பண்ணி நிறைய ஹீரோக்கள் பேசினாங்க. அதுல அருண் விஜய்யும் ஒருவர். அடுத்து நான் இயக்கின ‘வாகா’ தோற்றபிறகு, யாரும் தொடர்ந்து பேசலை. ஆனா, அருண் விஜய் மட்டும் தொடர்புல இருந்தார். ‘தடம்’ ஹிட்டான பிறகு ‘சினம்’ கதை அவர் பண்ணுனா நல்லாருக்கும்னு தோணுச்சு. கதை கேட்டதும், உடனே பண்ணலாம்னு சொல்லி எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.”

“என்னை இந்தி கத்துக்கச் சொன்னார் கமல்!”

`` ‘ஹரிதாஸ்’ பேசப்பட்டது. அடுத்து ‘வாகா’ தோல்வி. அது எவ்வளவு பாதிச்சது? என்ன பாடம் கத்துக்கொடுத்தது?’’

“ஒரு படைப்பாளியா ஒவ்வொரு படமும் வேற வேற மாதிரி முயற்சி பண்ணிப் பார்க்கணும்னு நினைக்கிறதுல தப்பில்லையே! ‘ஹரிதாஸ்’ படத்துக்கு நேரெதிரா ‘வாகா’ இருக்கணும்னு நினைச்சேன். ஆனா, எல்லோரும் ‘ஹரிதாஸ்’ மாதிரியே ஒரு படம் எதிர்பார்த்திருந்திருக்காங்க. எங்க வீட்லயே ‘வாகா’ பார்த்துட்டு சந்தோஷமா இல்லை. ரிலீஸுக்கு முன்னாடியே ரிசல்ட் தெரிஞ்சிடுச்சு. அந்தப் படத்துக்கு வந்த விமர்சனங்களைப் படிச்சப்போ சினிமாவே வேண்டாம்னு எல்லாம்கூட தோணுச்சு. அப்புறம் நிதானமா யோசிச்சு அந்த எதிர்வினைகளை எல்லாம் பாசிட்டிவ்வா மாத்திக்கிட்டேன். கொஞ்சம் டைம் எடுத்து மூணு கதைகள் பண்ணினேன். அதுல ஒண்ணுதான் ‘சினம்.’ ”

“என்னை இந்தி கத்துக்கச் சொன்னார் கமல்!”

``பாலு மகேந்திராகிட்ட உதவி இயக்குநரா இருந்த நாள்கள்?’’

“எனக்கு போட்டோகிராபி ரொம்பப் பிடிக்கும். நான் எடுத்த சில போட்டோக்களை என் நண்பன் சுகா எனக்கே தெரியாமல் பாலு மகேந்திரா சார்கிட்ட காட்டிட்டான். அதைப் பார்த்து என்னை வரச் சொல்லிப் பாராட்டிட்டு, ‘என்கிட்ட சேர்ந்து வொர்க் பண்ணு’ன்னு சொன்னார் பாலு சார். என்னால நம்பவே முடியலை. அப்படித்தான் ‘சதிலீலாவதி’ல அசிஸ்டென்டா வொர்க் பண்ணினேன். ‘ஹரிதாஸ்’ பார்த்துட்டு, ‘நல்லா பண்ணியிருக்க. இந்த ஒரு படம் பத்தாது. இன்னும் நிறைய ‘ஹரிதாஸ்’ வேணும்’னு சொல்லிப் பாராட்டினார்.”

ஜி.என்.ஆர். குமாரவேலன்
ஜி.என்.ஆர். குமாரவேலன்

``கமல்ஹாசன்கிட்டேயும் உதவி இயக்குநரா இருந்திருக்கீங்களே!’’

“ ‘மருதநாயகம்’ ஆரம்பிக்கிற சமயம். கமல் சார் என் அப்பாவிடம் ‘பையனை இந்தி கத்துக்கச் சொல்லுங்க. ‘மருதநாயகம்’ எல்லா மொழியிலும் பண்றேன். என்கூட வொர்க் பண்ணட்டும்’னு சொன்னார். நானும் இந்தி கத்துக்கலாம்னு ரெண்டு நாள் க்ளாஸுக்குப் போனேன். ரொம்பக் கஷ்டமா இருந்தது. கத்துக்கலை. ‘மருதநாயகம்’ படமும் வெளியாகலை. அப்புறம் ‘மகளிர் மட்டும்’ படத்தின் இந்தி வெர்ஷன் ‘லேடீஸ் ஒன்லி’ல வொர்க் பண்ணினேன். அந்தப் படமும் வெளியாகலை. அதுக்கு அப்புறம், கதிர்கூட ‘காதலர் தினம்’, ‘காதல் தேசம்’ படங்கள்ல வொர்க் பண்ணினேன். சீமான்கிட்ட ‘தம்பி’ படத்துல இணை இயக்குநரா வேலை செஞ்சேன். சீமானைவிடச் சிறந்த கதை சொல்லியைப் பார்க்கவே முடியாது. எனக்கு ஹீரோவை ரெண்டு மணி நேரம் மயக்கி இம்ப்ரஸ் ஆகுற அளவுக்குக் கதை சொல்ல வராது. நான் கதை சொல்லப்போகும்போது, சீமான் இந்தக் கதையைச் சொன்னா எப்படிச் சொல்வார்னு நினைச்சுக்கிட்டுதான் சொல்லுவேன்.”

``அப்பா எப்படியிருக்கார்? நீங்க கதை எழுதினவுடன் அப்பாகிட்ட சொல்வதுண்டா?’’

“நல்லா இருக்கார். சமீபமா 90வது பிறந்தநாள் முடிஞ்சது. கமல் சார், பிரபு சார்னு இன்டஸ்ட்ரியில இருந்து நிறைய பேர் வீடியோவுல வாழ்த்து சொன்னாங்க. அப்பா என்கிட்ட ‘யாரையும் காயப்படுத்தாதே. மத்தவங்க உன்னைக் காயப்படுத்தினா உடனே துவண்டுபோகாதே. உனக்கு எல்லாமே சினிமா கத்துக்கொடுக்கும். நேர்மையா உழை. அது எல்லாத்தையும் கொடுக்கும்’ன்னு சொல்லுவார்.”