Published:Updated:

10-ம் வகுப்பில் தோல்வி; 57 வருடங்கள் கழித்து மீண்டும் தேர்வெழுதிய மலையாள நடிகை!

லீனா ஆண்டனி

நடிகை லீனா ஆண்டனி 73 வயதில் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதியிருக்கிறார்.

10-ம் வகுப்பில் தோல்வி; 57 வருடங்கள் கழித்து மீண்டும் தேர்வெழுதிய மலையாள நடிகை!

நடிகை லீனா ஆண்டனி 73 வயதில் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதியிருக்கிறார்.

Published:Updated:
லீனா ஆண்டனி

பஹத் பாசில் நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் தனது யதார்த்தமான நடிப்பால் பலரது பாராட்டுகளைப் பெற்றவர் நடிகை லீனா ஆண்டனி. ஜோ & ஜோ, மகள் போன்ற படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் லீனா ஆண்டனி தனது 13 வது வயதிலிருந்தே நடித்துவருகிறார். சிறு வயதில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதியபோது அதில் தோல்வியுற்றார். பின், தன் தந்தை இறந்த பிறகு குடும்பத்தை வழிநடத்த வேண்டும் என்ற காரணத்திற்காக பள்ளிப் படிப்பை அவரால் தொடர முடியவில்லை.

லீனா ஆண்டனி
லீனா ஆண்டனி

இதனால் உயர்நிலைப் பள்ளியை முடிக்காத லீனா ஆண்டனி 57 ஆண்டுகள் கழித்து தனது 73 வது வயதில் 10-வது வகுப்பு தேர்வை எழுதியிருக்கிறார். இதுகுறித்து பேசிய லீனா ஆண்டனி, ''நான் சினிமாவில் வசனங்களை மனப்பாடம் செய்து பேசுவேன். அது பத்தாவது வகுப்பு பாடங்களையும் மனப்பாடம் செய்து தேர்வை எழுத எனக்கு உதவியாக இருந்தது" என்று கூறியிருக்கிறார். இவரது கணவர் ஆண்டனியும், நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடிப்பவர். இவர்கள் இருவரும் சேர்ந்து மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.