Published:Updated:

`ரொம்ப கஷ்டமாத்தான் இருந்துச்சு; ஆனால்...' - விவாகரத்து குறித்துப் பேசிய சமந்தா!

சமந்தா,நாக சைதன்யா

'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் நாக சைதன்யா உடனான விவாகரத்து குறித்து சமந்தா பேசியிருக்கிறார்.

`ரொம்ப கஷ்டமாத்தான் இருந்துச்சு; ஆனால்...' - விவாகரத்து குறித்துப் பேசிய சமந்தா!

'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் நாக சைதன்யா உடனான விவாகரத்து குறித்து சமந்தா பேசியிருக்கிறார்.

Published:Updated:
சமந்தா,நாக சைதன்யா

பாலிவுட்டில் கரண் ஜோஹரின் பிரபலமான டாக் ஷோ 'காஃபி வித் கரண்' (Koffee with Karan). சினிமா பிரபலங்களின் பர்சனல் பக்கங்கள் தொடர்பான ரகசியங்களை வெளியே கொண்டு வருவதால் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். ஆறு சீசன்களாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி தற்போது 7 -வது சீசனை Disney+ Hotstar-ல் வெளியிட்டு வருகிறது. முதல் எபிசோட்டில் ஆலியா பட், ரன்வீர் சிங், இரண்டாவது எபிசோட்டில் சாரா அலி கான் மற்றும் ஜான்வி கபூர் போன்றோர் கலந்துக்கொண்டனர். இந்நிலையில் மூன்றாவது எபிசோடில் சமந்தாவும், அக்‌ஷய்குமாரும் கலந்துகொள்ளப் போவதாக ப்ரோமோ வெளியானது. அதில் சமந்தா அவரது விவாகரத்து குறித்து பேசப் போவதாக ப்ரோமோவில் காட்டியிருந்தனர். அதன்படி இந்த லேட்டஸ்ட் எபிசோடில் கலந்து கொண்ட சமந்தா, நாக சைதன்யா உடனான விவாகரத்து குறித்து பேசியிருக்கிறார்.

கரண் ஜோஹர்,சமந்தா
கரண் ஜோஹர்,சமந்தா

நாகசைதன்யாவுடனான விவாகரத்து குறித்து பேசிய சமந்தா, "முதலில் இது மிகவும் கடினமாகதான் இருந்தது. ஆனால் இப்போது நன்றாக இருக்கிறது. இயல்பான நிலைக்கு வந்துவிட்டேன். எப்போதும் இல்லாத அளவு வலிமையானவளாக இப்போது இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கரண், "நாக சைதன்யாவிற்கும், உங்களுக்கும் இடையே ஏதாவது கசப்பான உணர்வுகள் இருந்ததா..?" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சமந்தா, "அந்த கடினமான உணர்வுகள் எப்படியானது என்றால், இருவரையும் ஒரே அறையில் அடைத்து வைத்து கூர்மையான பொருட்களை மறைத்து வைத்திருப்பது போன்றது. அந்த உணர்வு இப்போதும் இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் சில சமயங்களில் இணக்கம் வரலாம்.” என்று பேசியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிறகு பலருடைய மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வுக்கு நீங்க தான் காரணம். நீங்கள் வாழ்க்கையை உங்கள் `கபி குஷி கபி கம்’ படத்தைப் போல இருப்பதாகக் காட்டியிருக்கிறீர்கள். ஆனால் உண்மையில் வாழ்க்கை `கேஜிஎஃப்’ போல இருக்கிறது” என ஜாலியாக கரணை சமந்தா கிண்டல் அடித்திருக்கிறார். பின் கரண், இணையத்தில் வைரலாகி வந்த 'ஓ சொல்றியா மாமா' பாடலை பற்றிக் கேட்ட போது, "சமந்தா அப்பாடலுக்கு நான் ஆடியதை பலரும் விமர்சித்தனர்.ஆனால் ஒரு நடிகையாக எல்லா கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டியிருக்கும். அதை தவறாக எடுத்துக்கொள்வதும், சரியாக எடுத்துக்கொள்வதும் அவரவர் கண்ணோட்டத்தை பொறுத்தது" என்று கூறியிருக்கிறார்.