Published:Updated:

‘கன்னா பின்னா’ - கங்கனா ரனாவத்!

கங்கனா ரனாவத்
பிரீமியம் ஸ்டோரி
கங்கனா ரனாவத்

“நான் தெரிவித்த கருத்துக்கான விளைவுகளை நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்!”

‘கன்னா பின்னா’ - கங்கனா ரனாவத்!

“நான் தெரிவித்த கருத்துக்கான விளைவுகளை நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்!”

Published:Updated:
கங்கனா ரனாவத்
பிரீமியம் ஸ்டோரி
கங்கனா ரனாவத்

2008-ல் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தாலும், ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு 2021-ல் வெளியான ‘தலைவி’ வெப் சீரீஸ் மூலம் பரவலாகப் பேசப்பட்டவர் கங்கனா ரனாவத். தன்னை பக்கா மோடி ஆதரவாளராகக் காட்டிக்கொள்ளும் கங்கனாவுக்கு, மத்திய அரசால் பத்ம, தேசிய விருதுகள்... அவ்வளவு ஏன் ஒய்-ப்ளஸ் பாதுகாப்புகூட வழங்கப்பட்டது. காந்தி தொடங்கி, விவசாயிகள் பிரச்னை வரை வானத்துக்குக் கீழுள்ள அனைத்துக்கும் ‘கன்னா பின்னா’ கருத்து சொல்லிவருகிறார் கங்கனா. ‘தலைவி’யாகவே தன்னை நினைத்துக்கொண்டு, அவர் வீசிய அதிரிபுதிரி ஸ்டேட்மென்ட்டுகள் சில இங்கே...

“சம்ஸ்கிருதத்தை இந்தியாவின் தேசியமொழியாக்க வேண்டும்!”



“தமிழைவிட சம்ஸ்கிருதம் பழைமையானது!”



“1947-ல் கிடைத்தது பிச்சை... உண்மையான சுதந்திரம், மோடி பிரதமரான 2014-ல்தான் கிடைத்தது!”

‘கன்னா பின்னா’ - கங்கனா ரனாவத்!

(‘சுதந்திரம் பிச்சையாகக் கிடைத்தது’ என்று சொன்னதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸார் உள்ளிட்டோர் குரலெழுப்பியபோது...) “1947-ம் ஆண்டு எந்தப் போர் நடைபெற்றது... போரிட்டா சுதந்திரம் வாங்கிக்கொடுத்தீர்கள்...? யாராவது எனக்கு அப்படி ஒன்று நடந்ததாகத் தெரியப்படுத்தினால், எனது பத்ம விருதைத் திருப்பிக்கொடுக்கிறேன். மன்னிப்பும் கேட்கிறேன்!”



“பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சிதான் காங்கிரஸ் ஆட்சி!”



“மேற்கு வங்க மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்!”



“பிரதமர் மோடி தனது சாட்டையைக்கொண்டு மம்தாவை ஒடுக்க வேண்டும்!”



“எனது அலுவலகம் ராமர் கோயிலுக்கு இணையானது!”



“ஒரு அடாவடித்தனத்தை அடக்க, அதைவிட மிகப்பெரிய அடாவடித்தனம் செய்ய வேண்டும்!”



“மோடி ஜி... உங்களுடைய சூப்பர் முகத்தைக் கொஞ்சம் காட்டுங்கள்!”



“பாலிவுட் திரையுலகுக்கும், போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது!”



“பாலிவுட்டில் பாலியல் சுரண்டல்கள் சர்வ சாதாரணம்!”



“காலனி ஆட்சியால் துரதிர்ஷ்டவசமாக ஆங்கிலம் நமது இணைப்பு மொழியாக மாறிவிட்டது!”



“மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மும்பை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்போல இருக்கிறது!”



“வீர சாவர்க்கர், சுபாஷ் சந்திர போஸ், ஜான்சி ராணி ஆகியோரை நான் வணங்குகிறேன். அவர்களைப்போல் என்னையும் சிறையில் அடைக்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டிருக்கிறது. இது எனக்கு நம்பிக்கையைத் தருகிறது. சிறைக்குச் செல்ல நான் காத்திருக்கிறேன். அவர்கள் அடைந்த அதே துன்பங்களை அடைய விரும்புகிறேன். அது எனது வாழ்வுக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுக்கும். ஜெய் ஹிந்த்!”



“திரைப்படங்கள் ஏதும் நடிக்காமல், வேலை இல்லாததால் என்னால் வருமான வரி கட்ட முடியவில்லை!”



“விவசாயிகளின் போராட்டம் குறித்துப் பேசுவதற்காக அமெரிக்க பாப் பாடகி ரெஹானா 8 கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார். அது நான் எனது நண்பர்களுடன் பார்ட்டி நடத்த செலவிடப்படும் தொகை!”



“மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, மூன்றாவது குழந்தையைப் பெறுபவர்களுக்குச் சிறைத் தண்டனையோ, அபராதமோ விதிக்க வேண்டும்!”



“தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று சொல்பவர்கள், அலுவலகங்களுக்கு நடந்து செல்ல வேண்டும்!”



“மக்கள் விரும்பினால் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்!”



“தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் அல்லாமல் தெருக்களில் இருப்போர் சட்டங்களை இயற்றத் தொடங்கிவிட்டால், அது ஜிகாதி தேசம்தான்!”



“தீவிரவாதத்தை வெறுமனே போராட்டம், தர்ணா மூலமாக முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியும் என்று நம்புபவர்கள் இஸ்ரேலிடமிருந்து பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் நாட்டைக் காப்பாற்ற எப்படித் தாக்குதல் நடத்துகிறார்கள் பாருங்கள்!”

‘கன்னா பின்னா’ - கங்கனா ரனாவத்!

“டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல. அவர்கள் இந்தியாவைப் பிளவுபடுத்த முயலும் பயங்கரவாதிகள். இதனால், பாதிக்கப்படக்கூடிய நமது தேசத்தை சீனா கையகப்படுத்தி, அமெரிக்காவைப் போன்று குடியேற்ற நாடாக மாற்றிவிடும்!”



“தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, லத்தி ஒன்றே தீர்வு... சர்வாதிகாரம் மட்டுமே சரியான முடிவு!”



“விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் பஞ்சாப் விவசாயிகள் அனைவரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள்!”



“பகத் சிங்கை, காந்தி ஏன் சாகவிட்டார்...? நேதாஜி ஏன் கொலை செய்யப்பட்டார்...? அவருக்கு காந்திஜி ஏன் ஆதரவு கொடுக்கவில்லை...? வெள்ளையர்கள் ஏன் நாட்டைப் பிரித்தார்கள்...? இவற்றுக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறேன்!”



“நான் தெரிவித்த கருத்துக்கான விளைவுகளை நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்!”



“இந்த கிரிக்கெட் வீரர்கள் ஏன் நாய்களைப்போல் குரைக்கிறார்கள்!”



“நீங்கள் காந்தி ஆதரவாளராக இருக்கலாம். இல்லையேல், நேதாஜியின் ஆதரவாளராக இருக்கலாம். ஆனால், ஒரே நேரத்தில் நீங்கள் இருவரின் ஆதரவாளராகவும் இருக்க முடியாது!



“இல்லத்தரசிகளுக்கு மாதச் சம்பளம் வழங்க வேண்டுமாம்... கணவருடன் செக்ஸ் வைத்துக்கொள்ளவும் `பிரைஸ் டேக்’ வேண்டுமா?”



தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism