Published:Updated:

பிரபலமாக இருந்தால் உங்களை நோக்கி மாலையும் வரும் கற்களும் வரும்- ராஷ்மிகா குறித்து கிச்சா சுதீப்

கிச்சா சுதீப், ராஷ்மிகா மந்தனா
News
கிச்சா சுதீப், ராஷ்மிகா மந்தனா

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் ராஷ்மிகா குறித்து பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபலமாக இருந்தால் உங்களை நோக்கி மாலையும் வரும் கற்களும் வரும்- ராஷ்மிகா குறித்து கிச்சா சுதீப்

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் ராஷ்மிகா குறித்து பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் கருத்து தெரிவித்துள்ளார்.

Published:Updated:
கிச்சா சுதீப், ராஷ்மிகா மந்தனா
News
கிச்சா சுதீப், ராஷ்மிகா மந்தனா

2016ம் ஆண்டு கன்னட திரையுலகில் வெளியான ‘க்ரிக் பார்ட்டி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இப்படத்தைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்  தனது முதல் கன்னட படமான ‘க்ரிக் பார்ட்டி’ குறித்து பேசும்போது, தயாரிப்பாளரை குறிப்பிடாதது சர்ச்சையானது.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

பிறகு ‘காந்தாரா’ படத்தை இன்னும் பார்க்கவில்லை என்று கூறியதும் கன்னட ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது. ராஷ்மிகா கன்னட சினிமாவை புறக்கணிக்கிறார் என்றும் அவர் கன்னடப் படங்களில் நடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறிவந்தனர். இதுபோன்று தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் ரஷ்மிகா குறித்து பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் கருத்து தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட அவரிடம் ராஷ்மிகா குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "உலகை எப்படி மாற்ற முடியும்? நீங்கள் 15-20 ஆண்டுகளுக்கு முன்பு சென்றால் செய்தி சேனல்கள் எங்களை நேர்காணல் செய்திருக்கிறது. அந்த நேரத்தில் அது மிகவும் புதியது.

கிச்சா சுதீப்
கிச்சா சுதீப்

ஆனால் நடிகர் ராஜ்குமார் சாரின் காலத்திற்கு போனால் தூர்தர்ஷன் மற்றும் செய்தித்தாள்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. தற்போது அப்படியல்ல. நிறைய செய்திகள் வெளியாகின்றன. அதைக் கையாள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் எப்போதும் கடந்து செல்ல வேண்டும். மேலும் நீங்கள் ஒரு பிரபலமாக இருந்தால் உங்களை நோக்கி மாலைகள் ஒரு பக்கமும், முட்டைகள், தக்காளிகள் மற்றும் கற்கள் ஒரு பக்கமும் வரும். அதனால் ஒரு பிரபலமாக இதை எப்படி சமாளிப்பது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். எதையுமே நாம் எதிர்கொள்ளத்  தயாராக இருக்கவேண்டும்" என்று கூறியிருக்கிறார்.