Published:Updated:

சினிமா விகடன்: சைக்கோவைத் தேடும் நயன்தாரா!

மிலிந்த் ராவ், நயன்தாரா
பிரீமியம் ஸ்டோரி
மிலிந்த் ராவ், நயன்தாரா

படத்தோட கதையை முதல்ல நயன்தாரா மேடம் கிட்டதான் சொன்னேன். ரெண்டு மணி நேரம் ஒரு சராசரி பார்வையாளரா உட்கார்ந்து கதை கேட்டவங்க, ‘இந்தப் படத்தை நாங்க தயாரிக்கலாமா’ன்னு கேட்டாங்க.

சினிமா விகடன்: சைக்கோவைத் தேடும் நயன்தாரா!

படத்தோட கதையை முதல்ல நயன்தாரா மேடம் கிட்டதான் சொன்னேன். ரெண்டு மணி நேரம் ஒரு சராசரி பார்வையாளரா உட்கார்ந்து கதை கேட்டவங்க, ‘இந்தப் படத்தை நாங்க தயாரிக்கலாமா’ன்னு கேட்டாங்க.

Published:Updated:
மிலிந்த் ராவ், நயன்தாரா
பிரீமியம் ஸ்டோரி
மிலிந்த் ராவ், நயன்தாரா
‘நெற்றிக்கண்’ டீசருக்கு நல்ல வரவேற்பு. அந்த உற்சாகத்துல இப்போ பரபரப்பா படத்தோட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில்தான் இருக்கேன்’’ என பாசிட்டிவாக ஆரம்பிக்கிறார் இயக்குநர் மிலிந்த் ராவ்.

`` ‘அவள்’ படத்துக்குப் பிறகு மூணு வருஷ இடைவெளி. ஏன்?’’

‘‘ என்னோட ஸ்க்ரிப்ட் வேலைக்கு நிறைய அவகாசம் தேவைப்பட்டுச்சு. ஸ்கிரிப்ட்தான் ஒரு படத்தோட பலம்ங்கிறதால, அதுக்கு எவ்வளவு நேரம் செலவழிச்சாலும் தப்பில்லன்னு நினைக்கிறேன். அப்போதான் சரியான படத்தையும் கொடுக்க முடியும். மூணு வருஷம் செலவழிச்சு இப்போ ‘நெற்றிக்கண்’ நல்லா வந்திருக்கிறதுல செம ஹாப்பி.’’

நயன்தாரா
நயன்தாரா

``தயாரிப்பாளரா விக்னேஷ் சிவன் எப்படி இந்தப் படத்துக்குள்ள வந்தார்?’’

‘‘படத்தோட கதையை முதல்ல நயன்தாரா மேடம் கிட்டதான் சொன்னேன். ரெண்டு மணி நேரம் ஒரு சராசரி பார்வையாளரா உட்கார்ந்து கதை கேட்டவங்க, ‘இந்தப் படத்தை நாங்க தயாரிக்கலாமா’ன்னு கேட்டாங்க. அது எனக்கு பெரிய சர்ப்ரைஸ். அவங்களோட பேனர் லான்ச்சுக்கு நம்ம படத்தைக் கேட்கு றாங்களேன்னு ரொம்ப சந்தோஷம் எனக்கு. அதுவே முதல் வெற்றியா தோணுச்சு. அப்புறம் விக்னேஷ் சிவன் சார் கதை கேட்டு ஓகே சொன்னார். படத்தைத் தொடங் கிட்டோம். இப்போவரை ஒரு தயாரிப்பாளரா அவர் எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கார். லாக் டௌன் அப்போ பட வேலைகள் தடைப்பட்டப்பவும் ‘எல்லாம் நன்மைக்கே’ன்னு பாசிட்டிவா இருந்தார். செம கூலான தயாரிப்பாளர் அவர். படத்தோட பாடலாசிரியரும் அவர்தான்.’’

``மாற்றுத்திறனாளி ரோல்ல நயன்தாரா எப்படிப் பண்ணியிருக்காங்க?’’

‘‘நயன்தாரா செம புரொபஷனல். பார்வைத்திறனற்ற பெண்ணோட லுக், பாடி லாங்குவேஜ், டிரஸ்ஸிங் சென்ஸ், ஏன் ஸ்டிக் பிடிச்சு நடக்குற நடை வரை எல்லாமே எப்படியிருக்கணும்னு நிறைய ஹோம் வொர்க் பண்ணிக்கிட்டு ரெடியானாங்க. ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து மெனக்கெட்டு பண்ணுனாங்க. அடுத்த நாளுக்கான ஸ்க்ரீன் பேப்பரை முந்திய நாள் இரவுல இருந்தே படிச்சு ரெடியாயிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவாங்க. இத்தனை படங்கள் பண்ணுனதுக்குப் பிறகும் இந்த அளவுக்கு டெடிக்கேஷனா நயன் இருக்குறது பார்த்து ஆச்சர்யப்பட்டுப்போனேன். அதனாலதான் இன்னைக்கு லேடி சூப்பர் ஸ்டார்ங்குற இடத்துல நயன் இருக்காங்கன்னு நம்புறேன்.’’

நயன்தாரா
நயன்தாரா

`` ‘நெற்றிக்கண்’ எதைப் பற்றிய கதை?’’

‘‘த்ரில்லர் ஜானர் படத்தைப் பத்தி இப்பவே நிறைய பேசினா சுவாரஸ்யம் போயிடும். அதனால ஒன்லைன் மட்டும் சொல்றேன். ஒரு ஊர்ல சைக்கோ கேரக்டர் கொண்ட ஒருத்தன், பொண்ணுங்களைத் தொடர்ச்சியா கடத்துறான். பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் தன்னுடைய அறிவை, அதாவது மூணாவது கண்ணான நெற்றிக்கண்ணைப் பயன்படுத்தி அவனைக் கண்டுபிடிக்கிறதுதான் கதை. அஜ்மல், ‘காலா’ மணிகண்டன், ‘வடசென்னை’ சரண்னு நல்ல நடிகர்கள் படத்துல இருக்காங்க. நயன்தாரா மாதிரியான ஸ்ட்ராங்கான லீடுக்குப் பொருந்துறமாதிரி பலமான வில்லன் கேரக்டர் படத்துல இருக்கு. டெக்னிக்கலாவும் நல்ல டீம் அமைஞ்சிருக்கு. த்ரில்லர் படத்துக்கு சவுண்ட் மிக முக்கியம். மியூசிக் டைரக்டர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மற்றும் சவுண்ட் டிசைனர்ஸ் விஜய் ரத்தினம், ரஹ்மத்துலா மூணு பேரும் படத்துக்காக ரொம்ப மெனக்கெட்டிருக்காங்க. ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர், ஆர்ட் டைரக்‌ஷன் கமலநாதன், எடிட்டிங் லாரன்ஸ் கிஷோர்னு மிரட்டலான டீம். கொரியன் படமான ‘பிளைண்ட்’டோட அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் இது.’’

சினிமா விகடன்:  சைக்கோவைத் தேடும் நயன்தாரா!

`` ‘நெற்றிக்கண்’ டைட்டிலே ரொம்ப பவர்புல். ரஜினி பட டைட்டில். யாரோட ஐடியா இது?’’

“கதைக்கு இந்த டைட்டில் சரியா பட்டுச்சு. நீங்க சொன்ன மாதிரி, ரஜினி சார் படத்தோட டைட்டில்ங்கிறது கூடுதல் பலம். தலைப்பு உரிமை கேட்டு கவிதாலயாகிட்ட பேசினோம். ‘ரெளடி பிக்சர்ஸ்’ புரொடக்‌ஷனுக்காக கேட்கிறீங்க. நோ சொல்ல மாட்டோம்னு உடனே ஓகே சொல்லிட்டாங்க. இதுமட்டுமல்லாம, நயன் மேடத்தின் முதல் படத்தைத் தமிழில் கவிதாலயா பிக்சர்ஸ்தான் தயாரிச்சிருந்தாங்க. ஸோ, சென்டிமென்டலாவும் ஒர்க் அவுட் ஆச்சு.’’

சினிமா விகடன்:  சைக்கோவைத் தேடும் நயன்தாரா!

``லாக் டௌன் அன்லாக் வெர்ஷன்ல ‘நெற்றிக்கண்’ படப்பிடிப்பு நடத்துன அனுபவம் எப்படியிருந்தது?’’

‘‘ஷூட்டிங் தொடங்கலாம்னு அரசு சொன்னவுடனேயே ரொம்ப தைரியமா ‘படப்பிடிப்பைத் தொடங்கலாம்’னு நயன் மேடம் சொல்லிட்டாங்க. அரசாங்கம் சொன்ன வழிமுறைகளை சரியா கடைப்பிடிச்சு படப்பிடிப்பு நடத்தினோம். லைட் மேன் தொடங்கி பெரிய ஆர்ட்டிஸ்ட் வரைக்கும் எல்லாத்துக்கும் கோவிட் டெஸ்ட் எடுத்து, எல்லாருடைய ரிசல்ட்டும் நெகட்டிவ்னு வந்ததுக்குப் பிறகுதான் ஷூட்டிங் தொடங்கினோம். விக்னேஷ் சிவன் சாரும் நயன்தாரா மேடமும் செட்டுல எல்லாரும் மாஸ்க் போட்டிருக்காங்களா, சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்கிறாங்களான்னு தொடர்ந்து கவனிச்சு அறிவுறுத்திக்கிட்டே இருந்ததால ஷூட்டிங்கை சுமுகமா முடிச்சுட்டோம். தியேட்டர் ரிலீஸைக் குறிவெச்சுதான் வேலை பார்க்கிறோம். எல்லா வேலைகளும் முடிஞ்சு படம் ரெடி ஆகுறப்போ சூழல் இன்னும் மேம்பட்டிருக்கும்னு நம்புறோம்.’’

மிலிந்த் ராவ்
மிலிந்த் ராவ்

``அடுத்தடுத்த கமிட்மென்ட்ஸ்?’’

‘‘என் முதல் படமா வந்திருக்கவேண்டிய ‘காதல் டு கல்யாணம்’ படத்தை ஓடிடில வெளியிட முயற்சிகள் நடந்துகிட்டு இருக்கு. ‘அவள் 2’ பண்ணலாம்னு நானும் சித்தார்த்தும் சேர்ந்து கதையும் ரெடி பண்ணிட்டோம். சீக்கிரமே படத்தைத் தொடங்கணும். இதுதவிர, ராணாவை வெச்சு படம் பண்ற பிளான் இருக்கு. அந்தப் பட வேலைகளையும் சீக்கிரமே தொடங்கணும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism