Published:Updated:

“90 சதவிகிதம் மழையில் ஒரு படம்!”

பாபி சிம்ஹா
பிரீமியம் ஸ்டோரி
பாபி சிம்ஹா

அத்தனை ஜனங்களையும் இரண்டு மணி நேரத்துக்கு தியேட்டரில் அழைத்துக் கதை சொல்றதும் அதில் ஒன்றிப்போய் உட்கார வைக்கிறதும் ஒரு கலை.

“90 சதவிகிதம் மழையில் ஒரு படம்!”

அத்தனை ஜனங்களையும் இரண்டு மணி நேரத்துக்கு தியேட்டரில் அழைத்துக் கதை சொல்றதும் அதில் ஒன்றிப்போய் உட்கார வைக்கிறதும் ஒரு கலை.

Published:Updated:
பாபி சிம்ஹா
பிரீமியம் ஸ்டோரி
பாபி சிம்ஹா
“ ‘வசந்த முல்லை’ ஆக்‌ஷன் த்ரில்லர் படம். பொதுவா த்ரில்லர்னா சீரியல் கில்லர்னு ஏதேதோ வந்து பதறி நடுங்கவைக்கும். அப்படியில்லாம முற்றிலும் நீங்கள் எதிர்பார்க்காத இடங்கள் இதில் நிறைய இருக்கு. 90 சதவிகிதம் மழையிலேயே படப்பிடிப்பு நடந்திருக்கு. கேரளா பார்டரில் நடந்தது. ஒரு படத்தையே மழையில் நடத்தி முடித்திருக்கிற விதம் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் புதுசு” என நிதானித்துப் பேசுகிறார் இயக்குநர் ரமணன் புருஷோத்தமா.
ரமணன் புருஷோத்தமா
ரமணன் புருஷோத்தமா

“பாபி சிம்ஹா தயாரிப்பாளர். அவரே நடிக்கவும் செய்திருக்கிறார் என்றால் நிச்சயம் ஸ்பெஷலா இருக்குமே?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஆமா. எனக்கு அவர் ரொம்ப நல்ல நடிகர் என்ற அபிப்பிராயம் எப்போதும் இருக்கும். நான் சில குறும்படங்கள் இயக்கியதும் அவரை எப்படியாவது சந்தித்துவிட நினைத்தேன். ஆனா அவரைத் தொடர்புகொள்ள முடியலை. அப்புறம் சில மாதங்கள் கழித்து திடீர்னு போன். ‘ரமணன் உங்கள் குறும்படங்களைப் பார்த்தேன். எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. நாம் இணைந்து படம் செய்யலாமா’ன்னு கேட்கிறார். எனக்கு ஆச்சர்யம் தாங்கலை. த்ரில்லர்னா சில ரூல்ஸ் வெச்சிருக்கோம்ல, அதை உடைக்கணும் போல இருந்தது. எதார்த்தத்துக்குப் பக்கத்தில் கதை சொல்ல முடியும்னு தோணுச்சு. பாபி சிம்ஹா என்ற நல்ல நடிகரே எஸ்.ஆர்.டி நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்க முன்வந்தது முக்கியமான விஷயம்.”

“90 சதவிகிதம் மழையில் ஒரு படம்!”

“த்ரில்லரில் உட்கார வைக்கிறது ரொம்ப சிரமமாச்சே?”

“அதை உணர்ந்தே செய்திருக்கிறோம். பொதுவா இதுமாதிரி படங்களில் ஒளிப்பதிவில் பயமுறுத்தி பின்னணி இசையில் திடுக்கிட வைப்பாங்க. ஒரு மலைப் பிரதேசத்துக்கு ருத்ரன், நிலான்னு ரெண்டு பேர் வர்றாங்க. வந்த இடத்தில் ஒரு பிரச்னை ஆகுது. அந்தப் பிரச்னையும் புதுசா இருக்கு. இந்த இடம்தான் பாபி சிம்ஹாவை தயாரிப்பதோடு நடிக்கவும் வைத்தது.”

பாபி சிம்ஹா
பாபி சிம்ஹா

“90 சதவிகிதப் படப்பிடிப்பு மழையில் என்றால் கஷ்டம் இல்லையா?”

“உண்மைதான். ஆனால் கதையின் ஆழத்தைப் புரிஞ்சுக்கிட்டா அந்தக் கஷ்டம் போயிடும். அதை அழகாக பாபியும் காஷ்மீராவும் புரிஞ்சுக்கிட்டாங்க. காஷ்மீரா இதற்கு முன்னால், ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில ஜி.வி.பிரகாஷின் ஜோடியா நடிச்சிருக்காங்க. ஒரு நல்ல கதை தனக்கான நடிகர்களைத் தானே தேடிக்கொள்ளும்னு சொல்வாங்க. அது இதில் தெரிஞ்சதுன்னு நான் நம்புறேன். பாபி சிம்ஹாவும் காஷ்மீராவும் இந்தப் படத்தில் நடிக்கிறதில் சிரமம் இருந்தது. எல்லா நேரமும் பெய்கிற மழையில் முழுக்க நனைந்தோ ஈரமாவோ இருந்தேயாக வேண்டிய சூழல். அப்படி இருந்தும் அவங்க பொருட்படுத்தாமல் நடிச்சுக் கொடுத்தாங்க.”

“90 சதவிகிதம் மழையில் ஒரு படம்!”

“பிரேமம் மியூசிக் டைரக்டரைக் கொண்டு வந்திருக்கீங்க...”

“இசையமைப்பாளர் இந்தப் படத்துக்கு இன்னொரு டைரக்டர். பாடலில் கதையை நகர்த்திட்டுப்போற இடங்களும் இருக்கு. பின்னணியிலும் பெரும்பங்கு. அந்த வேலையை ராஜேஷ் முருகேசன் சரியாகச் செய்திருக்கிறார். ஒளிப்பதிவில் கோபி அமர்நாத் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ‘பீட்ஸா’ படத்தில் ஒரு டார்ச் லைட் வெளிச்சத்தில் அவர் விளையாடியிருப்பார். இருட்டைப் படம் பிடிக்கிறது கஷ்டமான வேலை. இருட்டையும் வெளிச்சம் போட்டுத்தான் காண்பிக்க வேண்டியிருக்கும். ஒளிப்பதிவாளர்களுக்கே சவாலான அந்த வேலையைச் சிறப்பாகச் செய்வதில் கோபி அமர்நாத் கில்லாடி.”

“எப்படிப்பட்ட படங்களைத் தர விரும்புகிறீர்கள்?”

“அத்தனை ஜனங்களையும் இரண்டு மணி நேரத்துக்கு தியேட்டரில் அழைத்துக் கதை சொல்றதும் அதில் ஒன்றிப்போய் உட்கார வைக்கிறதும் ஒரு கலை. அதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது, பெரிய கொடுப்பினை. இந்த இடத்தைத் தக்க வைக்கிற உழைப்பைக் கொடுக்கவும் தமிழ் சினிமாவிற்கு என்னாலான பங்களிப்பைத் தரவும் பிரியப்படுறேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism