சினிமா
Published:Updated:

நான்குமணி நேரத்தில் நடந்தது என்ன?

பிரியா பவானி சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியா பவானி சங்கர்

போபோ’ சசிதான் மியூசிக். தேவாவின் தம்பிகள் சபேஷ் - முரளின்னு இசை யமைப்பாளர்கள் இருந்தாங்க இல்ல.

“சார்லி சாப்ளின்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச மனுஷன். காதல், அன்பு, வறுமை, கொடுமைன்னு எல்லாத்தையும் கலந்து கொடுத்த கலைஞன். வாழ்க்கையை அவர் மாதிரி காமெடியாகப் பார்க்க ஆரம்பிச்சால் எல்லோரும் தப்பிச்சிடலாம்.
சுமந்த் ராதாகிருஷ்ணன்
சுமந்த் ராதாகிருஷ்ணன்

அதனால ‘ஹாஸ்டல்’ படத்துல சிரிக்க சிரிக்க நகைச்சுவை வெச்சிருக்கோம். கொரோனா காலத்தின் கஷ்டங்களை முற்றாக மறக்குற மாதிரியான படம். கதையோடு அமைஞ்சு காமெடி வந்தால் நல்லது. எனக்கு இதில் அப்படி அமைஞ்சது...” - எளிமையாகப் பேசுகிறார், இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன். இயக்குநர் சுப்பிரமணிய சிவாவின் சீடர்.

நான்குமணி நேரத்தில் நடந்தது என்ன?

“முழுநீள நகைச்சுவைக்கு உத்தரவாதம் தருவது பெரிய விஷயமில்லையா?”

“அனேகமாக நிறைய பேருக்கு ஹாஸ்டல் அனுபவம் இருக்கும். அப்படியே வீட்டிலிருந்து புறப்பட்டு வந்து தற்காலிகமா எல்லாக் கவலைகளையும் மறந்திருக்கிற இடம். ஹாஸ்டல்ல ஒரு பிளாக் இடிஞ்சு விழ, இன்னொரு இடத்திற்குக் கொஞ்ச காலம் இருக்கப் போறாங்க அசோக் செல்வன், சதீஷ், ‘கலக்கப்போவது யாரு’ யோகி, கிரிஷ்னு ஒரு செட். அந்த ஹாஸ்டலுக்கு நாசர், முனீஸ்காந்த் வார்டன்கள். மாணவர்கள் ஃபெயிலானாலும் பரவாயில்லை, டிசிப்ளின் வேணும்னு நினைக்கிறவர் நாசர். இந்த ஹாஸ்டலுக்கு நைட்டு பதினோரு மணிக்கு வர்றாங்க பிரியா பவானி சங்கர். காலைல மூணு மணிக்கு வெளியே போய்விடுவதாக ஏற்பாடு. இந்த இடத்துல வேறு கற்பனைக்கு இடமில்லை. அப்போது வேறுவேறு பிரச்னைகளால் அந்தப் பெண்ணை வெளியே அனுப்ப முடியமாப்போகுது. எப்படி அந்தப் பெண்ணை வெளியில அனுப்புறாங்கங்கிறதுதான் முழுநீள கலாட்டா. இசை இல்லாமல் கட் செய்யாத வெர்ஷன் பார்த்தே தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்தோஷப்பட்டார். இதுவே மக்கள் தீர்ப்பாக மாறினால் சந்தோஷம்.”

நான்குமணி நேரத்தில் நடந்தது என்ன?

“அசோக் செல்வன் இப்போது தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்துவிட்டார் இல்லையா?”

“ஏற்கெனவே நான் `சதுரம்-2’ என ஒரு படத்தை அமேசான் பிரைமுக்காக இயக்கியிருக்கிறேன். இப்போது த்ரிஷா, சிம்ரன் நடித்த ஒரு த்ரில்லர் ரெடியாகி, கொஞ்சம் படப்பிடிப்பு பாக்கியிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் ‘ஹாஸ்டல்’ வாய்ப்பு வந்தது. அசோக்செல்வன் இந்தப் படத்தை மெருகேற்றியிருக்கிறார். பிரியா பவானி சங்கர் ரியாக்ஷனில் அவ்வளவு தேறிட்டார். நான் கதை எழுதும்போதே அசோக்செல்வனை நினைத்துத்தான் எழுதினேன். இதில் யாரும் நடிப்பைப் பிழிந்தெல்லாம் தரவில்லை. இயல்பான நகைச்சுவை நடிப்பை பெட்டராகக் கொண்டு வந்தோம்.”

நான்குமணி நேரத்தில் நடந்தது என்ன?

“பாடல்கள், இசை பற்றிச் சொல்லுங்க”

“ ‘போபோ’ சசிதான் மியூசிக். தேவாவின் தம்பிகள் சபேஷ் - முரளின்னு இசை யமைப்பாளர்கள் இருந்தாங்க இல்ல... அதில் முரளியோட பையன். குளிர் 100 டிகிரி, அட்டு படத்திற்கெல்லாம் பிரமாதமாக பாட்டிலும் இசையிலும் திறமை காட்டியிருந்தார். ‘ஜீவி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரவீன்தான் கேமராமேன். படத்தைச் சிறப்பா கொண்டு வந்திருக்கிறார். ஒரு ஹாஸ்டல் மட்டும்தான். அதிலேயே வித்தியாசமாகப் படம்பிடிப்பது கஷ்டமான வேலை. தயாரிப்பில் ரவீந்திரன் சார் பெரிய சுதந்திரம் கொடுத் தார். நாங்கள் எல்லோருமே ஒருத்தரை ஒருத்தர் ரசிச்சுக்கிட்டு ‘வெரிகுட்’னு சொல்லிக்கிட்டு இருக்கோம். அதை மக்களும் சொல்லணும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு.”

நிறைவேறட்டும்!