Published:Updated:

அஜித் ஆச்சர்யப்பட்ட அந்த ஐடியா...

நிகில் முருகன்
பிரீமியம் ஸ்டோரி
நிகில் முருகன்

நான் ரஜினி சாரோட தீவிரமான ரசிகன்.

அஜித் ஆச்சர்யப்பட்ட அந்த ஐடியா...

நான் ரஜினி சாரோட தீவிரமான ரசிகன்.

Published:Updated:
நிகில் முருகன்
பிரீமியம் ஸ்டோரி
நிகில் முருகன்
நிகில் முருகன் என்றாலே கலர்ஃபுல் சட்டையும் கலகலப்பான சிரிப்பும்தான் நினைவுக்கு வரும். பத்திரிகையாளர்கள் மத்தியில் பரிச்சயமான நிகில் முருகன், 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைப்படங்களுக்கும் திரைப்பிரபலங்களுக்கும் மக்கள் தொடர்பாளர். பி.ஆர்.ஓ நிகில் முருகன் இப்போது ‘பவுடர்’ படம் மூலம் நடிகர் அவதாரமெடுக்கிறார்.

``நடிக்க வந்ததற்கான காரணம் என்ன..?’’

“என் குரலுக்காகவும் என்னோட டிரஸ்ஸிங் ஸ்டைலைப் பார்த்தும் நிறைய இயக்குநர்கள் பலமுறை நடிக்கச் சொல்லிக் கேட்டிருக்காங்க. ஆனால், நான் என்னுடைய வேலையை பாதிக்காமல் இருக்கணும்னு பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். மாதவன் சாரோட ‘ஜே ஜே’, ரஜினி சாரோட ‘சிவாஜி’, சேரன் சார் இயக்கத்தில் ‘ஜே.கே எனும் நண்பனின் கதை’ன்னு சில படங்களில் மட்டும் லைட்டா தலையைக் காட்டியிருப்பேன். இப்போதான் ஒரு படத்தில் ஒரு பெரிய கேரக்டரில் நடிச்சிருக்கேன். ‘போடா போடி’ படத்துக்காக நான் வொர்க் பண்ணிட்டிருந்தப்போ என்னைப் பார்த்துட்டு, இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘நானும் ரெளடிதான்’ படத்தில் ஆனந்த்ராஜ் நடிச்சிருந்த கேரக்டருக்காக என்கிட்ட கேட்டார். அந்தச் சமயத்தில் நான் பல படங்களுக்கு பி.ஆர் பண்ணிட்டிருந்ததால, என்னால் நடிக்க முடியலை. லாக்டெளன் நாள்களில் இருந்தப்போதான், இயக்குநர் விஜய்ஸ்ரீ ‘பவுடர்’ படத்தோட கதையை என்கிட்ட சொல்லி ராகவன்கிற போலீஸ் கேரக்டரில் நீங்கதான் நடிக்கணும்னு சொன்னார். ‘என்னால பண்ண முடியும்னு நீங்க நினைக்கிறீங்களா சார்’னு அவர்கிட்ட கேட்டுட்டு, 15 நாள்கள் ரிகர்சல் பண்ணினோம்; 20 நாள்கள் ஷூட் பண்ணினோம். ஷூட்டிங் முழுக்கவே இரவில்தான் நடந்துச்சு. அதனால, என் வேலைக்கு அது எந்தவிதத்திலும் பாதிப்பில்லை.”

`` ‘பவுடர்’ படத்தில் என்ன ஸ்பெஷல்..?’’

“லேட் நைட்ல வேலையை முடிச்சிட்டுப்போற எல்லாருமே போலீஸ் செக்கிங்கைக் கடந்துதான் போவாங்க. அப்படி ஒரு நாள் செக்கிங்கில் இருக்கிற போலீஸ் சந்திக்கிற 4 கேரக்டர்களும் ஒரு க்ரைமும்தான் படத்தோட கதை. எல்லா நடிகர்களுக்கும் ஒரு படத்திலாவது போலீஸ் கேரக்டரில் நடிக்கணும்கிற ஆசை இருக்கும். அது எனக்கு முதல் படத்திலேயே நடக்கும் போது, அதைச் சரியா பண்ணணும்னு நினைச்சேன். அப்படி மெனக்கெட்டுப் பண்ணுன ஒரு விஷயத்தை படத்தோட டீசரில் பார்த்துட்டுப் பலரும் பாராட்டினப்போ ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. குறிப்பா இயக்குநர் பாரதிராஜா சார், ‘உன்னை இந்தக் கோணத்தில் நான் நினைச்சுப் பார்த்ததேயில்ல. ரொம்ப நல்லா நடிச்சிருக்க’ன்னு சொன்னார். பி.சி.ஸ்ரீராம் சாரும், ‘முதல் படத்தின் பயம் கண்ணுல தெரியலை’ன்னு சொன்னதும் மறக்கவே முடியாத பாராட்டுகள்.”

நிகில் முருகன்
நிகில் முருகன்

``உங்களோட பி.ஆர்.ஓ கரியரில் நீங்க செயல்படுத்திய வித்தியாசமான விளம்பர உத்திகள் என்னென்ன?’’

“நான் சினிமாவில் எடிட்டராகணும்னு ஆசைப்பட்டுத்தான் வந்தேன். எடிட்டர் கே.ஆர்.ராமலிங்கம் சார்கிட்ட உதவியாளராக ‘குளிர்கால மேகங்கள்’, ‘மைதிலி என்னை காதலி’ படங்களில் வேலை பார்த்தேன். அதுக்கப்புறம், என்னால எடிட்டிங்கைத் தொடர முடியலை. ஆனால், சினிமாவோடு தொடர்பிலேயே இருக்கணும்னு ஜர்னலிசம் படிச்சேன். அது அப்படியே என்னை மக்கள் தொடர்பாளராக மாத்திடுச்சு. ஒரு படத்தையோ, ஒரு பிரபலத்தையோ விளம்பரப்படுத்துவதற்காக ஒரு விஷயத்தைப் பண்றேன்னா, அது என்னோட ஐடியாவாக மட்டும் இருக்காது. அதில் அந்த இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்னு எல்லாரோட பங்களிப்பும் இருக்கும். சின்னச் சின்ன விஷயங்களாக பிளான் பண்ணி, அதை மக்கள்கிட்ட ரீச் பண்ண வைப்பேன். அஜித் சார் கல்யாணத்துக்கு நான்தான் பி.ஆர் பண்ணினேன். அப்போ அஜித் சார்கிட்ட, ‘சார், ஃபங்ஷனுக்கு வர பிரபலங்கள் யாரும் பெரும்பாலும் சாப்பிட மாட்டாங்க. ஆனால், அவங்களை அழைச்சிட்டு வர டிரைவர்ஸ், அஜித் சாரைப் பார்க்க முடியுமா; கல்யாணச் சாப்பாடு சாப்பிட முடியுமான்னு நினைப்பாங்க. அதனால, ஒவ்வொரு கார் என்ட்ரி ஆகும்போதும், டிரைவருக்குன்னு தனியா சாப்பாடு பார்சல் பண்ணிக் கொடுத்திடலாம் சார்’னு சொன்னேன். அதைக்கேட்டதும், ‘சூப்பர் நிகில். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை; பண்ணுங்க’ன்னு சொன்னார். இதே ஐடியாவை சூர்யா சார் கல்யாணத்துக்கும் பண்ணினோம். நான் பிளான் பண்றது எல்லாமே இந்த மாதிரி குட்டி, குட்டி விஷயங்கள்தான். இந்த ஐடியாக்கள் எல்லாம் அடுத்தகட்டத்துக்குப் போனதுக்கு அந்தந்தப் பிரபலங்கள்தான் காரணம்.”

``உங்களோட கரியரில் ஒரே சமயத்தில் ரஜினி - கமல்னு இரண்டு பெரிய நடிகர்களுக்கு பி.ஆர் பண்ணியிருக்கீங்க; அந்த அனுபவம் எப்படி இருந்தது..?’’

“நான் ரஜினி சாரோட தீவிரமான ரசிகன். அவருக்காக ரசிகர் மன்றம் வெச்சிருந்தேன்; நான் பி.ஆர் பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்புறம் ரஜினி சாரோடு வொர்க் பண்ணும் வாய்ப்பு ‘பாபா’ படம் மூலமா அமைஞ்சது. ‘பாபா’ பட ரிலீஸுக்குப் பிறகு நடந்த சில பிரச்னைகளை நான் கையாண்ட விதம் ரஜினி சாருக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. அதனால, அவரோட மண்டபத்துல ஒரு பெரிய பிரஸ் மீட் ஏற்பாடு செய்தப்போ, ‘நிகிலே அதை முழுக்க ஹேண்டில் பண்ணட்டும்’னு சொல்லியிருக்கார். அவர் என்மேல வெச்ச நம்பிக்கை எனக்குப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துச்சு. கிட்டத்தட்ட 14 வருஷம் கமல் சாரோடு வொர்க் பண்றதுக்கு வாய்ப்பு கிடைச்சது. அந்தக் காலகட்டத்தில் நான் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். கமல் சாரைப் பொறுத்தவரைக்கும் அவர் ஒரு விஷயம் சொல்றார்னா, அந்த விஷயத்தைப் பண்றதுக்குத் தயங்கக்கூடாது. அது நடக்காது; செலவாகும்னு நெகட்டிவா பதில் சொன்னா அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. ரஜினி சார் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி கமல் சார்கிட்டேயும், கமல் சார் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி ரஜினி சார்கிட்டேயும் நான் ஷேர் பண்ணிக்கிட்டதே கிடையாது. அதுதான், என்னை ரொம்ப வருஷங்கள் அவங்களோடு சேர்ந்து பயணிக்க வெச்சது.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism