Published:Updated:

வாரிசு: "நான் டிசைன் பண்ண போட்டோ, இப்ப விஜய் சாரோட டிபி!"- இலங்கைத் தமிழர் கஜேந்திரன் உற்சாகம்

விஜய்

”நான் இலங்கைத் தமிழர். விஜய் சார்தான் எனக்குப் பிடிக்கும். வழக்கம்போலதான் அவரு போட்டோவை டிசைன் பண்ணி டேக் பண்ணேன். ஆனா...”- விஜய் ட்விட்டர் டிபியாக வைத்துள்ள போட்டோவை டிசைன் செய்த ரசிகர் கஜேந்திரன் பேட்டி

வாரிசு: "நான் டிசைன் பண்ண போட்டோ, இப்ப விஜய் சாரோட டிபி!"- இலங்கைத் தமிழர் கஜேந்திரன் உற்சாகம்

”நான் இலங்கைத் தமிழர். விஜய் சார்தான் எனக்குப் பிடிக்கும். வழக்கம்போலதான் அவரு போட்டோவை டிசைன் பண்ணி டேக் பண்ணேன். ஆனா...”- விஜய் ட்விட்டர் டிபியாக வைத்துள்ள போட்டோவை டிசைன் செய்த ரசிகர் கஜேந்திரன் பேட்டி

Published:Updated:
விஜய்
’வாரிசு’ பட விஜய்யின் புகைப்படத்தை ரசிகர் ஒருவர் டிசைன் செய்ய, அதை விஜய் தனது ட்விட்டர் டிபியாக (முகப்புப் படம்) வைத்து வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். செம்ம வைரல் ஆகிக்கொண்டிருக்கும் அந்தப் புகைப்படத்திற்கிடையே அதை டிசைன் செய்த இலங்கைத் தமிழரான இளைஞர் கஜேந்திரனிடம் பேசினோம்.
'வாரிசு' படத்தில் விஜய்
'வாரிசு' படத்தில் விஜய்

“நான் இலங்கைத் தமிழர். பிறந்து வளர்ந்ததெல்லாம் யாழ்பாணத்தில்தான். இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படிச்சிட்டிருக்கேன். அதேநேரம், எனக்கு டிசைனிங்கிலும் ஆர்வம் இருக்கு. ஃப்ரீலான்ஸரா ஃபோட்டோ டிசைனிங் பண்ணிக் கொடுக்கிறேன். சின்ன வயசுல இருந்தே நான் விஜய் சார் ஃபேன். அவரோட 'துள்ளாத மனமும் துள்ளும்', 'கில்லி' எல்லாம் எனக்கு ஃபேவரைட்டான படங்கள். டிசைனிங் கத்துக்க ஆரம்பிச்சப்பிறகு ’பிகில்’ படத்துக்குத்தான் நான் முதன்முதலா அவர் போட்டோவை டிசைன் பண்ணேன். தொடர்ந்து, அவரோட நிறைய போட்டோக்களை டிசைன் பண்ணி என்னோட ட்விட்டர் பக்கத்தில் ஷேர் பண்ணுவேன்.

அப்படித்தான், ’வாரிசு’ பட போட்டோவையும் முந்தின நாள் டிசைன் பண்ணினேன். அவரை டேக் செய்து டிவிட்டரில் ஷேர் செய்தேன். இரண்டு நாள்கள் கழித்து திடீர்ன்னு இன்னைக்குப் பார்த்தா, அவரோட ட்விட்டர் பேஜ் டிபியா அந்தப் படத்தை வெச்சிருக்காரு. இதுவரைக்கும் ஃபேன்ஸ் டிசைன் பண்ணின போட்டோவை அவர் வெச்சதே இல்லையாம். நான், டிசைன் பண்ணின போட்டோவை வெச்சதுல சொல்லமுடியாத சந்தோஷம். ஒரே வாழ்த்துகள் மெசேஜா குவிஞ்சுக்கிட்டிருக்கு. நான், இப்போ மகிழ்ச்சியில திக்குமுக்காடிக்கிட்டிருக்கேன். பேச்சே வரமாட்டேங்குது. என்னோட படைப்பு அவரோட பார்வைக்குப் போனதே சந்தோஷம்.

விஜய் ரசிகர் கஜேந்திரன்
விஜய் ரசிகர் கஜேந்திரன்

எல்லா டிசைனருக்கும் நம்மளோட டிசைன் ரீச் ஆகணும்ங்குற கனவு இருக்கும். அந்த கனவு இவ்ளோ சீக்கிரமே அதுவும் இந்தளவுக்கு நிறைவேறும்ன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல. ரொம்ப நன்றி விஜய் சார்! நான் இதை எப்போதும் மறக்கமாட்டேன். லைஃப்ல ஒரே ஒரு ஆசைதான். உங்களை நேர்ல பார்க்கணும்” என்று உணர்ச்சியை வெளிப்படுத்தும் கஜேந்திரனின் டிசைன் வைரல் முதல் முறை அல்ல.

ஏற்கெனவே, இவர் 'விக்ரம்’ பட கமலின் டிசைனை செய்து, ’விக்ரம்’ பட நிகழ்ச்சியில் அந்த டிசைன் வைக்கப்பட்டு பாராட்டுகளைக் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, பல நடிகர்களின் போட்டோக்களை டிசைன் செய்து ஷேர் செய்திருக்கும் இவரின் படைப்புகள், நிறையப் பேரின் பாராட்டுகளையும் பெற்று, கவனத்தை ஈர்த்துவருகிறது.