‘‘படத்தோட ஷூட்டிங் லாக்டெளன் அன்லாக் வெர்ஷன்ல நடந்தது... ஸ்க்ரிப்ட் படிக்கிறது, கதை கேக்குறதுங்கிற வழக்கமான விஷயங்கள் தாண்டி இந்த மாதிரியான நேரத்துல ஷூட்டிங் பண்றதே வேற லெவல் அனுபவமா இருக்கு’’ எனர்ஜி ஊற்றெடுக்கிறது ரைசா வில்சனின் வார்த்தைகளில்.

`` ‘The chase’ - படத்தோட தலைப்பே வித்தியாசமா இருக்கே ?’’

‘‘கதையும் வித்தியாசமாதான் இருக்கும். ‘பிக் பாஸ்’க்கு அப்புறம் நிறைய கதைகள் கேட்டாலும் செலக்ட் பண்ணித்தான் நடிக்கிறேன். அப்படி இந்தக் கதையை இயக்குநர் போன் பண்ணிச் சொல்லும்போதே சவாலா இருந்தது. த்ரில்லர் ஜானர் கொண்ட கதை. எனக்கு எப்போவும் த்ரில்லர், ஹாரர் ஜானர் படங்கள் பிடிக்கும். அதுவும் ஒரு காரணம். படத்துல ஸ்டண்ட் காட்சிகளும் பண்ணியிருக்கேன். எல்லாப் புகழும் ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன் சாருக்கே!’’

``சினிமாவுக்கு வந்த கொஞ்ச நாள்களிலேயே ஹீரோயின் சென்ட்ரிக் படத்தைக் கையில எடுத்துட்டீங்களே?’’

‘‘இந்த மாதிரியான படங்கள் மட்டும்தான் பண்ணணும்னு எந்த இலக்கும் இல்ல. படத்தோட கதையையும், டீமையும் நம்பித்தான் படம் பண்றேன். அந்த வகையில இயக்குநர் கார்த்திக் ராஜு, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உட்பட இந்த டீம் அமைஞ்சதுல நான் ரொம்ப ஹேப்பி.’’

``படத்தோட டீசருக்கு விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தாரே?’’

‘`படக்குழுவோட முடிவு அது. விஜய் சேதுபதி சார் வாய்ஸ் கொடுக்க ஓகே சொல்லிட்டாருன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவர் குரல் எங்க படத்துக்கு இன்னும் பலம் சேர்த்திருக்குன்னு சொல்லலாம்.’’

``அட்வெஞ்சர் படத்துல நடிச்சிருக்கீங்க, நிஜ வாழ்க்கையில சாகசங்கள் எவ்வளவு பிடிக்கும்?’’

‘‘நிஜ வாழ்க்கையைப் பொறுத்த வரைக்கும் அட்வெஞ்சர்ஸ் ட்ரெக்கிங்ல மட்டும் இருந்திருக்கு. இதைத் தாண்டி யார்கூடவும் சண்டையெல்லாம் பண்ணுனதில்ல. ரெண்டு பேர் சண்டை போட்டுட்டிருந்தா அந்த இடத்துலகூட நிக்க மாட்டேன். சண்டையை விட்டு விலகியிருக்குற பொண்ணு நான்.’’

`` ‘பியார் பிரேமா காதல்’ படத்தோட டீம் அப்படியே அடுத்த படம் பண்றாங்க. நீங்க மட்டும் எப்படி மிஸ்ஸானீங்க?’’

‘‘ஆமா, இயக்குநர் இளன்கிட்ட ‘என்னை ஏன் கூப்பிடல’ன்னு சண்டை போட்டேன். ‘இந்தப் படத்துக்கு நீங்க செட்டாக மாட்டீங்க’ன்னு சொன்னார். அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும்னு தோணுச்சு. நாங்க எல்லாருமே நண்பர்கள்தான். அதனால நான் செட்டாவேன்னு தோணியிருந்தா கண்டிப்பா கூப்பிட்டிருப்பார். இன்னும் நிறைய படங்கள் அவரும் ஹரிஷ் கல்யாணும் பண்ணுவாங்க. அந்தப் படங்கள்ல நான் சேர்ந்து வேலை பார்க்கவும் வாய்ப்புகள் நிறைய இருக்கே.’’

``சமீபத்துல மாலத்தீவு போயிருந்த அனுபவம் பற்றி?’’

‘‘லாக்டெளன் காரணமா ஒரு வருஷமா எங்கேயும் போகல. அது அன்லாக் ஆனப்போ மாலத்தீவுக்கு மட்டும்தான் ஃப்ளைட் வசதி இருந்தது. அதனால அங்கே போனேன். கடற்கரையில நிறைய நேரம் செலவழிச்சேன். ஒரு வருஷமா வீட்டுக்குள்ளேயே இருந்ததுக்கு இந்த பிரேக் ரொம்ப தேவைப்பட்டது.’’

``காதலர் தினம் கடந்து போச்சே! ஏதாவது சுவாரஸ்யமான சம்பவங்கள்?’’

‘‘எப்பவாவது நான் சந்திக்குற மனிதர்கள்ல யாராவது ஒருத்தர் மேல க்ரஷ் வரும். அடுத்த நாளே அது காணாமப்போயிடும். அவ்வளவுதான். பெருசா ஒண்ணும் இல்ல.’’

``எந்த மாதிரியான படங்களில் இனி நடிக்கணும்னு ஆசை?’’

‘‘லாக்டெளன் போதுதான் ‘கோலமாவு கோகிலா’ பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. படம் முழுக்க சிரிச்சுக்கிட்டே இருந்தேன். நெல்சன் ரொம்ப நல்லா எடுத்திருந்தார். அந்தமாதிரியான ஜானர்ல அவர் இயக்கத்துல நடிக்க ஆசை.’’