Published:Updated:

“இது உணர்வுகளின் தொகுப்பு!”

வெற்றி துரைசாமி
பிரீமியம் ஸ்டோரி
வெற்றி துரைசாமி

என்.ஆர்.ரகுநந்தன்தான் மியூசிக். படத்தைப் பார்த்துவிட்டே நான்கு பாடல்களை எழுதித் தந்தார் வைரமுத்து.

“இது உணர்வுகளின் தொகுப்பு!”

என்.ஆர்.ரகுநந்தன்தான் மியூசிக். படத்தைப் பார்த்துவிட்டே நான்கு பாடல்களை எழுதித் தந்தார் வைரமுத்து.

Published:Updated:
வெற்றி துரைசாமி
பிரீமியம் ஸ்டோரி
வெற்றி துரைசாமி
‘`இப்போ நான் சென்னையில் இருக்கலாம். ஆனால் கிராமத்தில், வாழ்க்கையின் அடித்தட்டு மக்களோடு ரத்தமும் சதையுமாகக் கலந்து திரிஞ்சிருக்கேன். ஏழை மக்களின் ஒரு வேளை சாப்பாட்டுல இருக்கிற அருமை பெருமையெல்லாம் பக்கத்தில் நடந்து பார்த்திருக்கேன்.

இது கொங்குப் பகுதி பக்கமாக நடக்கிற கதை. பொள்ளாச்சி மாதிரி செழிப்பான இடம் இல்லை. வறண்ட பகுதியில் நம்ம மனசுக்கு நெருக்கமா நடக்கிற விஷயம். என் உணர்வையும் மனசையும் எரிபொருளா எரிச்சுக் கண்டுபிடிச்சதுதான் ‘என்றாவது ஒருநாள்’ என்ற இந்தப் படம். தியேட்டரில் திரையிடுவதற்கு முன்பே நிறைய திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டது’’ உற்சாகத்துடன் பேசுகிறார் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி.

“இது உணர்வுகளின் தொகுப்பு!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இது உணர்வுகளின் தொகுப்பு!”

``எப்படியான கதை?’’

‘‘வறுமையில் வாழ்ந்தாலும் வாழ்க்கையில் பிடிப்பை இழக்காத தம்பதிகள். குழந்தைகள் மாதிரி வளர்க்கிற இரண்டு மாடுகள். வாழ்க்கை கொடுக்கிற நெருக்கடியில் அந்த மாடுகளையும் விற்க வேண்டிய சூழல் வருது. டவுனில் நம்ம பாசம் அதிகபட்சம் நாய், பூனை மேல மட்டும்தான் இருக்கும். ஆனால் கிராமத்தில் மாடுகளுக்கு இருக்கிற நேசிப்பு எல்லாம் வேற ரகம். கூடி வாழ்றதும், அரிவாளைத் தூக்குறதும் அப்புறம் கண்ணீர்விட்டுக் கட்டிப்பிடிச்சு அழறதும்தானே கிராமக்கலாசாரம்! மனித உறவுகளுக்குக் கொஞ்சமும் குறைஞ்சதில்லை, இங்கே பிராணிகளின் மேலான பாசம். இரண்டு பேருக்கும் நடுவில பேச்சுதான் இல்லையே தவிர அத்தனை உணர்ச்சிகளும் இரண்டு தரப்புக்கும் புரியும். ரசனையும் தவிப்புமா இருக்கும் இந்தப் படம்.’’

“இது உணர்வுகளின் தொகுப்பு!”
“இது உணர்வுகளின் தொகுப்பு!”

``சென்டிமென்டா இருக்குமோ..?’’

‘‘அளவா கொடுத்தா சென்டிமென்ட் மாதிரி மனிதர்களுக்கு இஷ்டமானது எதுவும் கிடையாது. யாரும் இந்த உறவுகளிலிருந்து தப்பி வந்தவங்க கிடையாது. ‘சென்டிமென்டா’ன்னு சிரிக்கிறவங்களுக்கும் சென்டிமென்ட் இருக்கு. எனக்கு என்னன்னா, இன்னும் பாச நேசங்களையும், பெண்ணின் மாண்புகளையும் சொல்லித் தீரலைன்னு தோணுது.’’

“இது உணர்வுகளின் தொகுப்பு!”
வெற்றி துரைசாமி
வெற்றி துரைசாமி

``விதார்த், ரம்யா நம்பீசன் பற்றிச் சொல்லுங்க...’’

‘‘படம் பார்க்கிற யாரும் கேமரா அருமை, விதார்த், ரம்யா நல்லா நடிக்கிறாங்க என்று தனித்தனியாகச் சொல்ல மாட்டாங்க. படம் சூப்பர்னு மொத்தமா சேர்த்துச் சொல்ற மாதிரி எல்லார் உழைப்பும் சேர்ந்து வந்திருக்கு.

இந்தப் படத்தின் அடியில் இருக்கும் அமைதி, படம் முழுக்க உங்களைத் தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கும். ரம்யாவை இப்படி ஒரு கிராமத்துப் பொண்ணா நீங்க பார்த்திருக்க முடியாது. என் மனதில் இருந்த சித்திரம் மாதிரியே இருந்தார். என் மானசீக குருநாதர் வெற்றிமாறன் படத்தைப் பார்த்தார். ‘அப்படியே எல்லோருடைய மனதிலும் ஒட்டிக்கிற மாதிரி நிறைய இடங்கள் படத்தில் இருக்கு’ன்னு சொன்னார். எனக்கு அதுதான் முதல் திருப்தி.’’

``இசை எந்த அளவுக்குக் கைகொடுத்தது?’’

“என்.ஆர்.ரகுநந்தன்தான் மியூசிக். படத்தைப் பார்த்துவிட்டே நான்கு பாடல்களை எழுதித் தந்தார் வைரமுத்து. ‘வீடு இல்லாமல் இருப்பதுண்டு மனித ஜாதி, ஆனால் மாடு இல்லாமல் இருப்பதில்லை உழவர் ஜாதி’ன்னு ஒரு பாடல் மனதை உருக்கும். மற்ற மூன்று பாடல்களும் படத்தின் உயிரோட்டமா இருக்கும். ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ‘என்றாவது ஒருநாள்’ நிச்சயம் காட்சிகளின் தொகுப்பு அல்ல; உணர்வுகளின் தொகுப்பு.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism