Election bannerElection banner
Published:Updated:

"இன்னும் எவ்வளவுதான் வட்டி கட்டமுடியும்?" - 'மாஸ்டர்' விநியோகஸ்தர் புலம்பல் பின்னணி!

விஜய்
விஜய்

விஜய் மீதான நம்பிக்கையில், 'மாஸ்டர்' படத்தையும் அப்படித்தான் பலரும் பல கோடி ரூபாய் கொடுத்துப் பெற்றோம்.

பல்வேறு நெருக்கடிகளை 'மாஸ்டர்' சந்தித்துக்கொண்டிருக்கும்போதும், அட்வான்ஸ் கொடுத்த விநியோகஸ்தர்கள் நடிகர் விஜய் மீதான நம்பிக்கையில் மனம் தளராமல் இருந்தனர். ஆனால், அவர்களின் நம்பிக்கையில் இடி விழுந்ததுபோல வந்தது கொரோனா தொற்று. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாக வேண்டிய 'மாஸ்டர்' படமும் இதில் சிக்கியது.

'பெயர் வெளியிட வேண்டாம்' என்கிற கோரிக்கையுடன் பேசிய 'மாஸ்டர்' பட விநியோகஸ்தர் ஒருவர், "தமிழ்த் திரையுலகில் ரஜினி, அஜித், விஜய்க்குத்தான் மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கிறது. போட்ட பணத்தை ஒரே வாரத்தில் எடுத்துவிடலாம்.

'மாஸ்டர்' படத்தில் ஸ்டார் பட்டாளங்களும் இணைந்துள்ளதால், படத்தை மினிமம் கேரன்டியில் வாங்கினோம் (படத்தின் லாபம், நஷ்டம் இரண்டுமே விநியோகஸ்தரைச் சார்ந்தவை). விஜய் மீதான நம்பிக்கையில், 'மாஸ்டர்' படத்தையும் அப்படித்தான் பலரும் பல கோடி ரூபாய் கொடுத்துப் பெற்றோம்.

விஜய்
விஜய்

வட்டிக்கு வாங்கித்தான் அந்தப் பணத்தைக் கொடுத்துள்ளோம். பிப்ரவரி மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரை ஆறு மாதங்களுக்கு எவ்வளவு வட்டி வந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

இந்தச் சூழலில், 'படத்தை மினிமம் கேரன்டி முறையில் வெளியிட முடியாது' என எங்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தபோது, டிஸ்ட்ரிபியூஷன் (லாபம், நஷ்டம் இரண்டுமே தயாரிப்பாளரைச் சார்ந்தவை) முறையில் படத்தை வெளியிட, தயாரிப்பாளர் தரப்பு முன்வந்துள்ளது. ஆனாலும், வட்டிதான் எங்களுக்குப் பிரச்னை. இன்னும் எவ்வளவு நாள்களுக்கு இப்படியே வட்டி கட்டிக்கொண்டிருக்க முடியும்?

இந்த ஆண்டு டிசம்பருக்கு முன்னதாக தியேட்டர்களைத் திறக்கும் சூழல் இல்லை. அப்படியே திறந்தாலும், கொரோனா அச்சத்தால் பொதுமக்கள் தியேட்டருக்கு வருவது சந்தேகம்தான். இது போன்ற சிக்கல்களால்தான் நாங்கள் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்கிறோம்.

படத்துக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் பிசினஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அது இனி சாத்தியமில்லை. 'குறைந்தபட்சம் ஓ.டி.டி முறையிலாவது படத்தை ரிலீஸ் செய்து பணத்தை திருப்பிக் கொடுங்கள்' என்றும் கேட்டுப் பார்த்துவிட்டோம்.

'நம்பிக்கையோடு இருங்கள்' என்று மட்டும் 'மாஸ்டர்' தயாரிப்பாளர்களிடம் இருந்து பதில் வருகிறது. நடிகர் விஜய் எங்களை நேரில் அழைத்துப் பேச வேண்டும் என்று விரும்புகிறோம்" என்றார்.

- விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 'மாஸ்டர்' படம் பல சர்ச்சைகளைச் சந்தித்துவருகிறது.

படப்பிடிப்பின்போதே வருமானவரித்துறை விசாரணை, சோதனை என அடுத்தடுத்த ஆசிட் டெஸ்ட்டுகளைச் சந்தித்த 'மாஸ்டர்', தற்போது விநியோகஸ்தர்களின் நெருக்கடிக்கும் உள்ளாகியிருப்பதாகக் கோடம்பாக்கத்தில் பரவும் தகவல் பரபரப்பைப் பற்றவைத்துள்ளது.

இதன் பின்னணியை முழுமையாக அலசும் ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க இங்கே க்ளிக் செய்க... > 230 கோடி பிசினஸ்? - மாஸ்டர் 'வார்'! - மௌனம் கலைப்பாரா விஜய்? https://bit.ly/30qu111

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு