Published:Updated:

நடிகர் அஜய்தேவ்கனின் இந்தி தேசிய மொழிப் பற்று; கர்நாடகா மாஜிமுதல்வர் குமாரசாமி, சித்தராமையா கண்டனம்!

அஜய் தேவ்கன்

நடிகர் அஜய் தேவ்கனின் இந்தி தேசிய மொழிப் பற்றுக்கு கர்நாடகா முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா மற்றும் குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் அஜய்தேவ்கனின் இந்தி தேசிய மொழிப் பற்று; கர்நாடகா மாஜிமுதல்வர் குமாரசாமி, சித்தராமையா கண்டனம்!

நடிகர் அஜய் தேவ்கனின் இந்தி தேசிய மொழிப் பற்றுக்கு கர்நாடகா முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா மற்றும் குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Published:Updated:
அஜய் தேவ்கன்

நடிகர் அஜய்தேவ்கன் மற்றும் கன்னட நடிகர் கிச்சா சுதீப் இடையே ட்விட்டரில் வார்த்தைப்போர் ஏற்பட்டது. கிச்சா சுதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தி மொழி தேசிய மொழி கிடையாது எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், இந்தி மொழி தேசிய மொழி இல்லையெனில் ஏன் உங்களது தாய்மொழி படங்களை இந்தியில் மொழி மாற்றம் செய்து வெளியிடுகிறீர்கள். இந்தி மொழி எப்போதும் நமது தாய்மொழி, தேசிய மொழி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த ட்விட்டர் பக்கச் செய்திகளுக்கு பதிலளித்துள்ள கர்நாடகா முன்னாள் முதல்வர் குமார சாமி, இந்தி நமது தேசிய மொழி கிடையாது.

குமாரசாமி டிவிட்டர் பதிவு
குமாரசாமி டிவிட்டர் பதிவு

அதிகம் பேர் பேசிவிட்டால் மட்டும் இந்தி தேசிய மொழியாகிவிடாது. ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே வரி, ஒரே அரசாங்கம் என்ற பாஜகவின் இந்திய தேசியவாதத்தின் ஊதுகுழலாக அஜய்தேவ்கன் பேசியிருக்கிறார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குமாரசாமி தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் இருந்தே மத்தியில் இருந்த இந்தியை அடிப்படையாகக்கொண்ட அரசியல் கட்சிகள் பிராந்திய மொழியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்றும் காங்கிரஸ் தொடங்கி வைத்ததை இப்போது பாஜக தொடர்வதாக தெரிவித்துள்ளார் .

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் இந்தி இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்க செய்தியில், "இந்தி ஒருபோதும் நாட்டின் தேசிய மொழியாக இருக்காது, இருக்கவும் முடியாது. நாட்டின் மொழியியல் பன்முகத்தன்மையை மதிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் இந்த மொழி மோதல்களுக்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் வடக்கு, தெற்கு என்று பார்க்காமல் ஒரே இந்தியா என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism