Published:Updated:

“‘த்ரிஷ்யம் - 3’ நிச்சயம் நடக்கும்!”

ஜீத்து ஜோசப்
பிரீமியம் ஸ்டோரி
ஜீத்து ஜோசப்

பார்ட் 3 நடக்குமான்னு தெரியல. இருந்தும், க்ளைமாக்ஸ்ல சின்ன ஐடியா தோணியிருக்கு.

“‘த்ரிஷ்யம் - 3’ நிச்சயம் நடக்கும்!”

பார்ட் 3 நடக்குமான்னு தெரியல. இருந்தும், க்ளைமாக்ஸ்ல சின்ன ஐடியா தோணியிருக்கு.

Published:Updated:
ஜீத்து ஜோசப்
பிரீமியம் ஸ்டோரி
ஜீத்து ஜோசப்
கேரளா தாண்டி, தமிழ் மக்களும் ‘த்ரிஷ்யம் 2’ படத்துக்குப் பெரிய வரவேற்பு கொடுத்திருக்காங்க. இதுக்குப் பெரிய நன்றி சொல்லணும். எப்போவும் த்ரில்லர் ஜானர் என்னோட ஃபேவரைட். இருந்தும், எல்லா விதமான ஜானர் படங்களையும் பண்ண ஆசைப்படுறேன். சொல்லப்போனா சின்ன வயசுல போலீஸ் ஆகணும்னு ஆசைப்பட்டேன். இப்போ டைரக்டர் ஆகிட்டேன். படம் பார்த்துட்டு ராஜஸ்தான்ல இருக்குற டி.ஐ.ஜி ட்விட்டர்ல பாராட்டி மெசேஜ் போட்டிருந்தார். சில போலீஸ்காரங்களும் பாராட்டியிருந்தாங்க. சந்தோஷமா இருக்கேன்’’ உற்சாகத்துடன் ஆரம்பிக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

`` ‘த்ரிஷ்யம்’ படத்தோட வெற்றிக்குப் பிறகு பார்ட் 2 எடுக்குற ஐடியா இருந்ததா?’’

‘‘கண்டிப்பா இல்ல. நிறையபேர் இதைப் பற்றிக் கேட்டிருக்காங்க. ‘பார்ட் 2 எடுக்குறதுக்கான வாய்ப்பு கிடையாது’ன்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தேன். பிறகு, படத்தோட புரொடியூசர் ஆண்டனி ‘பார்ட் 2 எடுக்கலாமே... ஏன், நீங்க கதை எழுதக்கூடாது’ன்னு கேட்டார். ‘சரியான கதை அமையலனா விட்டு ரலாம்’னு சொன்னார். முயற்சி பண்ணிப் பார்ப்போம்னுதான் கதை எழுத ஆரம்பிச்சேன். மோகன்லால்கிட்ட இதைப் பற்றிச் சொன்னேன். ‘நீங்க முதல்ல கதையை எழுதுங்க. நான் படிச்சிட்டுச் சொல்றேன்’னார். வீட்டுலயும் ‘நான் ‘த்ரிஷ்யம் 2’ கதையை எழுதப்போறேன்’னு சொன்னேன். ‘அப்பா, ப்ளீஸ் எழுதாதீங்க. முதல் பாகத்தின் மேல எல்லாருக்கும் பெரிய மரியாதை இருக்கு. நல்ல பேரும் இருக்கு. இதை பார்ட் 2 கதை கெடுத்துடக் கூடாது’ன்னு சொன்னாங்க. ‘முயற்சி பண்ணிப் பார்க்குறேன். நல்லா வந்தா பண்ணுவோம். இல்லனா வேண்டாம்’னு வீட்டுல சொல்லிட்டு, கதையை எழுதினேன். எப்பவும் என்னோட கதைகளுக்கு முதல் வாசகர்கள் என் குடும்பத்துல இருக்குற மனைவி மற்றும் என்னோட ரெண்டு பொண்ணுங்கதான். கதை எழுதிட்டு என் மனைவிகிட்டயும் பொண்ணுங்ககிட்டயும் கொடுத்தேன். படிச்சிட்டு, ‘நல்ல ஸ்டோரி இதுல இருக்கு. கண்டிப்பா ட்ரை பண்ணலாம்’னாங்க. ஆனா, ‘எந்த அளவுக்கு ஆடியன்ஸுக்குப் பிடிக்கும்னு தெரியல. பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்ஸ் வருமான்னு டவுட்டா இருக்கு. இருந்தாலும், நல்ல படமா இருக்கும்’னாங்க. அடுத்து மோகன்லால்கிட்ட கதையைக் கொண்டு போனேன்.’’

“‘த்ரிஷ்யம் - 3’ நிச்சயம் நடக்கும்!”

``மோகன்லால் கதையைப் படிச்சிட்டு எப்படி ரியாக்‌ட் பண்ணுனார்?’’

‘‘படத்தோட முழுவேலையும் லாக்டெளன் நேரத்துலதான் நடந்தது. என் உதவி இயக்குநர்கள்கிட்ட கதையை டிஸ்கஸ் பண்ணினேன். கொஞ்சம் கொஞ்சம் கரெக்‌ஷன்ஸ் சொன்னாங்க. இதெல்லாம் ரீ வொர்க் பண்ணிட்டு படத்தோட புரொடியூசர் ஆண்டனி மற்றும் மோகன்லாலுக்கு மெயில் அனுப்பினேன். சின்னச் சின்ன சந்தேகங்கள் மோகன்லாலுக்கு இருந்தது. அதைப் பற்றி என்கிட்ட கேட்டார். எல்லாத்தையும் விவரிச்சுச் சொன்னேன். அப்புறம், ‘ஐ எம் ரெடி. ஹாப்பி வித் ஸ்க்ரிப்ட்’னு மோகன்லால் சொன்னார். இந்த ஸ்க்ரிப்ட் பொறுத்தவரைக்கும் யாரையும் கன்வின்ஸ் பண்ண வேண்டிய அவசியமே இல்ல. எல்லாருமே ஸ்க்ரிப்ட் படிச்சிட்டு முழுநம்பிக்கையா இருந்தாங்க. உடனே, ஷூட்டிங்கை ஆரம்பிச்சிட்டோம்.’’

``இதுவரைக்கும் நீங்க பண்ணியிருந்த ஷூட்டிங்ல இருந்து ‘த்ரிஷ்யம் 2’ லாக்டெளன் நேரத்துல வேற மாதிரியான அனுபவத்தைக் கொடுத்திருக்கும் இல்லையா?’’

‘‘நிறைய சிரமங்கள் இருக்கும்னு நினைச்சிட்டுதான் இருந்தேன். ஆனா, நாங்க எதிர்பார்த்த அளவுக்கு பெரிய சிரமங்கள் இல்ல. ஷூட்டிங் தொடங்குறதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் கச்சிதமா வடிவமைச்சிட்டோம். இதுக்கு என்னோட டீம் முழு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. மொத்தப் படத்துக்கான ஷூட்டிங் 56 நாள்கள் பிளான் பண்ணியிருந்தோம். இருந்தும், பத்து நாள்கள் முன்னாடியே முடிச்சிட்டோம். எல்லாமே பிளான் பண்ணியிருந்த மாதிரியே சரியா முடிஞ்சதுல நாங்க எல்லாருமே ஹேப்பி. படத்தை என் குடும்பத்துடன் சேர்ந்து உதவி இயக்குநர்கள் மற்றும் டீம்ல இருந்தவங்க பார்த்தோம். எல்லாருமே திருப்தியா ஃபீல் பண்ணுனாங்க.’’

``இரண்டாம் பாதியை விடவும் முதல் பாதி கொஞ்சம் தொய்வா இருக்குன்னு வர்ற விமர்சனத்தை எப்படிப் பார்க்குறீங்க?’’

‘‘இதை என்கிட்டயும் சிலர் சொன்னாங்க. ஆனா, படத்தோட முதல் பகுதி இப்படித்தான் இருக்கும்னு திட்டமிட்டுத்தான் எழுதினேன். படம் பார்க்குற ஆடியன்ஸுக்கு ஜார்ஜ் குட்டியோட ஃபேமிலியைப் பிடிக்கணும்னு முடிவு பண்ணித்தான் இப்படிப் பண்ணினேன். அதே மாதிரியே படத்தோட இரண்டாம் பாதி பார்க்கும்போது ஆடியன்ஸுக்கு டென்ஷன் ஏறும். ஜார்ஜ் குட்டி ஃபேமிலிக்கு என்னாகும்னு பரபரப்பு இருக்கும். இதெல்லாம் ஸ்க்ரிப்ட் வேலைகளின் ட்ரிக். சைக்காலஜி முறையில ஆடியன்ஸை அணுகுறது. எல்லாப் படத்துக்கும் இந்த மாதிரியான சில விஷயங்கள் தேவைன்னு நினைக்குறேன்.’’

ஜீத்து ஜோசப்
ஜீத்து ஜோசப்

``படத்தோட தியேட்டர் ரிலீஸை மிஸ் பண்ணுனீங்களா?’’

‘‘கண்டிப்பா, இருந்தும் தியேட்டர்ல ரிலீஸாகியிருந்தா உலகம் முழுக்க இருக்குற ஆடியன்ஸ்கிட்ட பெரிய வரவேற்பு கிடைச்சிருக்குமான்னு தெரியல. ஏன்னா, இந்தப் படம் இப்ப 254 நாடுகள்ல ரிலீஸாகியிருக்கு. பிப்ரவரி 18 அமேசான்ல படம் ப்ரீமியர் ஆனப்போ ஹைதராபாத்ல இருந்தேன். விடியற்காலை 5.30 மணிக்கு வாட்ஸப்ல 600க்கும் மேற்பட்ட மெசேஜ் வந்திருந்தது. உலகம் முழுக்க இருக்குற ரசிகர்கள் அனுப்பியிருந்தாங்க. அது, படம் பார்த்தவங்களுடைய முதல் ரியாக்‌ஷனா இருந்தது. தியேட்டர்ல ரிலீஸாகியிருந்தா இந்த மாதிரியான விமர்சனம் வந்திருக்காதுன்னு நினைக்குறேன்.’’

`` ‘த்ரிஷ்யம் 3’க்கும் ரெடியாகிட்டீங்கன்னு கேள்விப்பட்டோமே?’’

‘‘பார்ட் 3 நடக்குமான்னு தெரியல. இருந்தும், க்ளைமாக்ஸ்ல சின்ன ஐடியா தோணியிருக்கு. இதை லால் சார்கிட்ட டிஸ்கஷன் பண்ணினேன். அவருக்கும், என் குடும்பத்துக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு. நிறைய வேலைகள் இருக்கு. ஆண்டவனுடைய ஆசீர்வாதமும் வேணும். அது கிடைச்சா ‘த்ரிஷ்யம் 3’ நிச்சயம் நடக்கும்.’’

“‘த்ரிஷ்யம் - 3’ நிச்சயம் நடக்கும்!”

``படத்துல மோகன்லால் கன்னத்துல ஆஷா சரத் அறையுற மாதிரி காட்சி இருக்கும். இதைக் கேரளா ஆடியன்ஸ் எப்படி எடுத்துக்கிட்டாங்க?’’

“யாருமே, தப்பா எடுத்துக்கல. பார்க்குற ஆடியன்ஸுக்கு எதுக்காக அறைஞ்சாங்கன்னு தெரியும். தவிர, படத்துல மோகன்லாலை யாரும் பார்க்கல. ஜார்ஜ் குட்டி கேரக்டரைத்தான் பார்த்திருந்தாங்க. அதே மாதிரியே ஆஷா சரத் அங்கே மோகன்லாலை அறையலை. கீதா பிரபாகர்தான் ஜார்ஜ் குட்டியை அறைஞ்சாங்க. ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. இந்தக் காட்சியை ஆஷா சரத்கிட்ட சொன்னப்போ, அவங்களுக்கு சின்ன தயக்கம் இருந்தது. இருந்தாலும் கீதா பிரபாகர் கேரக்டருக்கு அது தேவைப்பட்டது. ‘இதுல தயக்கம் வேணாம். சினிமால இதெல்லாம் தேவை’ன்னு லால் சாரே சொன்னார்.’’

``தமிழ் ஆடியன்ஸ் மத்தியில ‘பாபநாசம் 2’ பற்றிய கேள்வி இருக்கு?’’

‘‘இதை முடிவு செய்ய வேண்டியது நான் இல்ல. கமல் சார்தான். கமல் சார் ஓகே சொன்னா நான் ரெடி. இன்னும், கமல் சார் படம் பார்க்கலன்னு நினைக்குறேன். பார்த்துட்டு, ஒரு மெசேஜ் போட்டாலே போதும். நடிகர் கார்த்தி சாரும், சத்யராஜ் சாரும் படம் பார்த்துட்டு எக்ஸலென்ட்னு மெசேஜ் போட்டிருந்தாங்க.’’

“‘த்ரிஷ்யம் - 3’ நிச்சயம் நடக்கும்!”

`` `பாபநாசம்’ க்ளைமாக்ஸ் ‘த்ரிஷ்யம்’ க்ளைமாக்ஸோட வேறுபட்ட நிலையில இருக்குமே?’’

‘‘ஜார்ஜ்குட்டி கேரக்டருக்கும் சுயம்புலிங்கம் கேரக்டருக்கும் வித்தியாசங்கள் இருக்கு. தன்னுடைய பயம், எமோஷன்ஸ் எல்லாத்தையும் ஜார்ஜ்குட்டி கேரக்டர் வெளியே காட்டாம இருப்பார். சுயம்புலிங்கம் அப்படி இல்ல. ‘பாபநாசம்’ல கீதா பிரபாகர்கிட்ட சுயம்பு தன் எமோஷன்ஸை வெளியே காட்டியிருப்பார். அந்த சீன்ல கமல் சார் சூப்பரா நடிச்சிருந்தார். ஆக்சுவலி, இந்தக் காட்சியை ஷூட்டிங் பண்ணிட்டி ருந்தப்போ மானிட்டர்ல பார்த்துக்கிட்டு இருந்த நானே அழுதுட்டேன். ஜார்ஜ் குட்டிக்கும், சுயம்புலிங்கத்துக்கும் இடையே இருந்த இந்த வித்தியாசம்தான் க்ளைமாக்ஸ் காட்சியை வேறுபடுத்தியது. ஆனா, ‘பாபநாசம் 2’ எடுக்கறதை அது எந்தவகையிலும் பாதிக்காது.’’

``மலையாள ஜார்ஜ்குட்டி குடும்பம், தமிழில் ரீமேக் பண்ணுனப்போ சுயம்புலிங்கம் குடும்பமா மாறினது ஏன்?’’

‘‘தமிழ்லயும் கிறிஸ்துவக் குடும்பங்கள் இருக்கு. ஆனா, இப்படி மாற்றிக் காட்டினா கலாசாரரீதியா இன்னும் ஆடியன்ஸ்கிட்ட கனெக்ட் பண்ண முடியும்னு டிஸ்கஷன்போது கமென்ட்ஸ் வந்தது. அதனாலதான், அந்த மாதிரியான மாற்றம் வந்தது.’’

``தமிழ் ஆடியன்ஸ்கிட்ட இருந்து ‘த்ரிஷ்யம் 2’ சம்பந்தமான மீம்ஸ் சமூக வலைதளங்களில் வந்துட்டிருக்கே, பார்த்தீங்களா?’’

‘‘நிறைய பார்த்தேன். குறிப்பா, என்னோட ஃபேமிலியும் ஜார்ஜ்குட்டி ஃபேமிலியும் இருக்குற மாதிரியான படங்கள் பார்த்தேன். என் வீட்டுலயும் பார்த்தாங்க. சிரிச்சாங்க. இதை எங்களுக்குக் கிடைச்ச அங்கீகாரமா எடுத்துக்குறேன். என்னோட படங்கள் எல்லாத்துக்கும் என் மனைவிதான் காஸ்ட்யூம் டிசைனர். ரெண்டு பொண்ணுங்களும் படிச்சிட்டிருக்காங்க. எங்களையும், படத்தையும் ஏத்துக்கிட்டதுக்கு நன்றி.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism