Published:Updated:

`ஷூட்டிங் ஸ்பாட் பாலியல் அத்துமீறல்கள்... தனிக் குழு அமைப்பது கட்டாயம்!' - கேரள நீதிமன்றம் உத்தரவு

Court (Representational Image) ( Image by miami car accident lawyers from Pixabay )

சினிமா அமைப்புகளை நடிகைகள் மற்றும் கலைஞர்களின் முதலாளிகளாகப் பார்க்க முடியாது. இந்த அமைப்புகளில் பெண்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தால் விசாரணைக் குழு ஏற்படுத்த வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

`ஷூட்டிங் ஸ்பாட் பாலியல் அத்துமீறல்கள்... தனிக் குழு அமைப்பது கட்டாயம்!' - கேரள நீதிமன்றம் உத்தரவு

சினிமா அமைப்புகளை நடிகைகள் மற்றும் கலைஞர்களின் முதலாளிகளாகப் பார்க்க முடியாது. இந்த அமைப்புகளில் பெண்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தால் விசாரணைக் குழு ஏற்படுத்த வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Published:Updated:
Court (Representational Image) ( Image by miami car accident lawyers from Pixabay )

சினிமா துறையில் நடிகைகள் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாகப் புகார்கள் இருந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, 2018-ல் கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகைக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

ஷூட்டிங் ஸ்பாட்
ஷூட்டிங் ஸ்பாட்
மாதிரி படம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதையடுத்து மலையாள சினிமா துறையில் பெண்களின் புகார்களை விசாரித்து தீர்வு காண குழு ஏற்படுத்தப்பட வேண்டும் என நடிகைகள் சங்கமான விமன்ஸ் இன் சினிமா கலெக்டிவ் (wcc) உள்ளிட்ட அமைப்புகள் கேரள ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தன. அந்த மனுவை கேரள ஹைகோர்ட் தலைமை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான டிவிஷன் பென்ச் விசாரணை நடத்தியது. படப்பிடிப்பு தளங்களில் பெண்களின் புகார்களை விசாரித்து தீர்வுகாண துறை ரீதியான குழு ஏற்படுத்த வேண்டும் என கேரளா ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`சினிமாவை பொறுத்தவரை படப்பிடிப்பு நடக்கும் ஷூட்டிங் ஸ்பாட்தான் பணியிடம். மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா, பெப்கா, கேரள பிலிம் சேம்பர் ஆஃப் காமஸ், கேரள பிலிம் புரொடியூசர்ஸ் அசோசியேஷன் போன்ற சினிமா அமைப்புகளை நடிகைகள் மற்றும் கலைஞர்களின் முதலாளிகளாகப் பார்க்க முடியாது. இந்த அமைப்புகளில் பெண்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தால் விசாரணைக் குழு ஏற்படுத்த வேண்டும்' என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு சினிமா துறையில் உள்ள பெண்களுக்கு ஆத்மார்த்த நம்பிக்கையை ஏற்படுத்தவும், அவர்களின் சுயமரியாதையையும், உரிமையையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கும் விதமாகவும் அமையும் எனவும் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Law (Representational Image)
Law (Representational Image)
Photo by Bill Oxford on Unsplash

நடிகைகள் சங்கமான விமன்ஸ் இன் சினிமா கலெக்டிவ் அமைப்பு மனுத்தாக்கல் செய்த சமயத்தில் மாநில மகளிர் ஆணையத்தையும் இதில் சேர்த்திருந்தது. கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது நடிகைகள் சங்கத்தின் கோரிக்கை நியாயமானது என மகளிர் ஆணையம் தெரிவித்திருந்தது. ஹைகோர்ட் தீர்ப்பை மலையாள நடிகைகள் சங்கம் வரவேற்றுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism