Published:Updated:

“தெலுங்குப் பாட்டையும் தமிழில்தான் யோசிப்பேன்!”

 தேவி ஸ்ரீபிரசாத்
பிரீமியம் ஸ்டோரி
தேவி ஸ்ரீபிரசாத்

இப்போ ராம் பொத்தனேனியை வெச்சு லிங்குசாமி சார் இயக்குகிற படத்துக்கு நான்தான் இசையமைக்கிறேன்.

“தெலுங்குப் பாட்டையும் தமிழில்தான் யோசிப்பேன்!”

இப்போ ராம் பொத்தனேனியை வெச்சு லிங்குசாமி சார் இயக்குகிற படத்துக்கு நான்தான் இசையமைக்கிறேன்.

Published:Updated:
 தேவி ஸ்ரீபிரசாத்
பிரீமியம் ஸ்டோரி
தேவி ஸ்ரீபிரசாத்
திரடி இசை, அசத்தல் ஆட்டிட்யூட், செம எனர்ஜி... இவை மூன்றும் சேர்ந்ததுதான் தேவி ஸ்ரீ பிரசாத் என்ற பெயர். சிரஞ்சீவி படமென்றாலும் சரி, புதுமுகங்களுடைய படமென்றாலும் சரி... இவருடைய மியூசிக்கல் ட்ரீட்டில் குறையிருக்காது. கைவசம் ஏகப்பட்ட படங்கள் வைத்திருந்தாலும் ஜீ தமிழ் சேனலுக்காக ‘ராக்ஸ்டார்’ என்ற இசை நிகழ்ச்சியின் மூலம் டிவி உலகில் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார். டோலிவுட், கோலிவுட் எனப் பல விஷயங்களை அவருக்கே உரிய எனர்ஜியோடு நம்மிடம் பேசத் தொடங்குகிறார். ‘Everybody Listen... He is on a mission...’
தேவி ஸ்ரீபிரசாத்
தேவி ஸ்ரீபிரசாத்

``டிவி பக்கம் வரணும்னு நினைச்சதுக்கான காரணம் என்ன ?’’

“டிவி இண்டஸ்ட்ரிக்குள்ள வர்ற ஐடியாவே எனக்கு இருந்ததில்லை. தெலுங்கு, தமிழ்னு நிறைய சேனல்கள்ல இருந்து நிறைய முறை கேட்டாங்க. ஏத்துக்காததுக்குக் காரணம், டிவி பக்கம் வந்தால் இதுக்குன்னு தனியா நேரம் ஒதுக்கணும். சமீபமா, சல்மான் கான் சார், சிரஞ்சீவி சார், கமல் சார், நாகர்ஜுனா சார்னு எல்லாப் பெரிய நட்சத்திரங்களும் டிவியிலயும் கலக்கிட்டிருக்காங்க. அதுவும் எனக்கு எனர்ஜி கொடுத்தது. அப்புறம், நிறைய இடங்கள்ல தெருக்கள்ல காசுக்காகப் பாடிக்கிட்டு இருப்பாங்க, இசைக்கருவிகள் வாசிச்சுட்டு இருப்பாங்க. அவ்ளோ சுதி சுத்தமா இருக்கும். அவங்களை எல்லாம் பார்க்கும்போதுதான், நாம எந்த அளவுக்கு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கோம்னு தெரியும். நமக்குக் கிடைச்ச வாய்ப்பை அவங்களுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கணும்னு நினைச்சேன். அப்படியான இசைக்கலைஞர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வர ஐந்தாறு வருடங்களுக்கு முன்னாடி, ஒரு யூ டியூப் சேனல் ஆரம்பிச்சேன். அதுக்கு மகேஷ் பாபு சார், சூர்யா சார்னு நான் வொர்க் பண்ணுன ஹீரோக்கள் எல்லோரும் வீடியோ பைட்ஸ் கொடுத்தாங்க. ஆனா, அடுத்தடுத்து பட வேலைகள் இருந்ததனால தொடர்ந்து அதை பண்ண முடியாமல் போயிடுச்சு. இந்த லாக்டெளன்ல நிறைய யோசிக்க நேரம் கிடைச்சது. அப்போதான், ‘இப்படியொரு விஷயம் பண்ணணும்னு நினைச்சோமே, பண்ணமுடியலையே’ன்னு தோணுச்சு. அந்தச் சமயத்துலதான் ஜீ தமிழ்ல இருந்து வந்தாங்க. ‘ராக்ஸ்டார்’னு ஒரு ஷோ மியூசிக் ஷோ பண்ணப்போறோம். ஏற்கெனவே பாப்புலரான பாடகர்களுக்குள்ள ஒரு போட்டி’ன்னு சொன்னாங்க. அவங்ககிட்ட நான் என்னுடைய ஐடியாவையும் சொன்னேன். அவங்களுக்கும் பிடிச்சிருந்தது. உடனே ஓகே சொல்லிட்டேன். நம்ம ஊர்கள்ல தெருக்கள்ல வாசிச்சுக்கிட்டு பாடல் பாடிக்கிட்டு இருக்கிற மனிதர்கள் நிறைய பேரைப் பார்த்திருக்கோம். அப்படியான கலைஞர்களை லைம்லைட் ரவுண்டுன்னு ஒண்ணு வெச்சு ஒவ்வொரு வாரமும் வெளிக்கொண்டு வர்றோம். அதுதான் இந்த ஷோவுடைய ஹைலைட்டா இருக்கும். இந்த ஒரு விஷயத்துக்காகத்தான் நான் டிவி ஷோக்குள்ள வந்தேன்.”

``தமிழ் சினிமாவில் நிறைய இடைவெளி விழுந்துடுச்சே ?’’

“இப்போ ராம் பொத்தனேனியை வெச்சு லிங்குசாமி சார் இயக்குகிற படத்துக்கு நான்தான் இசையமைக்கிறேன். இது தமிழ் - தெலுங்கு பைலிங்குவல் படம்தான். இந்தப் படத்துல பக்கா தமிழ்ப் பாடலைக் கேட்பீங்க. கதையும் அப்படித்தான் இருக்கும். இன்னொரு சீக்ரெட் சொல்லவா? நான் இசையமைக்கிற பெரும்பாலான தெலுங்குப் பாடல்களை முதல்ல தமிழ்லதான் கம்போஸ் பண்ணுவேன். ‘உப்பென்னா’ படத்துல வர்றா ‘ஜல ஜல ஜல பாதம் நுவ்வு’ங்கிற பாடலை ‘செக்க செக்க செக்க செவந்தது வானம்’னுதான் முதல்ல பாடி கம்போஸ் பண்ணினேன். அந்தப் பட டீமே ‘தமிழ்ல இருக்கிறதே சூப்பரா இருக்கு’ன்னு சொன்னாங்க. ஒரு தெலுங்குப் படத்துக்கே நான் தமிழ்லதான் யோசிக்கிறேன்னா, லிங்குசாமி சார்கூட வொர்க் பண்ணுனா, நிச்சயமா தமிழ்லதான் எல்லாமே. தவிர, சில படங்கள் பேசிட்டிருக்கோம்.”

தேவி ஸ்ரீபிரசாத்
தேவி ஸ்ரீபிரசாத்

``தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழிகளிலும் பாடல்கள் எழுதுறீங்களே?’’

“ `சாமி ஸ்கொயர்’ படத்துக்காக ‘மெட்ரோ ரயிலு’ பாடலுக்கான ட்யூனைக் கொடுத்து டம்மி லிரிக்ஸ் எழுதிக் கொடுத்தேன். ‘நல்லா இருக்கு. நீங்களே எழுதுங்க’ன்னு ஹரி சார் சொல்லிட்டார். அந்தப் பாடலைக் கேட்டுட்டு, பிரபுதேவா மாஸ்டர் போன் பண்ணி ‘யோவ்.. பாட்டு செமயா இருக்குயா’ன்னு பாராட்டினார். அந்தப் பாட்டைத் தெலுங்குலயும் நான்தான் எழுதினேன். ‘புலி’ படத்துக்காக நான் எழுதின புரொமோஷன் பாடல் பிடிச்சுப்போய் விஜய் சார்தான் ‘இதை ஒரு மியூசிக் வீடியோ மாதிரி பண்ணுங்க’ன்னு சொல்லி என்கரேஜ் பண்ணினார். வீட்ல அம்மா, அப்பா எல்லோரும் தெலுங்குங்கிறதனால தெலுங்கு நல்லாத் தெரியும். வளர்ந்தது சென்னையிலங்கிறதனால தமிழும் நல்லாத் தெரியும். ஸ்கூல்ல செகண்ட் லாங்குவேஜ் இந்தி படிச்சேன். அதனால, இந்தியும் தெரியும். மொழி தெரியுறதனாலதான் ஒரு பாடலின் ஃப்ளேவர் குறையாமல் எல்லா மொழிகளிலும் ஹிட் கொடுக்க முடியுது.”

``ஃபிட்டா இருக்கீங்களே... ஹீரோவா எப்போ நடிக்கப் போறீங்க?’’

“ஸ்கூல்ல நான் ஸ்போர்ட்ஸ்ல இருந்தேன். தடகளப் போட்டிகள்ல மாவட்ட அளவு, மாநில அளவு போட்டிகள்ல கலந்து மெடல்களெல்லாம் வாங்கியிருக்கேன். அதனால, எனக்குள்ள ஃபிட்னெஸ் பத்தின கவனம் இருந்துக்கிட்டே இருக்கும். தவிர, நிறைய ஷோக்கள்ல பாடல் பாடிக்கிட்டே பர்ஃபார்ம் பண்ணுவேன். அதுக்கு ஃபிட்னெஸ் அவசியம் தேவை. தாணு சார் என்கிட்ட அடிக்கடி ‘நீ ஓகேன்னு சொல்லுயா. படம் பண்ணலாம்’னு சொல்லுவார். ‘ஐயோ வேண்டாம் சார்’னு சொல்லிடுவேன். இப்போகூட சில கதைகள் வந்தன. எதிர்காலத்துல வாய்ப்பிருந்தால் பார்ப்போம்.”